(Reading time: 24 - 47 minutes)

தற்குள் அவன் பட்டு வேஷ்டி சட்டையிலிருந்து மாறி ஒரு செமி கேஷுவல் வேரில் ஹாஸ்பிட்டல் போகவென வந்து நின்றான்…..இவளோ அவனை சட்டை செய்யாமல் ராகா எண்ணை அழைத்தாள்….. ராகா எப்படி இவனிடம் இவளை தனியாக விட்டுப் போனாள் என புரியவில்லை…..ஆனால் இப்போது இவளுக்கு உதவக் கூடிய நபரும் வேறு யாரும் இல்லை….. ஆக அவளை  தொடர்புகொள்ள முயன்றாள்…… அது பிஸியாக இருக்க……

ஆனால் அடுத்து இவளுக்கு அழைப்பு வருகிறது சிற்பி எண்ணிலிருந்து…. “சாரி ப்ரியா, எழுந்துட்டீங்களா….” அவன் ஆரம்பித்த விதத்திலேயே விருப்பமுடனெல்லாம் அவர்கள் இவளை இங்குவிட்டுப்போகவில்லை என புரிய…..அங்க என்ன ப்ரச்சனையோ என ஓடுகிறது இவள் மனது…

“ ராகா அம்மாக்கு உடம்பு முடியலையாம்….ஹாஸ்பிட்டலைஸ்டுன்னு அவ தங்கை வீணா கால் பண்ணா…… அங்கதான் பேசிட்டு இருக்கா ராகா…..உங்களுக்கே தெரியுமில்லையா……வீணா ஸ்கூல் கோயிங்க் கேர்ள்….தனியா ஆன்டிய பார்த்துக்க மாட்டா……அதான் ராகா கிளம்புறா….அவள கோயம்பேடுல ட்ராப் பண்ண வந்துருக்கேன்…… அவ ரொம்ப பயந்து போய் இருக்கா…. பஸ் கிளம்பவும் நான் வளசரவாக்கம் வரனும்னா வர்றேன்…..ராகா வீட்டு கீய உங்க பேக்லதான் வச்சுட்டு வந்தோம்…..நீங்க அங்க போறதுன்னாலும் போயிடுங்க…..” சிற்பி சற்று தர்ம சங்கடமான குரலிலேயே இதை சொன்னான்…..

ப்ரியாவுக்கு அவர்கள் நிலமை புரியாமல் இல்லை…..கூடவே தான் அவர்களை அளவுக்கு மீறி தொந்தரவு செய்வது போன்றும் ஒரு உணர்வு….. “இல்ல நான் பார்த்துப்பேன்…..நீங்க ராகாவ பார்த்துக்கோங்க…..அவ ஃப்ரீயானதும் நான் பேசுறேன் அவட்ட….” இப்படி சொல்லித்தான் பேச்சை முடிக்க முடிந்தது இவளால்….

சொல்லிவிட்டாளே தவிர இவள் என்னதை பர்த்துக் கொள்ளப் போகிறாளாம்…?? அடுத்து என்ன?? இவள் யோசிக்க முடியாமல் சோர்ந்த முகமாக நிமிர்ந்து பார்க்கிறாள்….. எதிரில் ஒரு அழுத்த முகத்துடன் நின்றிருந்தான் விவன்.

“என்ன ஹாஸ்பிட்டல் போகாம அப்டியே வீட்டுக்கு போய்டலாம்னு பார்க்கிறியோ…..? என்னைக்குனாலும் உண்மைய ஃபேஸ் செய்துதான ஆகனும்….அதை சீக்கிரம் கவனிக்கிறது புத்திசாலித்தனம்….” அவன் அட்வைஸ் போல் ஆஃப்ஷனாக மட்டுமாக அதை சொல்லவில்லை. கட்டாயப் படுத்தும் ஒரு கம்பெல்ஷன் நெடியும் அதில் கலந்திருந்தது….

