(Reading time: 24 - 47 minutes)

டுத்து முழு வீச்சுக்கு போனது அவன் கோபமும் அதன் மீதான அவன் போர் அட்டாக்கும்….”எந்த காரணத்தைக் கொண்டும் உன் இஷ்டம் இல்லாம என் விரல் நகம் கூட உன் மேல படாது….” பற்களை கடித்து தாடை இறுக….குரல் உயர்ந்துவிடக் கூடாதென அத்தனை முயற்சி எடுத்து அதை அடக்க பாடுபட்டபடி……சீறி சீறி எழும் சீரற்ற சுவாசத்துடன் அவன் சொல்ல…..

சொன்னவனை மலைத்துப் போய் பார்த்து நின்றாள் மங்கை.

“சே….கல்யாணத்துக்கு கேட்டேன் உன்ன நான்……. அத எவ்வளவு அழகா புரிஞ்சு வச்சுருக்க நீ….”  கண்கள் மூடி…. கைகளை இறுக மூடி…தன் மனதின் கோபத்தையும் மூட முயன்று கொண்டிருந்தான் அவன்.

அவளது அத்தனை புலனையும் ஆட்கொண்ட பார்வையுடன் அவனையே பார்த்தபடி இவள்….

ஒருவாறு சாந்திக்குள் அவன் வர “கன்சீவா இருக்றவங்கட்ட கன்னா பின்னானு கண்டதையும் பேசக் கூடாதுன்னு  சொல்லுவாங்க…..இங்க ஒழுங்கானதுதான் ஒன்னு  கூட பேச வழியில்லை….”  முனங்கலாய் சலித்துக் கொண்டவன்

“இப்ப ஒழுங்கா ஹாஸ்பிட்டலுக்கு கிளம்பு…..” முடிவாய் சொல்லிவிட்டு அறையைவிட்டு வெளியேறினான்.

அடுத்து இவளுமே பேசவில்லை…… இவனை என்னதாய் எடுத்துக் கொள்ள என்றோ எவ்வளவு நம்ப என்றோ தெரியவில்லை…. ஆனாலும் அடிமனதிலிருந்து ஒரு அடையாளமற்ற அரை ஸ்பூன் நிம்மதி….

‘முதல்ல ஹாஸ்பிட்டல் போய் உண்மையான சிச்சுவேஷன் என்னன்னு தெரிஞ்சுக்கலாம்….’ கிளம்பிவிட்டாள். அவளுக்கு தெரிந்த ஆர் ஆர் ஹாஸ்பிட்டலுக்குத்தான் போக சொன்னாள்…...விவனோட இன்ஃப்ளூயன்ஸ் இல்லாத இடமா இருக்கனும் என்பது நோக்கம்….

அடுத்த அரை மணி நேரத்தில் அவள் சொன்ன ஹாஸ்பிட்டல் பார்க்கிங்கில் காரை நிறுத்தி இருந்தான் விவன். அவன் வருகைக்காக கூட காத்திராமல் காரைவிட்டு இறங்கிய வேகத்தில்  விடுவிடென ரிஷப்ஷனைப் பார்த்து போனவள்,  கைனகாலஜிஸ்ட் செக்க்ஷன் எங்கிருக்கிறது என  விசாரித்து அங்கு போய்விட்டாள்.

அங்கிருந்த அப்பாயின்ட்மென்ட் கவுண்டர் பின்னிருந்த அட்டென்டரிடம் டாக்டரைப் பார்க்கனும் என இவள் கேட்டால்….. அங்கிருந்து பதில் கேள்வி வருகிறது…

“ எந்த டாக்டர்…?”

“கைனக்…”

“அதாங்க இங்க எல்லோரும் கைனக்தான்….நீங்க யார் பேஷண்ட்…..டாக்டர்.சந்தியாவா…. டாக்டர்.ஹெப்சிபாவா….இல்ல தாமரைகண்ணி மேடமா…..”

