(Reading time: 26 - 52 minutes)

வளது தோழி ப்ரியாவே இதை எதிர்பார்த்திருக்கவில்லை!!! நம்பவே முடியாமல் அமர்ந்திருந்தாள் அவள். அவள் செய்து முடித்திருந்த வேலைகளின் விவரங்களை ப்ரியாவிடம் சொல்லிவிட்டு, வேறு சில தோழிகளிடமும் சொல்லிக்கொண்டு  அவள் கிளம்பிய அந்த நொடியில் சரியாக எதிர்ப்பட்டான் அருண்.

இப்போது ஏனோ அவனிடம் எதுவுமே சொல்லிக்கொள்ள தோன்றவில்லை அபர்ணாவுக்கு. கைப்பையை தோளில் சரியாக இருத்திக்கொண்டபடியே ஒரு முறை அவன் கண்களை நேராக பார்த்தாள் அபர்ணா.

மறுபடியும் அவனாக வந்து பேசும் வரை தான் பேசுவதில்லை என்ற முடிவுக்கு நேற்றே வந்திருந்தாள் அவள். ஒரு பெருமூச்சுடன் தலை அசைத்துவிட்டு அங்கிருந்து விறுவிறுவென நடந்தாள் அவள். எந்த சிறையில் இருந்தோ விடுதலையாகி போகும் உணர்வு தோன்றியது அவளுக்கு.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சுபஸ்ரீயின் "கிருமி" – காதல் கலந்த விறு விறு தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

ருத்தவமனையில்  தனது அறையில் யாருடைய கையையோ பரிசோதித்துக்கொண்டிருந்த விஷ்வா  எடுத்து பார்த்தான் தனது கைப்பேசியை. அதற்கு வந்திருந்தது அந்த குறுஞ்செய்தி.

அதிலிருந்தது .வெறும் ஒற்றை வார்த்தை!!!  'விஷ்வா!!!'

அனுப்பியது யாரென தெரியவில்லை. இந்துஜாவின்  எண் கூட அவனது கைப்பேசியில் பதிந்திருக்கவில்லை. ஆனாலும் அந்த எண்ணம் வராமல் இல்லை. ஒரு வேளை அனுப்பியது அவளாக இருக்குமோ???

எதற்கு அழைக்கிறாள் என்னை??? ஒரு வேளை ரொம்பவும் பயந்து போயிருப்பாளோ??? படபடத்தது இதயம்!!! 

என் கைப்பேசி எண் கூட அவளிடம் இல்லையே??? அவள் எப்படி அனுப்பி இருக்கக்கூடும்??? அனுப்பி இருக்க மாட்டாள்!!!

ஒரு வேளை வேறே யாரிடமாவது எண்ணை வாங்கி அனுப்பி இருந்தால்??? மனம் ஒரு நிலைக்கு வராமல் இங்கமங்கும் ஊஞ்சலாடிக்கொண்டிருந்தது

பர்ணா வேலையை ரிசைன் பண்ணிட்டாளா??? ஏன்??? ப்ரியாவிடம் பாய்ந்தான் அருண்.

'என்கிட்டே வந்து கேக்கறீங்க. அவ உங்க கிட்டே சொல்லலையா???" கேட்டாள் ப்ரியா. அவளுக்குத்தான் தெரியுமே அவன் சில நாட்களாக அவளிடம் பேசுவதில்லை என!!! அவன் மீதிருந்த கோபத்தில் அவனை கொஞ்சம் கீறிபார்க்க வேண்டுமென்றே தோன்றியது ப்ரியாவுக்கு.

'இல்லை.. அது வந்து .. சரி அது இருக்கட்டும்..  அவ ஏன் ரிசைன் பண்ணா அதை சொல்லுங்க'

'அவளை அந்த தினேஷ் யூஸ்லெஸ்ன்னு நேத்து திட்டி இருக்கான் அது அவளுக்கு பிடிக்கலை..' ப்ரியா சொல்ல யோசனையுடன் பார்த்தான் அருண்.

