(Reading time: 26 - 51 minutes)

சார் அவன் தப்பிச்சு போயிட்டான்னா?...”

அத நான் பார்த்துக்கறேண்ணாநீங்க இதுநாள் வரை அவனை பத்திரமா பார்த்துகிட்டதுக்கு ரொம்ப நன்றிண்ணா…”

சார்அது என் டியூட்டி சார்….”

டியூட்டியாவே இருந்தாலும் ராத்திரியெல்லாம் கண் முழிச்சு அந்த நாய்க்கு காவல் இருந்தீங்களே, அது ரொம்ப பெரிசு…” என மனம் திறந்து அவன் பாராட்ட, மறுபக்கம் இருந்த அந்த கந்தசாமியின் முகத்தில் ஒரு நிறைவான சந்தோஷம்

ஆயிரம் தான் விழுந்து விழுந்து வேலை பார்த்தாலும், அந்த வேலைக்குண்டான பாராட்டுக்கு, அடுத்தவர் கொடுக்கும் கௌவரவத்துக்கு ஈடு இணை வேறெதுவுமில்லைஅதை தான் அந்த கந்தசாமிக்கு கொடுத்தான் ஜெய்

அவரிடம் பேசிவிட்டு, திரும்பிய ஜெய்யிடம், “என்னடா ஜெய்?... எதுக்கு அவனுக்கு ப்ரொடக்ஷன் போட வேண்டாம்னு சொன்ன?... அவனை இன்னைக்கே ஜெயிலுக்கு ஷிஃப்ட் பண்ண போறோமா அப்போ?...”

அதெல்லாம் இல்லடா…” என்றவன், தனது காரில் ஏறி அமர, இஷானும் பேசாமல் அவனுடன் ஏறி அமர்ந்தான்

மருத்துவமனையில், “குமார்இப்போ நீங்க கம்ப்ளீட்டா குணமாகிட்டீங்கஇனி உங்களுக்கு ஒரு ப்ராப்ளமும் இல்லை…” என மருத்துவர் சொல்லிமுடிக்கையில்,

ஆமா டாக்டர்இனி எந்த ப்ராப்ளமும் இல்லை…” என்றபடி நுழைந்தான் ஜெய்அவன் பின்னாடியே இஷானும் வர, இரண்டு பேரையும் பார்த்து முறைத்தான் குமார்

ஓகேஜெய்நாளைக்கே நீங்க இவரை கூட்டிட்டு போகலாம்…” என சொல்லிவிட்டு புன்னகையுடன் சென்ற மருத்துவரிடம் பதிலுக்கு இதமாக சரி என்பது போல் தலையாட்டியவன்,

என்ன குமார்ஹாஸ்பிட்டலில் வசதி எல்லாம் நல்லா இருந்துச்சா?... எல்லாம் இன்னைக்கு ஒருநாள் தான்அனுபவிச்சிக்கோஏன்னா நாளையில இருந்து அனுபவிக்க முடியாது பாரு…” என சொல்ல, குமார் எதுவும் பேசவில்லை

டேய்கழுத்தைப் பிடிச்சு இழுத்துட்டு போவியா அதை விட்டுட்டு இவன் எல்லாம் ஒரு ஆளுன்னு இவங்கிட்ட போய் பேசிட்டிருக்குற…” என்ற இஷான் கோபமாக குமாரை நோக்கி இரண்டடி எடுத்து வைக்க, ஜெய் அவனை தடுத்தான்

சுதந்திரத்தை இன்னைக்கு ஒருநாள் நல்லாவே அனுபவிச்சிக்கோ…” என ஜெய் சொல்ல, குமார் கண்கள் இடுங்க அவனைப் பார்த்தான்

என்னடா என்னை ஜெயிலுக்குள்ள தள்ளிடுவியா நீ?...”

