(Reading time: 22 - 43 minutes)

றுநாள் வழக்கம் போல், சதி பார்க்கிற்கு வந்து காத்திருந்த போது,

“நைட் அழுதியா சதி?....” என தைஜூ அவளிடம் கேட்க,

“இல்லை….” என்றாள் சதி வேகமாக…

“பொய் சொல்லாத சதி எங்கிட்ட….”

“அய்யோ இல்ல தைஜூ… நான் ஏன் அழப்போறேன் சொல்லு?...”

“அப்போ ஜெய் அண்ணா நேத்து பாதியிலேயே எழுந்து போனது உனக்கு வருத்தமா இல்லை?...”

“வருத்தம் எப்படி இல்லாம இருக்கும் தைஜூ?... அதெல்லாம் நிறையவே இருக்கு… ஆனா நான் நிஜமாவே அழலை… சந்தோஷம்தான் பட்டேன்…”

“என்ன சதி சொல்லுற?.... புரியலை…”

“ஊட்டிக்குப்போனதும் சொல்லுறேன்… சரியா?...”

“என்னடி புதிர் போடுற?.. ஏன் இப்போ சொன்னா என்ன?...”

“இல்ல தைஜூம்மா… நான் அங்க வச்சே சொல்லுறேன்… சரி அதெல்லாம் இருக்கட்டும்… நேத்து அவரைப் பார்த்து பேச நீயும் இஷானும் போனீங்களே… என்ன சொன்னார் அவர்?...”

“ஓஹோ… நீங்க மட்டும் சொல்லமாட்டீங்க… நாங்க மட்டும் சொல்லணுமாக்கும்?....”

தைஜூ முகம் திருப்பிக்கொள்ள, சதி சிரித்தாள்…

“என் தங்கம்ல… சொல்லும்மா… ப்ளீஸ்…..” என தைஜூவின் முகம் பற்றி சதி கொஞ்ச,

“இந்த கொஞ்சலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை… விடுடி…” என சதியின் கையை தைஜூ தட்டிவிட,

ஜெய்யின் நேற்றைய தவிப்பை பற்றி சொன்னாள் சதி...

“என்னது?...” என உறைந்தே போனாள் தைஜூ சதி சொன்னதைக் கேட்டு….

“ஹேய்… எதுக்குடி இப்படி ஷாக் ஆகுற?...”

“பின்ன நீ சொன்னதைக் கேட்டு ஷாக் ஆகாம வேற எப்படி இருக்க முடியும் சதி?...”

“எனக்கும் அந்த ஷாக் இருந்ததென்னமோ உண்மைதான் தைஜூ… ஆனா அவர் மனசுல நான் இருக்குறேன்னு எனக்கு நல்லாவே புரியுது ஒவ்வொரு சந்தர்ப்பத்துலயும்… அதை நினைச்சு தான் சந்தோஷப்பட்டேன்னு சொன்னேன்… அதுமட்டும் இல்லாம, அவரோட இருக்குற நேரத்தை அதிகப்படுத்த தான் இந்த ஊட்டி டிரிப் எல்லாம்….”

“அடிப்பாவி……” என வாயைப்பிளந்தாள் தைஜூ சதியின் பதில் கேட்டு…

“பக்காவா ப்ளான் போட்டு என் அண்ணாவை திசை திருப்ப பார்க்குறீயாடி நீ?...”

“எப்படி????... நீ இஷானை டைவர்ட் பண்ணியே… அதைவிடவா?...”

கிடைத்த சின்ன இடைவெளியில் சதி, இஷானைப் பற்றி கூற, தைஜூ அவளை சிரித்துக்கொண்டே அடித்தாள்…

“சரி… சரி… வெட்கமெல்லாம் என் அண்ணன் வந்தப்பின்னாடி பட்டுக்கோ… இப்போ நேத்து என்ன நடந்துச்சுன்னு சொல்லு… என்ன சொன்னார் அவர்?...”

“ஜெய் அண்ணா என்ன சொல்லியிருப்பார்ன்னு நினைக்குற?...”

“வரமாட்டேன்னு சொல்லியிருப்பார்… நீ எதாவது முகம் தூக்கியிருப்ப… அதனால கடைசியில வேற வழியே இல்லாம சரின்னு சொல்லியிருப்பார் அதும் கண்டிஷனோட… என்ன சரியா?...”

என்னமோ அங்க நடந்ததை பக்கத்தில் இருந்து பார்த்தவள் போல் சதி சொல்ல, தைஜூ முழித்தாள்…

“என்னடி இந்த முழி முழிக்குற?... நான் சொன்னது சரிதான?...”

“எப்படி சதி?.... இப்படி?...!!!!... இஷான் எதுவும் உங்கிட்ட சொன்னாரா என்ன?...”

“அவன் சொல்லிட்டாலும்… நீ வேற…”

“பின்ன எப்படிடீ உனக்கு எல்லாம் தெரிஞ்சது?...”

“பின்ன இதை கண்டுபிடிக்க சிபிஐ ஆஃபீசரா வருவாங்க?... அவரைப் பத்தி எனக்கு தெரியாதா?...”

சதி சிரித்துக்கொண்டே சொல்ல, தைஜூ அவளையும் தாண்டி பின்னே பார்த்தபடி,

“சிபிஐ ஆஃபீசர் வரலை… ஐபிஎஸ் ஆஃபீசர் தான் வராங்க…” என்றாள் புன்னகையுடன்…

ஜெய் வருகிறான் என்றதும் உள்ளம் பூரிக்க, சட்டென திரும்பினாள் சதி…

அவன் அவளைப் பார்க்காமல் நிராகரிக்க, அவள் அவனது ஒவ்வொரு அடியையும் தன் மனதினுள் சேமித்தாள்….

அவன் அவளைத் தாண்டி முன்னே செல்ல, அவளும் அவனை பின் தொடர்ந்தாள்…

“நீ இங்கயே இரு…. நான் இப்போ வந்துடுறேன்…” என்றபடி சதி தைஜூவிடம் சைகை காட்டிவிட்டு ஜெய்யின் பின் சென்றாள்…

அவன் ஓடிக்கொண்டே ஒரு வளைவில் திரும்ப, அவனின் முன் சென்று வழியை மறித்தாள் சதி…

சட்டென ஓட்டத்தை நிறுத்தியவன், அவளைப் பார்க்காமல் வேறெங்கோ பார்க்க,

“எத்தனை நாள் இந்த கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுவீங்க?..… எல்லாம் இன்னும் இரண்டு நாள் தான்… ஊட்டிக்கு வருவீங்கல்ல… அங்க எப்படி தப்பிச்சுப் போவீங்கன்னு நானும் பார்க்குறேன்…” என அவள் அழுத்தம் திருத்தமாக சொல்ல, அவளை பேருக்கு கூட பார்க்கவில்லை அவன்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.