(Reading time: 24 - 48 minutes)

கிட்சன் மேடையில் சற்று உள்ளே தள்ளி அமர்ந்திருந்த அவன் கண் எட்டுவதற்காக அவன் மீது அல்மோஸ்ட் சாய்ந்து, அவன் கண்ணை தன் இரு கைகளாலும் பிரித்து தூசி போக ஊதிக் கொண்டிருந்தாள் பெண்….  

மீண்டுமாய் அவள் அவனிடமிருந்து விலகும் போது அவள் பார்வையில் படுகிறது அவனது இறுக மூடிய முஷ்டிகள்….. தப்பி தவறி கூட இவள தொட்டுடக் கூடாதுன்னு நினைக்கிறான்…..இவள் மீது அவனுக்கு நிச்சயமாய் காதல் காமம் என்ற எந்த கண்றாவியும் இல்லை…..தோன்றுகிறது இவளுக்கு….

Live in the present…….தலையை உலுக்கி மனதை வேறு திசையில் செலுத்த முயன்றாள்…

உண்மையில் விவனின் நிலை இவள்  நினைத்ததற்கு மிக மிக ஆப்போசிட்…. இவள் அவன் மீது சாய்ந்து அவன் கண்ணுக்கு நேராக குனிய….திறந்திருந்த அடுத்த கண்ணில் படுகிறது  அடர்பிங்கில் வயலட் நிற சிறு பூக்கள் தெளித்த அவளது சாரியும்….அதற்கும் அவள் கழுத்துக்கும் இடையில் கிடக்கும் இவனது செயினும்…..

நாசியில் இறங்கி கமழ்கிறது காலையில் இவன் சூட்டிவிட்டிறுந்த பூசர வாசம்….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "பாயும் மழை நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

அத்தனை நேரம் அலைந்து வந்திறுந்த மன நிலைக்கும்....குளித்து வந்திறுந்த இப்போதைய உடல் நிலைக்கும்….பஞ்சாலாகிய குட்டி தீவு போல இவன் மீது வந்து அவள் சாய்வது எப்படி இறுக்கிறதாம்?

அதுவும் அவள் கழுத்திலிறுக்கும் இவன் செயினும்….இப்போதைய இவள் செயலும் தெரிவிக்கும் காதலும், கணவன் என்ற உரிமையும் என்னவெல்லாம் செய்ய சொல்லுகிறதாம்…?

இரு கைகளாலும் அவளது இடையோடு இழுத்தணைத்து……குவித்திறுக்கும் அவள் உதடுகளில் ஒலியற்று, உயிர்கொண்டு இறங்கினால் என்ன?

அன்று ஃபர்ஸ்ட் நைட் அப்ப இருந்த கட்டுப்பாடு நிச்சயமாக இவனுக்கு இப்போது இல்லை…..காரணம்  ரியா இவர்கள் திருமணத்தை முழு மனதாக ஏற்றிறுக்கிறாள் என்பது இவனுக்கு அதன் பின் வந்த புரிதல்…

உறவிறுக்கிறது, உரிமை இருக்கிறது, காதலும் இருக்கிறது இருவருக்கும் பொதுவாக….. செயல்படுத்தினால் என்ன என்கிறது இளந்தேகம்…

ஆனால் அவள் காதலை அவள் முழுதாய் உணரும் முன்னும், உணர்வின் அடிப்படையில் செய்து வைக்கும் இந்த காரியம் இவர்களது உறவுக்கு சாவு மணியாய் அமைய கூடும்….

ஆக அணைக்க துடித்த இரு கைகளையும் இறுக மூடிக் கொண்டான்….

சில கணங்கள் தன்னவளை நேருக்கு நேராக பார்க்க தவிர்த்தவன் மீண்டுமாய் அவளைப் பார்க்கும் போது இரண்டு கப்புகளில் டீயை ஊற்றிக் கொண்டிருந்தாள் அவள்…. ‘கொஞ்சமே கொஞ்சம் அவ ஃபேஸ் டல்லடிக்குதோ..?’ கவனித்தவன்..