ஆங்காரத்தோடு கேட்ட குமாரைப் பார்த்து சிரித்தான் ஜெய்

அது உனக்கு புரிய இவ்வளவு நேரமாச்சா?...” என்றவன் மேலும் சிரிக்க,

டேய்…. என்னடா உயிர் பிழைச்சிட்டேன்ற திமிருல சிரிக்குறியா?...” எனக் கத்தினான் குமார்

உயிர் பிச்சை நான் போடப்போய்த்தான் நீ என் முன்னாடி நின்னு பேசிட்டிருக்குறஉன் நண்பனும் இப்போ எங்கேயோ மறைஞ்சுன்னாலும் உயிரோட இருக்க முடியுது…” என்ற ஜெய்யின் வார்த்தைகளில் அழுத்தம் அதிகரித்ததை கவனித்தான் இஷான்

என் நண்பன் இருக்குறவரை உன்னால என்னை எதுவும் செய்யமுடியாதுடாதெரிஞ்சிருக்குமே அவனோட தைரியம் உனக்கு?... ஏன்னா தினமும் நியாபகப்படுத்துற மாதிரி தான நெஞ்சுல இறக்கியிருக்குறான் வாளை…” என பேசிய குமார் இப்போது ஜெய்யைப் பார்த்து சிரிக்க,

உண்மைதான்நியாபகம் வச்சிப்பேன் தான்அவனை மறக்க மாட்டேன்னு சொல்லிவை உன் நண்பங்கிட்டகண்டிப்பா உன்னைவிட அவனை சிறப்பா கவனிப்பேன்அதுலயும் எந்த மாற்றமுமில்லை…” என்ற ஜெய் குமாரை நெருங்க, அவன் பின்னே நகர்ந்தான்

இப்போதான் சிரிச்சஅதுக்குள்ள இப்படி பம்முறியேநீதான சொன்ன உன் நண்பன் இருக்குறவரை என்னால உன்னை எதுவும் செய்யமுடியாதுன்னுஅப்புறம் எதுக்கு பின்னாடி போற?.. ஹாஹா அவ்வளவுதானா உன் நம்பிக்கை எல்லாம்?...” என்ற ஜெய் அங்கிருந்த சேரில் அமர்ந்து கால் மேல் கால் போட்டு சிரிக்க, குமார் அவனை உறுத்துப் பார்த்தான்

சரி குமார்நீ ரெஸ்ட் எடுஎல்லாமே இந்த ஒருநாள் தானஏன்னா நாளைய விடியல் உனக்கு கண்டிப்பா இங்க இல்ல….” என்ற ஜெய் இஷானிடம் போகலாம் என்றபடி கண்காட்ட,

பார்ப்போம்டா அதையும்…” என குமாரும் சவால்விட, பதிலுக்கு புன்னகைத்தபடியே சென்றான் ஜெய்

என்னடா ஜெய்அவன் பாட்டுக்கு பேசிட்டிருக்கான்பிடிச்சு நாலு தட்டு தட்டுவியா அதை விட்டுட்டு அவனை பேசவிட்டு வேடிக்கைப் பார்த்துட்டிருக்குற…”

விடுடாஇன்னைக்கு ஒருநாள் தானபேசினா பேசிட்டு போகட்டும்விடு…”

அதுதான் எதுக்கு இந்த ஒருநாள்?... இந்த ஒருநாள்ல என்ன ஆகிடப்போகுதுஇன்னைக்கே அவனை பிடிச்சு ஜெய்யில்ல போட்டுறலாமேஎதுக்காகடா இந்த ஒருநாள் அவகாசம்?...”

கேள்வி கேட்ட இஷானை அமைதியாகப் பார்த்தவன்,

உனக்கு அது புரிய இன்னும் கொஞ்ச மணி நேரம் காத்திருக்கணும் நீ…” என்றவன் இஷானை அழைத்துக்கொண்டு சென்றுவிட, குமார் யோசனையில் ஆழ்ந்தான்

இரவு பதினொரு மணி அளவில், “குமார்நான் வந்துட்டேண்டா….” என்றபடி நுழைந்தவனை கட்டிக்கொண்டான் குமார்

என்னடா இப்போ உன் பயம் போயிடுச்சா?... நானே வந்துட்டேன்….” என கேட்டவனைஆம்…” என்பது போல் பார்த்தான் குமார்

சரிடாவாபோகலாம்…” என குமாரை அழைத்துக்கொண்டு செல்ல இருந்தவன் வாசலை அடைந்த போது, மார்பின் குறுக்கே கைகளை கட்டியபடி நின்றிருந்தான் ஜெய்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.