(Reading time: 24 - 47 minutes)

வளுக்கோ முகத்தில் எச்சில் வாங்கிய ஒரு உணர்வு….கிணுகிணுவென உடலெல்லாம் ஏறுகிறது சூடு……இவளை தாங்கவா அது அல்லது தாக்கவா உடலின் இந்த விடைப்பு….…இவளுக்கே புரியவில்லை….பயம் கோபம் படபடப்பு கொந்தளிப்பு எல்லாம் எல்லை தாண்டி இப்போது இவளுள் நிற்பது அவமானம் மட்டுமே….

என்ன சொல்ல வேண்டும்…எப்படி பதில் செய்ய வேண்டும்…..இவளுக்கு எதையும் யோசிக்க கூட முடியாத நடுக்கம்……

“ஹஸ்பண்ட் நேம் விவன் ஜெரோம்…….மிஸர்ஸ் ப்ரியா ஜெரோம்க்கு அப்பாய்ண்டெமன்ட் வேணும்…. ” அப்போதுதான் அங்கு வந்திருந்த விவன்தான் பதில் சொன்னான்….அத்தனை ஆளுமை இருந்தது அவன் அதை சொன்ன விதத்தில்…..ஐம்பது பெர்சண்ட் கோபமும் ஐயமின்றி கலந்திருந்தது அதில்….

குனிந்திருந்த அட்டென்டரோ இப்போது விலுக்கென நிமிர்ந்து பார்க்க….

“நான் அவங்க ஹஸ்பண்ட்……ஒரு பொண்ணுட்ட இப்டிதான் பேசுவீங்களா….?......அதுவும் கன்சீவா இருக்றமானு டெஸ்ட்க்கு வந்துறுக்கவங்கட்ட…..உங்க நேம் என்ன…?.”

அவன்  பேச பேச அந்த அட்டென்டரின் முகத்தில் அலார்ம்…..

“இல்ல சார்……அவங்க மாத்தி மாத்தி…..அதாவது எல்லோரும் எக்‌பீரியண்ஸ்ட் டாக்டர் வேணும்னு கேட்பாங்க…உங்க வைஃப் கூட்டம் இல்லாதவங்க வேணும்னாங்க…...கன்சீவா இருக்றத பொதுவா எல்லோரும் சந்தோஷமா சொல்லுவாங்க….அவங்க அதையும் சொல்ல விருப்ப பட்ட மாதிரி தெரியலை…… ஹஸ்பண்ட் பெயரை கேட்டதுக்கும் சொல்ல மாட்டேன்னு சொல்லவும்……சாரி….தப்பா தோணிட்டு……” கொஞ்சம் சந்தேகமும் கொஞ்சம் மன்னிப்பு கேட்கும் விதமாக விவன் முகம் பார்த்து தொடங்கி ப்ரியா முகம் பார்த்து முடித்தார் அந்தப் பெண்….

“ அனெக்ஸ்‌பெக்ட்டட் ப்ரெக்னன்ஸி அதோட ஃபர்ஸ்ட் டைம்……. .” அந்த கொஞ்ச சந்தேகமும் போகும் படி அட்டென்டர் பெண்மணி முகம் பார்த்து பதில் கொடுத்தவன்…. “அவ பொதுவா கொஞ்சம் பயந்த சுபாவம்….அதோட சென்சிடிவ்….” என விளக்கி…..

முடிவாய் ”டென்ஷன்ல இருந்திருப்பா….” என இவள் முகத்தைப் பார்த்தபடி சொல்லும் போது இவளுக்குள் எத்தனையோ ரசாயன மாற்றம்….

அறிவுகெட்ட மனம் அவன் வில்லன் என்பதையும் மறந்து  ஏன் போய் அவன் கை பிடித்து பக்கத்தில் நின்று கொள்ள நினைக்கிறது என இவளுக்கே புரியவில்லை….தலையை சிலிப்பி அந்த நினைவை தூர எறிந்தாள்.

