(Reading time: 26 - 52 minutes)

ங்கே அசந்து உறங்கும் பாவனையில் படுத்திருந்த விஷ்வாவின் அருகில் கைப்பேசியை வைத்துவிட்டு கட்டிலில் சாய்ந்தான் பரத். விஷ்வா உறங்கி விடவில்லை என்று புரிந்தாலும் அவனிடம் எதுவும் பேச தோன்றவில்லை பரத்துக்கு. பழைய நினைவுகளில் மூழ்க துவங்கினான் அவன்.

'ரொம்ப வலிக்குதாமா???' பரத்தின் குரலே திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டிருந்தது அம்மாவுக்கு.

என்னதான்... இல்லை... இல்லை... என மறுத்தாலும் அம்மா எனும் சொல்லை முதன் முதலாக அவருக்கு பரிசாக தந்தது பரத்!!! அந்த வார்த்தையை அவன் வாயால் கேட்டு மகிழ்ந்த நாட்கள் பல.

அம்மாவுக்கும் அப்பாவுக்கும் காதல் திருமணம். பெரிதாக சொத்து, வசதிகள் என எதுவும் இல்லை இருவருக்கும். இரண்டு பக்க குடும்பத்துடன் பெரிய நெருக்கம் இல்லை அப்போது.  திருமணம் முடிந்து சில ஆண்டுகள் குழந்தை இல்லாத நிலையில் ஒரு ஆசிரமத்திலிருந்து தத்து எடுக்கபட்டவன் பரத். குழந்தைக்காக அப்போது ஏங்கிக்கிடந்தார் அம்மா.

இவர்கள் வார்த்தை ஒன்றையே நம்பி, சட்டப்படியான நடைமுறைகளை எதையும் பெரிதாக கடைப்பிடிக்காமல் தத்து கொடுக்கப்பட்டான் பரத். முதல் மூன்று ஆண்டுகள் அவனை கண்களுக்குள் வைத்து தாங்கியவர்தான் அம்மா.

அப்போதுதான் கடவுள் கொடுத்த இன்னொரு வரமாய் அம்மாவின் வயிற்றில் திடீரென உதித்தான் விஷ்வா. அவன் பிறந்த பொழுதில் கூட இருவருக்கும் இடையில் பாரபட்சம் பார்த்ததில்லை அம்மா.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜெய்யின் "ஸ்ருங்கார சீண்டல்கள்... சில்லென்ற ஊடல்கள்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

பின்னர் மெதுமெதுவாக கையில் பணம் சேரத்துவங்க, வசதிகள் பெருக அம்மாவின் மனம் குறுக ஆரம்பித்திருந்தது. எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டியவன் என் வயிற்றில் பிறந்தவன் மட்டுமே இவன் யார் நடுவில் என்ற எண்ணமும் மெல்ல மெல்ல தலை தூக்க ஆரம்பித்திருந்தது.

விஷ்வா பிறந்து ஐந்து ஆறு வருடங்களில் குடும்பத்தில் நல்ல வசதி வந்திருக்க காதல் திருமணத்தில் பிரிந்திருந்த சொந்தங்கள் மெல்ல மெல்ல அருகே வரத்துவங்க அவர்களிடம் பரத்தை மகனென அடையாளம் காட்ட மனம் வரவில்லை அம்மாவுக்கு.  கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கப்பட்டான் பரத். 

அப்பாவுக்கு மனம் கேட்கவில்லைதான். 'பாவம்மா அவன். அவனும் குழந்தைதானே...' சில நேரங்களில் அவனுக்கு பரிந்துக்கொண்டு வருவார் அவர்.

அப்போதெல்லாம் வீட்டில் பெரிய சண்டைகள் வெடிக்கும். சண்டை தன்னை வைத்துத்தான் என புரியும். ஆனால் ஏன் என புரியாது பரத்துக்கு. ஒரு கட்டத்தில், பரத்தின் பதினோராவது வயதில் இந்த சண்டைகளின் வெளிப்பாடாக கோயம்புத்தூரில் இருந்த ஒரு பள்ளியில் ஹாஸ்டலில் சேர்க்கப்பட்டான் பரத்..

