(Reading time: 26 - 52 minutes)

தான் சொந்த காலில் நின்று ஒரு நிலைக்கு வந்த பிறகுதான் பரத்துக்காக வீட்டில் போராட ஆரம்பித்தான் விஷ்வா. வீட்டில் சாப்பிடுவதை நிறுத்தினான். யார் வீட்டு விசேஷங்களிலும் கலந்து கொள்வதை தவிர்த்தான். அதனாலேயே அபர்ணாவின் அப்பா உட்பட எல்லாருக்கும் இவன் மீது கோபம் உண்டு.

போனதெல்லாம் போகட்டும். இப்போது விஷ்வா எதிர்ப்பார்ப்பது ஒன்றே ஒன்று. நடக்கவிருக்கும் அப்பாவின் அறுபதாம் கல்யாணத்தில் அப்பாவும் அம்மாவும் பரத்தை தங்களது மகனென எல்லார் முன்னிலையிலும் ஒப்புக்கொள்ள வேண்டும்!!!

யோசித்தபடியே பரத்தையே பார்த்தபடி அமர்ந்திருந்தான் விஷ்வா. அறையின் ஏசி குளிர் கொஞ்சம் ஊசிப்போட, பரத் சிலிர்த்து உடலை கொஞ்சம் குறுக்கிக்கொள்ள, அவனருகே இருந்த போர்வையை எடுத்து அண்ணனுக்கு போர்த்திவிட்டான் விஷ்வா.

'டோன்ட் வொர்ரி ப்ரோ... எல்லாம் சீக்கிரமே சரியாகிடும்...' இதழ்களில் ஓடிய புன்னகையுடன் வாய்விட்டு உச்சரித்தான் அவன்!!!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

றுநாள் காலை

இன்னைக்கு இந்துக்கு சர்ஜரிடா. இன்னைக்குமா நீ ஆபீஸ் போகணும்??? அலுவலகத்துக்கு கிளம்பிய அருணை கேட்டுக்கொண்டிருந்தார் அவன் அம்மா.

'மத்தியானம் தானே சர்ஜரி? கொஞ்சம் வேலை இருக்குமா. அதை முடிச்சிட்டு நான் நேரே ஹாஸ்பிடல் வந்திடறேன்..' என்றான் அருண்.

'இன்னைக்கு விட்டா அப்புறம் ஒரு வாரம் நாள் நல்லா இல்லை. நல்ல வேளை இன்னைக்கு சர்ஜரி வெச்சிருக்காங்க..' சொல்லிக்கொண்டிருந்தார்  அவன் அப்பா. அவருக்கு இது போன்ற நாள், நட்சத்திரம் ஜாதகம் போன்ற விஷயங்களில் நம்பிக்கை அதிகம்.

வீட்டில் எல்லா முடிவுகளையும் அவரே எடுத்தும் பழக்கம் அவருக்கு. அவர் சொல்வதற்கு தலை ஆட்டியே வழக்கம் அவனது அம்மாவுக்கு.

சரிப்பா நீங்க ரெண்டு பேரும் சீக்கிரம் போயிடுங்க. அங்கே சித்தி தனியா இருப்பாங்க நான் 12 மணிக்கு ஹாஸ்பிடல் வந்திடறேன் ..' சொல்லிவிட்டு தனது பைக்கை உதைத்து கிளப்பினான் அருண்.

தே நேரத்தில் அங்கே மருத்துவமனையில் அமர்ந்திருந்தான் விஷ்வா.

மதியம் ஒரு மணிக்கு அவளுக்கு அறுவை சிகிச்சை. காலை உணவு கூட சரியாக உள்ளே இறங்கவில்லை அவனுக்கு. காபியை உள்ளே இறக்கி பசியை மறைத்துவிட்டு தனது அறையில் வந்து அமர்ந்திருந்தான் அவன்.

அன்று அவன் சந்திக்க வேண்டிய நோயாளிகளை பரிசோதிக்க ஆரம்பித்த போதும் எண்ணம் முழுவதும் இந்துஜாவின் அறையிலேயே இருந்தது.

யார் யாரோ மருத்துவர்களும் நர்ஸ்களும் வரவதும் பரிசோதிப்பதும், ஊசிப்போடுவதும் சரியாக எதுவும் புரியவில்லை இந்துஜாவுக்கு. இன்று வலி அவ்வளவாக இல்லை என்ற போதும் அன்று விஷ்வா அருகில் இருந்த போது இருந்த ஒரு தைரியம் இல்லையே ஏன்??? அம்மா அவள் அருகிலேயே அமர்ந்திருந்தார். அவர் சொல்லும் தைரியங்கள் போதவில்லை மனதிற்கு

யாரவன்??? எங்கிருந்து வந்தான்??? ஏன் திடீரென காணாமல் போனான்??? ஆனால் நேற்றுக்கூட வந்து ஒரு முறை எட்டிப்பார்த்துவிட்டு சென்றானே??? எனக்காக வந்தானா என்ன???  

ஏதோ யோசனையுடன் அவள் தனது கைப்பேசியை எடுத்த அந்த நொடியில் அவனது கைப்பேசியை தொட்டிருந்தது அந்த குறுஞ்செய்தி!!!

தே நேரத்தில் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தாள் அபர்ணா. அடுத்த அரைமணி நேரத்தில் தனது ராஜினாமா கடிதத்துடன் எச்.ஆர் மானேஜர் ராதிகாவின் முன்னால் அமர்ந்திருந்தாள் அவள்.  .

'ஐ யாம் ஷாக்ட் அபர்ணா...' என்றாள் ராதிகா. புருவங்கள் மேலே உயர 'ஏன் இப்படி அவசரப்பட்டு முடிவேடுக்கறீங்க??? உங்களுக்கு ஆன்சைட் ஆஃபர் வந்திருக்கு போலிருக்கே...'

'அதனாலே தான் வேலை வேண்டாம்னு சொல்றேன்..' என்றாள் அபர்ணா அழுத்தமாக. இவளுக்கென்ன பைத்தியமா என்பதை போல் பார்த்தாள் எச்.ஆர் மானேஜர்.

'வாட்???'

'எஸ்... எனக்கு பிடிக்கலை. அவ்வளவுதான்.. இதிலே வேறே என்ன ப்ரோசீஜர்ஸ் இருக்கு சொல்லுங்க..'

'பட்... அபர்ணா ... நீங்க நோடீஸ் கொடுக்கணுமே..' என்றாள் ராதிகா..

'ஐ யாம் சாரி டு சே திஸ் பட்.. இதுக்கு முன்னாடி நீங்க எத்தனையோ பேரை திடீர்னு ஒரு நாள் வீட்டுக்கு போக சொல்லி இருக்கீங்க இல்லையா??? அப்போ அவங்களுக்கு எல்லாம் நோட்டீஸ் கொடுத்தீங்களா???? அவளது நிமிர்ந்த பதில் அந்த எச்.ஆர் மானேஜரையே கொஞ்சம் திகைக்க வைத்தது.

'அது நாங்க ரெண்டு மாச சாலரியோட தானே அனுப்பினோம்...'

'ஃபைன்... அப்போ நான் என்னோட மூணு மாச சம்பளம் கூட கொடுக்கிறேன் போதுமா???  இதுக்கு மேலே நான் இங்கே கண்டினியூ பண்ண விரும்பலை... வேறே ஏதாவது ப்ரோசீஜர்ஸ் இருந்தா எனக்கு மெயில் பண்ணுங்க... தேங்க்ஸ்..' எழுந்து விட்டாள் அபர்ணா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.