இப்போது முழு புன்னகையுடன் “அந்த காலத்து பொண்ணுங்க மாதிரி உங்க ஹஸ்பண்ட் நேம கூட சொல்ல மாட்டீங்க போல….நல்ல பொண்ணுமா நீ” என்றார் அட்டென்டர்…  கட்டி ஐஸ் அதில்…

என்ன இருந்தாலும் விவன் உங்க நேம் என்ன என கேட்ட கேள்விக்கு…..…ஹாஸ்பிட்டல் அத்தாரிட்டிட கம்ளெய்ன் செய்வேன்னு அர்த்தம் இருக்கே……இப்ப இவளோடது எந்த கோல்மாலும் இல்லாத குடும்பபாங்கன வாழ்க்கை என்பது உறுதியாகிவிட்ட நிலையில் விவன் தன் மேல் கம்ளெய்ண்ட் செய்வானோ என பயம் வருகிறது அந்த அட்டென்டருக்கு…..தப்பு செய்றவங்க ஒளிஞ்சு ஓடுவாங்க……ஃபேமிலி பேர்சன் அவர் பேசுன வார்த்தைய சும்மா விடுவாங்களாமா….அது அவருக்கு ப்ரச்சனையாகுமே…..அதான் இந்த ஐஸ்.

இவள் இதற்கு என்ன பதில் சொல்ல….. “வீட்ல பெரியவங்க யாரும் இல்லை போல…..அதான் டென்ஷன்…..”அட்டென்டர் ஐஸ் மோடில் தொடர….

விவன் சிறு புன்னகையை இதற்கு பதிலாக கொடுத்தான்…. முதல் முறையாக இவளுக்குள் கேள்வி வருகிறது…..அவன் வீட்ல வேற யாரெல்லாம் இருக்கா….?

“மேரஜாகி கொஞ்ச நாள்தான் ஆகுதோமா…?” அட்டென்டர் இப்போது இவள் முகம் பார்க்காமல் கம்ப்யூட்டரில் எதையோ தட்ட….

பே பேன்னு முழிக்கிறது இந்த இடத்தில் எவ்ளவு தூரம் மீண்டும் ப்ரச்சனையாக முடியும் என இவளுக்கு புரிந்தாலும் கூட என்ன சொல்லவென தெரியாமல் இவள் விழிக்க….

ஆனால் அந்த அட்டென்டரோ அதை எதையும் கண்டு கொள்ளாமல்…. “சிலருக்கு மேரேஜாகி ரெண்டு வாரம்தான் முடிஞ்சிருக்கப்ப கூட குழந்தை தங்கிடும்மா……ஆனா இதுலெல்லாம் பயப்படுறதுக்கு ஒன்னுமே இல்ல…..இங்க டாக்டர்ஸும் நல்லா பார்ப்பாங்க…..”

அவர் சொல்லிக் கொண்டே போக….சும்மாவாவது சிரிப்பது போல் இதழை இழுத்து வைக்க கூட தோன்றவில்லை இவளுக்கு…..

“டாக்டர் ஹெப்சிபாட்ட அப்பாய்ண்ட்மென்ட் ஃபிக்ஸ்‌ செய்துறுக்கேன் சார்…..அவங்க ஏஜ்ட் …..எக்ஸ்‌பீரியன்ஸும் அதிகம்….ரொம்ப நல்லா பார்த்துப்பாங்க…..நிறைய பொறுமையா சொல்லி கொடுப்பாங்க….ஆனா கொஞ்சம் வெயிட் பண்ணி பார்க்கனும்….கூட்டம் அதிகம்….உங்களுக்குத்தான் நல்லது….” என தன் வேலையில் கவனமாகி இருந்த அட்டென்டர், அதற்கு சம்மதமா என விவனைப் பார்த்தார்….

அவன் இவளை இப்போது பார்க்க……இவளிடம் கேட்காமலே ஆடுகிறது இவள் தலை….

“அங்க சேர் காலி இருக்குது பார் ரியாம்மா…..நீ போய் உட்கார்….நான் இப்ப வர்றேன்….” விவன் இவளை அங்கிருந்து ஏன் அனுப்ப முயல்கிறான் என இவள் நினைக்கும் போதே….இவனது ரியாம்மாவில் சிறு புன்னகையுடன் நிமிர்ந்து இவர்களைப் பார்த்த அட்டென்டர்….. “சார் ரிஜிஸ்ட்ரேஷன்…300 அப்பாய்ண்ட்மென்ட் 500 ….800ரூப்பீஸ் ஆகுது சார்…” என தகவல் தெரிவிக்க….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.