'அம்மா.. அம்மா ப்ளீஸ் மா நான் வீட்டுக்கு வரேன்மா.. உன் கூட சண்டை எல்லாம் போடா மாட்டேன் மா..' அப்போது அவன் கதறியது இப்போதுகூட அம்மாவுக்கு அப்படியே நினைவில் இருக்கிறது.

பள்ளிக்கட்டணம் மட்டும் செலுத்தப்படும். விடுமுறைகளில் வீட்டுக்கு வரும் அனுமதி கூட பல நேரங்களில் மறுக்கபடும்

மற்ற பிள்ளைகள் அம்மா, அப்பா என அவர்கள் தங்களுக்கு செய்ததை எல்லாம் பெருமை அடித்துக்கொள்ளும் சமயங்களில் வறண்டு போன பார்வை மட்டுமே இவனிடம் பதிலாக இருக்கும். படிப்பிலும் நாட்டம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது அவனுக்கு.

அம்மாவின் மனம் இப்போது குமறிக்கொண்டிருந்தது. திடீரென ஒரு நாள் உண்மைகளை அவனிடம் போட்டு உடைத்தேனே. எப்படி வலித்திருக்கும் அவனுக்கு??? எந்த தவறும் செய்யாதவனுக்கு எத்தனை பெரிய தண்டனை கொடுத்தேன் நான்???

வேண்டுமென்றால் வைத்துக்கொள்வதற்கும் வேண்டாம் என்றால் தூக்கி எறிவதற்கும் அவன் என்ன பொம்மையா??? எது என் கண்ணை மறைத்தது??? என் பண வெறியா???

அந்த ஆசிரமத்திலேயே அவன் வளர்ந்திருந்தால் கூட அது வேறு விதமாக போயிருக்குமே???  கண்ணிலாதவனுக்கு பார்வை கொடுத்து மறுபடியும் பார்வையை பிடுங்கிக்கொள்வதை போல் அல்லவா இது??? எப்படி துடித்திருப்பான் அவன்??? எத்தனை வலிகளை அவன் கடந்து வந்தானோ??? அதன் பலனாகத்தான் இன்று நான் வலியில் துடிக்கிறேனோ??? அங்கே  நிற்காமல் வழிந்துக்கொண்டிருந்தது அம்மாவின் கண்ணீர்.

தே நேரத்தில் இங்கே

ஏதேதோ நினைவுகளுடனே போராடி  அப்படியே உறங்கிப்போயிருந்தான். பரத். இதழோரம் சின்ன நிறைவான புன்னகை குடிக்கொண்டிருந்ததை போல் தோன்றியது அவனை பார்த்த விஷ்வாவுக்கு. அம்மாவிடம் பேசியதே காரணம் என்று தோன்றியது அவனுக்கு.

இவன்தான் தனது அண்ணன் என்பது சிறு வயதில் இருந்து விஷ்வாவின் மனதில் பதிந்து போன ஒன்று. இந்த உண்மைகள் புரிந்த போதும் அந்த எண்ணத்தை என்றுமே மாற்றிக்கொள்ள விரும்பியதில்லை விஷ்வா.

இந்த நிமிடம் வரை இவர்கள் அவனை தத்து எடுத்துக்கொண்ட விஷயம் அபர்ணாவின் அப்பாவுக்கு கூட தெரியாது. அவனை யாரோ ஒரு ஏழை மாணவன் என்றும் அவனை இவர்கள் படிக்க வைத்தார்கள் என்றுமே  நம்பி இருந்தார்கள் அவர்களின் சொந்தங்கள்.. இந்த உண்மைகளை விஷ்வா சொன்னது அபர்ணாவிடமும், அஸ்வினியிடமும் மட்டுமே.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.