(Reading time: 24 - 47 minutes)

ரியூ….ப்ளீஸ்…..அழாத ரியூ…. பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்குது….டெலிவரி வரைக்கும் நீ என் கூட இரு…..எல்லாம் சரியாகிடும்….” அவன் கெஞ்சுகிறான்….

பதிலின்றி பார்வை மறைக்கும் கண்ணீர் வழி அவனைப் பார்த்திருந்தாள் இவள்….

“இமீடியட்டா நாம வெட்டிங் வச்சுப்போம்….. “ அவன் தவிப்போடுதான் ஆரம்பிக்கிறான்……இவளுக்கோ விழி மொத்தமாய் விரிந்து கொண்டு போகிறது….

“அது வேண்டாம்னு நினச்சா…ரிஜிஸ்ட்டர் மேரேஜ் செய்துட்டோம்னு சொல்லி ரிஷப்ஷனாவது க்ராண்டா வச்சு எல்லோருக்கும் நம்ம மேரேஜ அனவ்ன்ஸ் செய்துடலாம்….” அவன் சொல்லிக் கொண்டு போக….. மெல்ல உறைக்கிறது இவள் மூளையில்…. ஆக இப்டி குழந்தைய காமிச்சு இவள கல்யாணம் செய்துக்கதான் இவ்ளவுமா??

“இது என்ன சதி…?” இப்போது சீறினாள் இவள்…..

“இதுல என்ன சதி தெரியுது…” கேட்ட அவன் குரலில் இருந்ததைவிட கண்களில் இருந்த அழுத்தம் அதிகம்….

“ உன்ட்டல்லாம் ஒழுங்கா பேசுனா மண்டையில ஏறவே ஏறாது போல….எதுக்கெடுத்தாலும் கத்தனும்னு நினைக்கிறீயோ….” சின்ன குரலிலேயே சீறியவன்… அவள் கை பற்றி அருகிருந்த சிறு வாசல் வழியாய் கூட்டி வர…. அந்த பெரிய கட்டிடத்தின் பக்கவாட்டு திறந்த வெளிக்கு வந்திருந்தனர்….

சற்று தள்ளி கார் பார்க்கிங்……இங்கு இவர்கள் மாத்திரம் தான்….உச்சி வானில் நிலா சாட்சி….

“இங்க பாரு தெரிஞ்ஜோ தெரியாமலோ  இன்னைக்கு நாம ஹஸ்பண்ட் அண்ட் வைஃப்…. என் வைஃப் வயித்ல என் குழந்தை….நீ விரும்பினாலும் விரும்பாட்டாலும்….ஏன் நானே விரும்பாட்டாலும் இந்த குழந்தைக்கு இனிஷியல் நான்தான….? அதை கூட அந்த குழந்தைக்கு கொடுக்காம….பேரண்ட்ஸ் செய்த தப்புக்கு பிள்ளைங்களை கொத்தி கொதறும் இந்த சொசைட்டில நான் எப்டி விட்டுட்டு போகன்னு சொல்லு….. ?” சிறு குரலில் என்றாலும் அத்தனையாய் சீறிக் கொண்டிருந்தான் விவன்.

“…………………..”

“போகனும்னா குழந்தைய பெத்து கொடுத்துட்டு போ….”

“.................”

“எனக்கு சொந்தம்னு ஒரு தங்கச்சி இருக்கா….இன்னைக்குதான் மேரேஜ் ஆகி அடுத்த வீடு போய்ருக்கா….நான் இப்ப ஒரு பொண்ணை சும்மா கூட்டிட்டு வந்து என் வீட்ல வச்சுகிட்டு…..பிறக்கிற குழந்தைய என் குழந்தைன்னு சொல்ல முடியுமா….? அதுக்கு தான் வெட்டிங் செருமனி கேட்கிறேன்….புரியுதா…?”

அவனை அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்தது ப்ரியா என்றால் அதிர்ந்து போய் பார்த்திருந்தது அங்கு வந்திருந்த சிற்பி….

அடுத்து உடனடியாக நடந்தேறியது ப்ரியா விவன் திருமணம்…..

தொடரும்

Episode # 03

Episode # 05

{kunena_discuss:1063}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.