“ஏன் அப்பத்தான் அபார்ஷன் செய்ய வசதியா இருக்குமோ….?” அவன் மேல் வந்த கோபத்தில், ஆட்கொள்ளும் அடிசுருட்டும் சோர்வில், எடுத்தெறிந்து பேச வேண்டும் என்ற ஒரு நினைவில்தான் அவள் இதை சொன்னதே…..ஆனால் சொல்ல ஆரம்பிக்கவுமே அவள் அடிமனம் வரை அவ்வார்த்தை தாக்கிய விதத்தில்

 அவசரமாக அரணாக தன் வயிற்றை பிடித்துக் கொண்டவள் ”ஒரு உயிரை கொன்னு என்னை காப்பாத்திக்கிற அளவுக்கு கோழைத்தனமும் சுயநலமும் எனக்கு ஒரு நாளும் வராது….” என பதறி பின்வாங்கி…..

 “ என் உயிர் போனாலும் நான் அதுக்கு ஒருகாலமும் சம்மதிக்க மாட்டேன் விவன்……” தின்னாமல் விடமாட்டேன் என பற்றி எரியும் தீயின் தீர்க்கமும், அலை அலையாய் அலையும் அலை கடலின் அலைப்புறலுமாய் அறிவித்தபடி பின்னிருந்த கட்டிலில் அது இருப்பதை அறியாமல் இடித்து அவள் தடுமாறினாள்.….

அதைக் கண்டு அனிச்சை செயலாய் ஒரு எட்டு எடுத்து வைத்த விவன்….அடுத்து அசையாமல் நின்றபடி வைத்தவிழி வாங்காமல் அவளையே பார்த்திருந்தான். அத்தனை கண்டனம் அவன் கண்களில்…

மெல்ல சுதாரித்து தன்னை நிலைபடுத்திக் கொண்டாள் இவள்…..’அபார்ஷன் செய்ய சொல்றதுக்கு இவன் எதுக்கு இதை தன் குழந்தைன்னு அக்செப்ட் செய்துக்கனும்….இப்படி ஒரு மேரேஜ் ட்ராமா வேற’ மெல்லமாய் இவளுக்கு உறைக்கிறது….

அதே நேரம்…”அது என் குழந்தைன்னு எதுக்காக சொன்னேன் நான்…. இதுக்காகவா?” என இவள் உணர்ந்ததையே கேள்வியாக்கினான் அவன்….

“அப்ப குழந்தைய வச்சு என்ன பிடிச்சுடலாம்னு தோணிட்டு என்ன….அதுக்குத்தான் இதெல்லாமா…..எனக்கு தெரியாம என்ன என்னடா செய்த நீ….?” அது இப்போது இவளுக்கு இப்படியாய் புரிய….வெடித்து வரும் வெள்ளமாய் ஒரு  கதறல்….. “ எனக்கு மயக்க மருந்து எதுவும் கொடுத்து இப்டி…..” அதை அவள் வெளியிட்ட விதத்தில் அவள் இதழ் இடப்பக்கமாய் இழுத்துப் போக…..மூச்சுவிட முடியாமல் முழு நாசியும் காந்துகிறது…

அவ்வளவுதான் புரிகிறது அவளுக்கு…அடுத்துமாய் மயங்கப் போகிறேனோ….’ அவள் எண்ணம் அப்படி ஓட

“ இங்க பார் டெலிவரி ஆனதும் குழந்தைய என்ட்ட கொடுத்துட்டு நீ  போய்டு……” அதற்குள் அடித்து உடைப்பது போல் அப்படி ஒரு வகையில் ஆனால் சத்தமின்றி சர்வாதிகாரமாய் வருகிறது அவனிடமிருந்து பதில்…..

அப்படியே நின்று போனாள் இவள்…..அவன் சொன்ன விதத்தில் அது இவளுள் உண்டு செய்த ஓராயிரம் ரிக்ட்டர் அதிர்வில் அவள் அழுகை அதாக நிற்கிறது. எதுவும் புரியாமல் இவள் சிலையாய் ஸ்தம்பித்து நிற்க

“வேணும்னா இப்பவே டெலிவரிக்கு அப்றம் உள்ள ஒரு டேட் போட்டு மியூசிவல் டிவோர்ஸ் சைன் செய்து கொடுத்துடுறேன்….குழந்தை என் கூடதான் இருக்கும்னும் எழுதிடுவோம்…..” இறங்கிய இளஞ்சிங்க உறுமலாய் இது வெளிப்பட,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.