“ஹேய் நீ இன்னும் எனக்கு டிடிஎம்க்கு மீனிங் சொல்லல” என ஆரம்பித்தான்…. ஸ்கூல் பத்தி பேச அவளுக்கு பிடிக்கிறது என்பது இவனது புரிதல்……

“எப்டில்லாமோ யோசிச்சு பார்த்திறுக்கேன் தெரியுமா…..கண்டே பிடிக்க முடியல…” அவன் தான்.

“அதெல்லாம்  சொல்ல முடியாது….” நொடித்துக் கொண்டாள் அவள்….. எடுத்து வந்து டீகப்பை இவனிடம் நீட்டினாள்…

அதை வாங்கியபடியே…” ஹேய் சும்மா சொல்லு ரியு….” இவன்..

“அதெப்படி சும்மா சொல்றதாம்….எவ்ளவு பெரிய தங்கமலை ரகசியம் அது…..”

“சரி சும்மா ஒன்னும் சொல்ல வேண்டாம்…...கமிஷன் வாங்கிட்டே சொல்லு…”

“ஓ அந்த அளவுக்கு ஆகிப் போச்சா? அப்ப கமிஷன் என்ன தருவீங்கன்னு சொல்லுங்க…. அப்றமா சொல்லாமா வேண்டாமான்னு பார்ப்போம்….” எல்லாமே கேலி கிண்டலாக பேசிக் கொண்டதுதான்….. ரியா அதை அடுத்து மறந்தும் விட்டாள்…

ஆனால் அதை விவன் மறக்காமல் போனதினால் செய்து வைத்த செயல் அவர்களது இருவரது வாழ்க்கையையும் அடியோடு மாற்றிப் போட்டது….. அதோடு அவனை ஒரு வினோதமான விபரீதமான ஆபத்தில் கொண்டு நிறுத்தியது….

நாளை என்ன வரவிறுக்கிறது என தெரியாமல் இன்றைய இரவில் சற்று இனிமையாகவே தூக்கத்திற்குள் சரணடைந்தாள் ரியா… அங்கு இன்னுமே மஞ்சத்தில்தான் விழுந்து கிடந்தாள்  ருயம்மா…..

தான் தான் பாண்டிய மன்னன் பராக்கிரமன் என மானகவசன் வெளிப்படுத்திக் கொண்டதன் மொத்த வீச்சும்….அது அவளது வாழ்வில் எத்தனை வகையில் என்னவெல்லாம் செய்ய இயலும் என்பதையும் உடனடியாக உணர்ந்து முடித்துவிட இயலவில்லை ருயம்மாவுக்கு….

விஷயம் புரிபடவும் அவள் முதன் முதலில் அலசியது தான் மானகவசன் எதிர்பார்க்கும் பெண் இலக்கணப்படி இருக்கிறோமா என்பதைத்தான்…..அது அவனுக்கு மனையாளக இருக்கும் விருப்பத்தினால் என்று கூட தோன்றவில்லை அவளுக்கு…. நம் மரியாதைக்கும் அபிமானத்துக்கும் உரிய ஒருவர்…..இத்தகைய பெண் தான் என் இதயத்திற்குந்தவள் எனும் போது…..இயல்பாய் தோன்றும் ஒரு ஒப்பீடு எனதான் எண்ணிக் கொண்டாள்….

இதற்குள் வரதுங்கன் வர…அவரின் வார்த்தைகளில் தான் இவள் முதன் முதலாக சூழ்நிலையின் சிக்கல்களை உணர துவங்கினாள்…..கூடவே அவள் பாண்டிய அரசியாக தகுதி அற்றவள் என்பதையும்…..தனக்கு மானகவசர் மீது பெருங்காதல் இருக்கிறது என்பதையும்…..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.