(Reading time: 24 - 48 minutes)

மும்மி பாண்டிய அரசியாக ஏன் தகுதி உடையவள் என வரதுங்கன் அடுக்கிய எந்த குணங்களும் செயல்களும் தனக்கு இல்லை என்பது தான் முதலில் இவளை தாக்கிய விஷயம்….

மும்மி பாண்டியர்களிடம் விருந்தோம்பலை செயல்படுத்தி இருக்கிறாள்…… நட்பாய் நடந்திருக்கிறாள்….இவள் முதலில் பாராட்டியது விரோதம்…. பின்பும் மானகவசரையும் வரதுங்கரையும் உளவறிந்து நம்ப தொடங்கிய பின்னும் பராக்கிரமன் மீதும் பாண்டியத்தின் மீதும் சினத்தோடுதானே கிளம்பி இருக்கிறாள்….

அப்படியானால் மும்மிக்கு பாண்டிய அரசியாக தகுதி இருக்கிறது என்றால் இவளுக்கு தகுதி இல்லை என்றுதானே பொருள்…. இந்த புரிதலிலேயே பெரிதும் துவண்டுவிட்ட ருயம்மா

இதைத் தாண்டி எண்ணும் போது மற்ற விஷயங்களின் விபரீதம் உறைக்க நொறுங்குண்டு போனாள்….

இதுவரையும் இவள் மானகவசரை தளபதியாக மட்டுமே எண்ணி இருந்தாள்…. ஆயிரத்தில் ஒரு வாய்ப்பாய் இவள் பாண்டிய ராணியாக  நேர்ந்தாலும்…..போர்களை பொறுப்பேற்கும் தளபதிக்கும் அந்தபுரத்தில் அடைந்து கிடக்கும் ராணிக்கும் இடையில் எந்தவித நட்போ…..உணர்வு ரீதியான உறவோ.….தினசரி சந்திப்புகளோ இருக்கப் போவதில்லை….

ஆக அவரிடம் இவள் ஆடிய நாடகங்களை இவள் வெளிப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை என எண்ணி இருந்தாள். இவள் ருயம்மராய் ஆண் வேடமிட்டது இவளது தனிப்பட்ட சொந்த விஷயம்….

ஆனால் அதே மானகவசர் இவளது கணவர் எனும் போது இந்த அத்தனை நிலையும் மாறுகிறதுதானே…? கணவரிடம் இதை எவ்வாறு மறைக்க கூடும்?   அவரோடு இத்தனை அருகிலிருந்து பழகிவிட்டு…. இத்தனை காலம் அவரோடு பயணித்து விட்டு விவாஹத்திற்குப் பின் அந்த ருயம்மர் நான் இல்லை என இவளால் சொல்ல முடியுமா? அப்படி சொன்னாலும் நம்புவாராமா மானகவசர்? இரு துணுக்கு ஒளியை வைத்து எத்தனை தொலைவிலோ இருக்கும் எதிரிகளை அடையாளம் கண்டவர் இவள்தான் ருயம்மரும் ருயம்மாதேவியும் என கண்டு கொள்ளமாட்டாராமா?

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "பச்சைக் கிளிகள் தோளோடு..." - காதல் கலந்த கிராமத்து குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்..

இப்போதே ருயம்மாவாய் பெண் உடை அணிந்து முக்காடிட்டு முகத்தை மறைக்காதிருந்தால் அடையாளம் கண்டிருப்பார்தானே…?

கணவரிடம் வாழ்நாளெல்லாம் முக்காடிடவா முடியும்?  அரசியாய் இருப்பவள் அரசனையே ஏமாற்றினால் பின் குடிகளுக்கு எத்தகைய நீதி சொல்வாள்?

அனைத்துக்கும் மேலாக பொய்யுரைத்தா மானகவசரை மணந்து கொள்வது? அவர் நம்புவாரோ இல்லையோ இவள் இதயமே இவளை கொன்று புதைத்துவிடாதா…?

