(Reading time: 24 - 48 minutes)

வன் கிண்டல் மோடுக்கு தாவிவிட்டான் என ரியாவுக்கும் புரிய…..அது இவள் மனதுக்குமே தேவையாய் இருக்க…..

அலட்சியம் போல்  தலை சிலுப்பினாள்.….. ஸ்கூல் டேஸ் நியாபகம் வருகிறது இவளுக்கு…..அப்பல்லாம் அவன் செய்றது இவளுக்கு எதாவது பிடிச்சா கூட பிடிக்காத மாதிரி இப்படித்தான் கெத்தா மெயின்டெய்ன் செய்வா..….

அவ்வளவுதான் “ நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது….? .” என பாடத் தொடங்கினான் அவன்…. அதை கேட்டுக் கொண்டு இவள் மட்டும் சும்மாவா இருப்பாளாம்….. கையில் வைத்திருந்த கரண்டியால் ஒரு கொத்து அவன் தலையை நோக்கி…. விளையாட்டாய்தான்….

“ஓய்” என்றபடி அதற்கு விலகிய அவன்…..அவசரமாய் தன் கையில் கிடைத்த பூரி கட்டையால் அதை தடுத்தபடி…..

“கரண்டியை வீசியது….தீ கரண்டியை வீசியது….” எனப் பாட….

இப்போது சிக் டக் டக் சிக்….வாள் சண்டை…. நோ நோ கரண்டி vs பூரி கட்டை சண்டை…. முன்பு ஸ்கூலில் ஒரு ஸ்கிட்டில் இவங்க ரெண்டு பேரும் நடித்தது உண்டு….. ரியா ஒரு க்வின்…அவன் எதோ ஒரு வீரன் ரோல்…. இவங்க ரெண்டு பேருக்கும் சண்டை என்பது போல் சீன் உண்டு…

இவளின் இப்போதைய முதல் கரண்டி கொத்தை அவன் கட்டையால் தடுத்த விதத்தில் இருவருக்கும் அந்த வாள் சண்டை ஸ்டெப்ஸ் நியாபகம் வர…..அதன் படியே இவள் அடிக்க அவன் தடுக்க என ஒரு மலரும் நினைவுகள் சண்டை…

இதில் திடீரென …ஆ…ஸ்ஸ் என்றபடி தன் வலக் கண்ணை தேய்க்க தொடங்கினான் விவன்… அப்பொழுதுதான் உறைக்கிறது ரியாவுக்கு கரண்டியை  கொதிக்கும் எண்ணெயில் அல்லவா விட்டு வேலை செய்து கொண்டிருந்தாள்……அதில் ஒரு துளி அவன் கண்ணில் தெறித்தாலும் போதுமே…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா.வெ'யின் "கண்களின் பதில் என்ன? மௌனமா?" - அது பேசிடும் நாளும் வந்திடுமா..??

படிக்க தவறாதீர்கள்..

 “ஐயோ என்ன…? என்னாச்சு விவன்…?” என பதறியபடி அவனது கண்ணை மூடி இருந்த கையைப் பற்றி வேக வேகமாக விலக்கினாள் ரியா…. அழுதுவிடும் அளவு பதட்டம் அவளுக்கு…

அதே நேரம் அவனது பூரிகட்டை தட்டிவிட பறக்கிறது இவளது கரண்டி……வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்தான் விவன்…. “அழுரியாமாஆஆஆ” என கிண்டல் வேறு…

நடந்தது புரிய…… அதான் ப்ளான் பண்ணி வாள் சண்டையில இவள தோக்கடிச்சுட்டானே…. “போடா டிடிஎம்….” என்றபடி அவனுக்கு முதுகு காட்டி திரும்பி நின்று கொண்டாள் இவள்…

இவளது இடப் பக்க தோளை தட்டிவிட்டு வலப்பக்கம் போய் நின்ற அவனோ…”ஓய் இந்த ஸ்டெப்ல நீ குத்தி நான் செத்துறுக்கனும்….ஒரு மனுஷன் எத்தன தடவதான் உன் கையால சாக….அதான்” என்றவன்

“ராஜா கைய வச்சா…அது ராங்கா போனதில்ல…..” என பாடியபடி  துள்ளலாய்  கிட்சன் மேடையில் ஏறி அமர்ந்தான்…..

வெடுக்கென திரும்பிய அவள் வாயிலிருந்து வந்து விழுகிறது வார்த்தை “fraud!!!!”

 கிண்டலாக சொல்ல நினைத்ததுதான் என்றாலும்….அவள் மனதில் அவன் மீது அப்படி ஒரு இமேஜ் இருப்பதாலோ என்னவோ….அந்த fraud சொல்லப்பட்ட வகையில் அது விளையாட்டில்லை என தெரிகிறது…. காரம்.

விவனுக்கு அவள் மனதில் என்னவென்றெல்லாம் ஐடியா இல்லை எனினும்….இந்த fraudன் வித்யாசம் உணர்ந்தவன்…

“நிஜமாவே கண்ல தூசி ரியு….என்ன அதை யூஸ் செய்துகிட்டேன்…..கேம் தானே…” என குற்றம் சுமத்தப்பட்ட மனிதனின் இயல்பின்படி தன்னிலை விளக்கினான்.

அப்போதுதான் அவனது கண்ணை கவனித்தாள் ரியா…

இடக்கண்ணை சற்றாய் சுருக்கியும் விரித்துமாய் சமாளிக்க முயன்று கொண்டிருந்தான் அவன்…..

இப்போது இவள் என்ன செய்ய வேண்டும்? அவனை நெருங்கி செல்வது நிச்சயமாய் செய்யக் கூடாத காரியம்…. போன டைம் அந்த பூச்சிகடி விஷயத்தில் நடந்த விஷயமே வாழ்க்கைக்கும் போதும்…..இவளப் பத்தி அவன் என்னதால்லாம் நினைக்கானோ…?...மெல்லமாய் அவன் மீதிருந்த பார்வையை திருப்பிக் கொண்டாள்…..

ஆனால் முழு நிமிடம் கூட அப்படி அவனை தவிர்க்க இயலவில்லை…. இதற்குள் அவன் கண் சற்று சிவந்து  நீர் வடியப் போவது போல் இருக்கிறது…. கண்ணை கசக்க கூடாதென நினைத்திறுந்த தன் முடிவை காற்றில் பறக்கவிட்டான் அவன்…

“தண்ணியால கண்ண கழுவுங்க….சரியாகிடும்…” இவள் தான் வழி சொன்னாள்…

அருகிலிருந்த வாட்டர் பியூரிஃபையரிலிருந்து தண்ணீர் பிடித்தும் நீட்டினாள்…. இவள் சொன்னதை செயலாக்கியும் அவன் கண்ணில் உறுத்தல் குறைந்தபாடில்லை என்பதை அடுத்த சிலநொடிகளில் அவள் புரிந்து கொள்ள…

சின்சியராய் எதோ வேலை செய்வது போல் எதை எதையோ குடைந்தாள்…. அவனைப் பார்ப்பதை தவிர்த்தாள்.

அதே நேரம்…..வீட்ல இருக்கிறது ரெண்டு பேர்……இதுல ஒருத்தர்க்கு இப்டி ப்ரச்சனைனா அடுத்தவங்க தானே செய்ய முடியும் என ஒன்று அடித்துக் கொள்கிறது அவளுக்குள்……. இல்ல வேண்டாம் என இன்னொன்றோ பாய்ந்து பாய்ந்து தடுக்கிறது…… இதில் அடுத்த நிமிடத்தின் முடிவில் மெல்ல மெல்ல நடந்து போய்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.