ஒரு கணம் குழம்பிய ப்ரியா…

“யாராவது ஒரு டாக்டர்….” என்றபடி சுற்றிலும் இருந்த கூட்டத்தை ஒரு பார்வை பார்த்தவள்…

“ரொம்ப பேஷண்ட் இல்லாத டாக்டர் அப்பாய்ண்ட்மென்ட் தாங்க…ரொம்ப வெயிட் பண்ணாம பார்த்துட்டு போகனும்….” என தன் நோக்கத்தையும் விளக்கத்தையும் சேர்த்தே சொன்னாள்.

ஆனால் அந்த அட்டென்டரோ ஒருவிதமாக இவளை நிமிர்ந்து பார்த்தவள்….

“என்ன கம்ப்ளெயிண்ட்காக பார்க்கனும்…?” என அடுத்த கேள்விக்குப் போனாள்.

திகைத்துப் போனாள் ப்ரியா….இதென்ன இவளுக்கு தினமும் வந்து போற ப்ரச்சனையா….என்னவென்று இதை சொல்வது?

அந்த அட்டெண்டரை முழுவதுமாய் ஒரு பார்வை பார்த்தாள் ப்ரியா…..12த் வரை படிச்சுறுக்குமா இருக்கும் அந்த லேடி….அதுட்ட பேஷண்ட்ஸ்  என்ன கம்ப்ளெயிண்ட்னு சொல்லி….இதுக்கு புரிஞ்சு….இவங்களா ட்ரீட்மென்ட் கொடுக்க போறாங்களாமா…? அப்ப ஏன் கேட்குதாம்?

“அத டாக்டர்ட்ட சொல்லிப்பேன்….நீங்க அப்பாய்ண்ட்மென்ட் கொடுங்க…”

இப்போது அந்த அட்டென்டரின் முகத்தில் ஒரு சுண்டல் மற்றும் சோளப்பொரி சிடுசிடுப்பு….

“ப்ரெக்னென்சின்னா சந்தியா மேடம்ட்ட அனுப்புவேன்….வேற ப்ரச்சனைனா தாமரைக்கண்ணி மேடம்ட்ட அனுப்பனும் அதான் கேட்டேன்….”

“ப்ரெக்னென்சி ரிலேட்டட்தான்…” எந்த உணர்ச்சியையும் எல்லா படபடப்பையும் குரலில் வராது மறைத்து மரகட்டை தொனியில் சொல்லிவிட்டாள் இவள். ஆனால் உள்ளுக்குள் ஓடுகிறது மிக்ஸி.

“உங்க ஹஸ்பண்ட் நேம்….” அடுத்துமாய் ஒரு கேள்வி….அதுவும் இப்படி அடி வயிறை பதம்பார்க்கும் ஒரு கேள்வி.… ஏற்கனவே எழும்பும் அத்தனை படபடப்பையும் பலனின்று சுமந்தபடி நின்றிருந்த ப்ரியாவுக்கு இது த்ரெஷ்கோல்ட் ரீச்சிங்க் மொமன்ட்….

இடக்கையால் தன் முகத்தை தேய்த்துக் கொண்டவள்…. “ஏங்க நான்தான் டாக்டர பார்க்கனும்….அதுக்கு எதுக்கு இதெல்லாம்?” அழுத்தமாகவே கேட்டாள்.

அவ்வளவுதான் ஏற்கனவே  இரிடேஷனில் முகம் கழுவி இஞ்சி தின்ற பாவத்தில் இருந்த அந்த அட்டென்டர்……இப்போது முழு எரிச்சலுக்குள் முங்கியே போனார்…..

“இது டீசண்டானவங்களுக்கான ஹாஸ்பிட்டல்……இப்டி அன்மேரீட் அபார்ஷன் கேஸ்லாம் இங்க பார்க்கிறது இல்ல…..” இவள் கண்ணைப் பார்க்காமல் குனிந்து தன் முன்னிருந்த ஏதோ ஒரு லெட்ஜரைப் பார்த்துக்கொண்டே அந்த அட்டென்டர் வார்த்தைகளை கடிக்காமல் துப்ப….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.