(Reading time: 22 - 43 minutes)

வேற யாரு அப்படி சொல்லணும்?... அந்த சுரேஷா?...”

அவன் ஆத்திரத்துடன் கேட்க, அவளோ அவனை முறைத்தாள்…

“இந்த முறைப்பெல்லாம் என்னை எதுவும் செஞ்சிடாது… உன் பின்னாடியே சுத்தினாலும் உனக்கு பிடிக்குறதென்னவோ அவன் மூஞ்சியத்தான?...”

“அந்த நல்ல மனுஷனைப் பத்தி பேச கூட உனக்கு தகுதி கிடையாது… சே….”

அவள் பேச்சு அவனுக்கு வெறியை பரிசளிக்க,

“ஓ.. அவன் நல்ல மனுஷன்னா, அப்போ நான் என்ன பொரிக்கியா?...”

“ஏன் உனக்கு அது தெரியாதா?...”

அவள் வெடுக்கென்று பதில் சொல்லிவிட, அவன் சட்டென அவள் கைகளைப் பிடித்தான்…

“ஏய்… என்ன பண்ணுற?... விடுடா…”

“நீ சொன்ன வார்த்தையைத்தான் நிரூபிக்கிறேன்…”

“விடுடா… என்னை….” என்றவள் அவனிடமிருந்து விலக முற்பட, அவன் பிடி உடும்பாயிருந்தது…

கடைசியில் ஒருவழியாய், அவனிடமிருந்து தன் கைகளை போராடி மீட்டெடுத்தவள், அவனை தள்ளிவிட்டுவிட்டு ஓட, அவனும் அவளைப் பின் தொடர்ந்தான்…

“நில்லு… நீ எங்க போனாலும் உன்னை இன்னைக்கு விடுறதா இல்லை நான்… எனக்கு நீ ஒரு பதில் சொல்லியே ஆகணும்…” என்றபடி அவன் அவளை துரத்த ஆரம்பிக்க,

அவனிடமிருந்து தப்பிக்க எண்ணி வேகமாக ஓடியவள், ஜெய்யைக்கண்டதும் அவனருகில் சென்றாள்…

“ஹெல்ப் பண்ணுங்க சார்… என் கையை பிடிச்சு வம்பு பண்ணுறான்… ப்ளீஸ் சார்… ஹெல்ப் பண்ணுங்க சார்…”

“ரிலாக்ஸ்… ரிலாக்ஸ்… நான் பார்த்துக்குறேன்…” என்ற ஜெய் அந்த முரடனை நோக்கி வந்தான்…

ஜெய்யை மேலும் கீழாய் பார்த்துவிட்டு, “ஊருக்கு புதுசா நீ?... என்னைப் பத்தி உனக்கு தெரியாது…. எங்கிட்ட வச்சிக்காத… வழியை விடு…” என அவன் மிரட்ட,

மறுகணமே அவனை ஓங்கி ஓர் அறை விட்டான் ஜெய்…

“என்னையே அடிச்சிட்டீயா?...” என்ற அதிர்ச்சி கலந்த கூக்குரலோடு துப்பாக்கியை அசால்ட்டாக எடுத்தபடி ஜெய்யின் மேல் பாய்ந்தான் அவன்…

புதியவனை தூர தள்ளி கீழே விழ செய்த ஜெய், அவனை அடித்து துவைத்து அவன் கையில் இருந்த துப்பாக்கியை பிடுங்கிக்கொண்டு தன் சட்டையினுள் வைத்துவிட்டு அந்த பெண்ணிடம் வந்தான்…

“ரொம்ப தேங்க்ஸ் சார்… சரியான நேரத்துல வந்து ஹெல்ப் பண்ணீங்க…”

“இட்ஸ் ஓகே… இனியாச்சும் பார்த்து ஜாக்கிரதையா இருங்க…”

“என்ன ஜாக்கிரதையா இருந்தாலும் இவன் தொந்தரவு இருந்துட்டே தான் சார் இருக்கும்… எப்பவும் பின்னாடி வந்து சாகடிப்பான்… இன்னைக்கு தான் எல்லை மீறி நடந்துகிட்டான்…”

“அப்படி தொந்தரவா இருக்கும்பட்சத்துல போலீஸ்ல சொல்லியிருக்கலாமே…”

“சொன்னா மட்டும் என்ன சார் நடக்கும்?... நீங்க ஊருக்கு புதுசுன்னு நினைக்கிறேன்… இங்க எல்லாம் இவன் வச்சது தான் சார் சட்டம்… இந்த ஏரியா முழுக்க இதோ இவன் கண்ட்ரோல் தான்…” என வலியில் துடித்தபடி படுத்து கிடந்தவனை கைகாட்டி அவள் சொல்ல,

“சரி நீங்க போங்க… நான் பார்த்துக்குறேன்…” என்றான் ஜெய் அமைதியாக…

“சார்….. நீங்க….”

“நான் பார்த்துப்பேன்… நீங்க பார்த்து பத்திரமா கிளம்புங்க…” என்றவன் அவள் போகும்வரை காத்திருந்துவிட்டு, இஷானிற்கு போன் செய்தான்…

அடுத்த சில மணி நேரத்தில் இஷானும், ஜெய்யும் அந்த புதியவனுடன் போலீஸ் ஸ்டேஷனில் இருந்தனர்…

தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு அந்த இன்ஸ்பெக்டரிடம் சொல்லி அவனின் மேல் கேஸும் கொடுத்துவிட்டு, புதியவனை லாக்கப்பினுள் அடைப்பதை பார்த்துவிட்டே இஷானும் ஜெய்யும் அங்கிருந்து கிளம்பினர்…

பின் வீட்டிற்கு வந்து குளித்துவிட்டு, காலை சாப்பாடையும் முடித்துவிட்டு தனது வேலையை ஆரம்பிக்க காரை எடுத்துக்கொண்டு ஜெய் வெளியே கிளம்ப முனைந்த போது, இஷானும் வர, இரண்டு பேரும் பேசிக்கொண்டே அந்த மலைப்பகுதியின் வளைவுப்பாதையில் பயணித்தனர்…

சிறிது தூரம் சென்ற பிறகு, சட்டென சடன் பிரேக் போட்டு ஜெய் காரை நிறுத்த,

“என்னாச்சுடா?...” என்ற கேள்வியோடு இஷான் ஜெய்யைப் பார்க்க,

ஜெய் கைகாட்டிய திசையில் பார்த்த இஷானுக்கும் சற்று அதிர்ச்சியாகவே இருந்தது…

Episode 20

Episode 22

{kunena_discuss:1001}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.