(Reading time: 24 - 48 minutes)

மின்னு இப்ப ஃபைன் ரியு…...வீசிங் கொஞ்சம் அக்ரிவேட் ஆகியிருந்தது…. நிம்முவும் மஹியும் ஹனிமூன் கிளம்பிட்டாங்கல்ல…. மஹி சிஸ்டர் ஃபேமிலியும் மின்னு குட்டியமட்டும் சுடர் ஆன்டிட்ட விட்டுட்டு நம்ம வெட்டிங் அன்னைக்கே ஊருக்கு போயாச்சு….

அதான் குட்டிய ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போக யாரும் இல்ல….. ரிலடிவ்மா அவங்க நமக்கு….. சும்மா ஸ்டாஃப் யாரையும் போய் ஹெல்ப் பண்ணுங்கன்னு அனுப்பி வைக்கிறது சரி கிடையாது….. அதான் நீ மூட் அவ்ட்னாலும் நான் கிளம்பிப் போக வேண்டியதாகிட்டு…. “ இவளோடு வீட்டுக்குள் நுழைந்தபடி விளக்கம் சொல்லி மறைமுகமாக அவன் மன்னிப்பு கேட்க….

அவசரமாக மறுத்தாள் ரியா..

“அச்சோ…..நீங்க போனதெல்லாம் சரிதான்….அதுவும் குழந்தைக்குன்றப்ப செகண்ட் தாட்டே கிடையாது…. ஆனா நான்தான் ஸ்ட்ராம பார்த்து கொஞ்சம் பயந்துட்டேன்….” தன்னிலையை ஒத்துக்கொண்டாள்…

இந்த நொடி இவள் கண்ணோடு கண்ணோக்கி அவன் பார்த்த பார்வைக்கு என்ன அர்த்தமாம்? அதை தாங்க தெரியாமல் மெல்ல அவள் பார்வையை தடம் மாற்ற…

அவள் நிலையை புரிந்தானோ…. “ஹாஸ்பிட்டல் போனது ரியு…. குளிச்சுட்டு வந்துடுறேன்….” என்றபடி இவளைவிட்டு விலகிப் போனான்…..’அழுத்திப் பார்த்தாலே அதுக்கும் கில்டியா ஃபீல் பண்ணி அடுத்து டங்கு டங்குனு ஆடுவாளோ’ என்பது அவனுக்கு….

அவனா இவட்ட பேச்ச கட் பண்றான் என எதோ ஒன்று முனுக் என்றது இவளுக்கு….ஆனாலும் Live in present கொள்கைப் படி அந்த முனுக்கை மூலையிலிருந்து குப்பைத்தொட்டிக்கு கிக் பாக்சிங் செய்தவள்…..

அடுத்து என்ன செய்யலாம் என யோசித்து இஞ்சி டீ போடலாம் என முடிவு செய்து கொண்டாள்.….

இந்த க்ளைமேட்டுக்கு சூப்பரா இருக்கும்….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "என்றென்றும் அன்புடன் - 01..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

ப்படித்தான் ஆரம்பித்தது கிட்சன் படலம்… அவள் இஞ்சி தட்டி டீக்கு ரெடி செய்து கொண்டிருக்கும் போது,  ஸ்னாக்‌ஸாக ஆனியன் பக்கோடா இருந்தால் நல்லா இருக்கும் என அடுத்த ஐடியா வர,

அதையும் அவள் செய்ய ஆரம்பிக்க, அப்போது நீர் சொட்டும் ஈர முடியை  டவலால் துவட்டியபடி வந்து சேர்ந்தான் விவன்..

“ஹேய் என்ன செய்ற…? உனக்கு என்ன வேணும்னு சொல்லு….நான் செய்றேன்…” என அவசரமாய் அவள் செய்வதை எட்டிப் பார்த்தவன்….. “எனக்கு ஸ்னாக்‌ஸெல்லாம் செய்ய தெரியாதே” என யோசனையாய்  நெற்றி சுளித்தான்…

“இதெல்லாம் வெளிய வாங்கினா இப்ப நீ சாப்டலாமா..?” என  அடுத்த ஆலோசனைக்கும் போனான்…

அவன் வந்துவிட்டான் என தெரிந்தும், அதுவரைக்குமே வெகு சிரத்தையாய் பக்கோடா பொறிந்து கொண்டிருந்த எண்ணை சட்டியில் கவனம் வைத்திருந்த ரியா இப்போது அவனை திரும்பி ஒரு பார்வை பார்த்தாள்…

“நான் ப்ரெக்னென்ட்டாதான் இருக்கேன் பேஷண்ட்டா இல்ல…”  சொல்லிவிட்டு அடுத்தும் அவள் எண்ணெய் சட்டி பக்கம் திரும்ப

அசந்து போய் நின்றது விவன்….

இதே ப்ரெக்னென்சி விஷயத்துக்காக எத்தனை எத்தனையாய் கதறி அழுதாள் இவள்….எத்தனை தடவை பயத்தில் மயங்கி விழுந்தாள்……எதிர்காலம் பற்றி எத்தனை பயந்தாள்…. இப்ப எவ்ளவு கான்ஃபிடென்ட்டா மாறி இருக்குது இவளது பார்வை….

ஒரு புயல்ல ஒருத்தி இவ்ளவு மாறுவாளாமா? புயல் என்ன போதி மரமா? இவன் மனம் இப்படி ஓடிக் கொண்டிருக்க…..ரியாவோ அதே நேரம்

“என்ன புயல்  போதி மரமாகிட்டான்னு பார்க்கீங்களா?” என கேட்க….. இப்போ இவன் ஜா ட்ராப்…. ஹான்?!!!!!

அதுவரைக்குமே வெந்துவிட்ட பக்கோடாவை கண் கரண்டியால் அரித்து எடுப்பதில் செம சின்சியராய் ஈடுபடிறுந்த ரியா இவனிடமிருந்து பதில் எதுவுமில்லை என்பதால் திரும்பிப் பார்க்க……இவனது ஆ கோலம் அவள் கண்ணில் படுகிறது…

“போங்க ரொம்ப கிண்டல் செய்தீங்கன்னா…..இனிமே ஒன்னொனையும் யோசிச்சு யோசிச்சு அழுது சண்டை போட்டுட்டு இருக்க கூடாது….live in the presentன்னு எடுத்த முடிவ மாத்திடுவேன்….” கிண்டலான மிரட்டலில் சிணுங்கலாய் தன் ரீசண்ட் தீர்மானத்தை சொன்னாள்….

கேட்க இவனுக்கு எப்படி இருக்கிறதாம்? அவனுக்குள்ளும் வந்து விழுகிறது ஒரு அழகான இலகு நிலை……கூடவே ஒரு எச்சரிக்கை உணர்வும்….. ‘டேய் விவன் பையா…..அப்டியே அவ சிரிச்சுட்டே இருக்க மாதிரி வச்சுகோடா…..சீரியஸா எதையாவது திங்க் பண்ணவிட்ட ஆனியன் பக்கோடாக்கு பதிலா அடுத்த பக்கோடா நீதான்…..’ அலர்ட் ஆனான் அவன்….

ஆக மார்போடு கை கட்டி……இடுப்பு வரை குனிந்து……ஒரு கையால் தன் வாயையும் மூடிக் கொண்டவன்…

“எஜமானியம்மா ஒரே ஒரு விஷயம் சொல்லிகலாங்களா….?” என மகா பவ்யமாய் அனுமதி கேட்டான்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.