ஆக நிச்சய நிச்சயமாய் இவள் தான் ஆண் வேடமிட்டதை….. அதன் காரண காரியங்களை மானகவசரிடம் சொல்லியே பின்பே விவாஹ பந்தத்திற்குள் நுழைய வேண்டும்…..

அப்படி சொல்வதென்றால்….எதை சொல்வாள்…? ஆண் வேடமிட்டதில் தவறில்லைதான்….ஆனால்  பெற்றோருக்கு கீழ் படிந்து வாழவேண்டிய பெண்ணாகிய நான்…..அவர்களை மீறி….அவர்களை ஏய்த்து கோட்டையை விட்டு வெளியேறியதை எப்படி சொல்லவாம்?

பெரியவர்கள் சொல்பவர்களை மணப்பதுதானே பெண்களின் கடமை…….அதுதானே குணவதி என்பதன் அடிப்படை நாதம்…..நானோ அதை ஏற்காமல் எதிர்த்திருக்கிறேன்….. அரசகுமாரியாய் தேச நன்மைக்காக செய்ய வேண்டிய விவாஹத்தை மறுக்கிறேன் என்றால் தேசப்பற்றும் எனக்கில்லை என்றாகிறது…..

பெண்ணிற்கோ அரசகுமாரிக்கோ இருக்க வேண்டிய எந்த மாண்பும் எனக்கில்லையே…….

அனைத்திற்கும் மேலாய் அந்நிய ஆடவர்களுடன் தாய் வீடு, தாய் நாடு அனைத்தும் கடந்து வந்திறுக்கிறேன்…. ஓர் அறையில் இத்தனை ஆண்களுடன் திங்கள் கணக்கில் பயணம்….விஷயம் தெரிந்தால் என் தகப்பனே என்னை தீக்குளிக்க சொல்வார்… கணவரென்பவர் இதை எப்படி ஏற்பார்….?

இதையெல்லாம் எவ்வாறு சொல்ல? சொன்ன பின் ஏது விவாஹம்….?

எல்லாவற்றின் உச்சம்….இவளது இத்தனை நாடகத்திற்கும் அடிப்படையே இவளுக்கு பாண்டியத்தின் மீதுள்ள வெறுப்பல்லவா?

அதை சொல்லிய பின் இவளை அந்நாட்டு மன்னர்…. அதுவும் என் தேச மக்களை தாயாக பரிபாலிக்கும் துணைவி எனக்கு தேவை எனும் பராக்கிரமர் இவளை மணப்பாராமா?

தேசத்தை வெறுப்பவளுக்கு அத்தேசத்திற்கு அரசியாகும் தகுதி இல்லைதானே…..  

இத்தகைய நினைவுகள் தன்னை வதைக்கும் அளவில்தான் தான் மானகவசர் மீது பெரும் காதல் கொண்டிறுக்கிறேன் என்பதை ருயம்மா தெள்ளத்தெளிவாக உணர்ந்து கொண்டாள்… அப் புரிதலின் ஆய பயன் என்ன? நோவைத் தவிர எதையும் தரவில்லை அது…

இதே நினைவில் சில தினங்களாய் தனது அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தாள் அவள்….ஆம் அன்று அறையில் சென்று இறும் என மானகவசர் இவளை மரகலத்தின் மேல்தளத்திலிருந்து அனுப்பி வைத்த பின்….வெகு நேரம் சென்றும் அவரோ வரதுங்கரோ திரும்பி வரவில்லை…

அரசருக்கும் அமைச்சருக்குமிடையில் ஆயிரம் இருக்கும் என காத்திருந்தவள் எப்போது கண் மூடினாளோ துயிலில் தொலைந்து விட்டாள்….அதன் பின் வந்த நாட்களில் தன் காயம் குணமாகியதாக தெரிவித்து, விருந்தினரான இவளுக்குத்தான் இனி இவ்வறை என்றும் கூறி விட்டார் பாண்டிய பராக்கிரமர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.