'அவன் எதுக்கு திட்டினான்???'

அவளுக்கு 'யூ.எஸ் போகறதுக்கு இஷ்டம் இல்லை அதனாலே...' கணினி திரையில் பார்வையை பதித்த படியே சொன்னாள் ப்ரியா..

'நான்சென்ஸ்... இவ ஏன் இப்படி இருக்கான்னே தெரியலை.??? இவளை எல்லாம் வெச்சிகிட்டு என்ன செய்ய??? ஏன் யூ.எஸ் போக இஷ்டம் இல்லை??? எல்லாத்துக்கும் பயம் அவளுக்கு.. நானா இருந்தாலும் அவளை அப்படிதான் திட்டி  இருப்பேன். சம்பாதிக்க வேண்டிய காலத்திலே சம்பாதிக்க வேண்டாமா???'

'ஏன் நம்ம நாட்டிலே சம்பாதிக்கவே முடியாதா???' ப்ரியா கேட்க அதற்கு பதில் சொல்ல அவன் அங்கே இருக்கவில்லை.

அடுத்த சில நிமிடங்களில் எச்.ஆர் மானேஜர் முன்னால் இருந்தான் அருண்.

'யூ ஸீ ராதிகா. எல்லாத்திலேயும் பயம். அவசரம் நம்ம அபர்ணாவுக்கு. நான் அவளை கன்வின்ஸ் பண்றேன். ஒன் வீக்குள்ளே. அது வரைக்கும் அவங்க ரெசிக்னேஷனை கொஞ்சம் ஹோல்ட் பண்ணி வைங்க ப்ளீஸ்....'

தாங்கிக்கொள்ள முடியவில்லை அவனால்!!! அவள் எடுத்த முடிவை விட, தன்னிடம் சொல்லாமல் அவள் இத்தனை பெரிய முடிவை எடுத்ததை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை அவனால்!!!

அவனது தந்தை சொல்வதற்கெல்லாம் அம்மா தலை ஆட்டியே பார்த்திருக்கிறான் அவன்!!!. இவள் மட்டும் எப்படி இப்படி இருக்கிறாள்???

'நான் அவளுக்கு தாலி கட்டிவிட்டால் நான் சொல்வதை அவள் கேட்டுத்தானே ஆகவேண்டும். கூடிய சீக்கிரம் நடத்துகிறேன் அதை!!! அவசரகதியில் சுழன்றது அவன் மனம்!!!

கிட்டதட்ட ஒரு மணி நேரம் கடந்திருக்க தான் பரிசோதிக்க வேண்டிய நோயாளிகளை பரிசோதித்து விட்டு நிமிர்ந்தான் விஷ்வா.

குறுஞ்செய்தியை அனுப்பியது அவளாகத்தான் இருக்க வேண்டும் என்ற ஒரு முடிவுக்கு வந்திருந்தான் அவன். இத்தனை பேரை பரிசோதிக்கிறேன். பாவம் அவள்!!!'. ஒரு மருத்துவனாக அவளை சென்று பார்த்து வருவதில் என்ன இருக்கிறதாம்??? கிளம்பினான் அவன்.

'அந்த 105' பேஷண்டுக்கு கால் எடுத்திட்டாங்க போலிருக்கே...' சில நிமிடங்கள் முன் உள்ளே வந்த நர்சுகள் பேசிக்கொண்டிருந்த விஷயம் இந்துஜாவுக்கு இன்னமும் திகிலை கிளப்பியது.

'இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு என்னாலே நடக்க முடியும் தானே??? அன்று ஆட வைக்கிறேன் என்றானே??? இன்று ஏன் வரவே இல்லை??? அவனை ஒரு முறை பார்க்க வேண்டுமென்று தோன்றிக்கொண்டே இருந்தது இந்துஜாவிற்கு. .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.