(Reading time: 24 - 48 minutes)

முன்பானால் அது எவ்வாறு தோன்றி இருக்குமோ….இப்போது மன்னரின் ஆணை என்று மட்டுமே தோன்றுகிறது….ஆக மறுவார்த்தை இன்றி சிரமேற்றாள்……மேலும் பெண்ணாகிய இவளுக்கு இத் தனியறை அவசியமும் கூட….

கிடைத்த தனியறைக்குள் சர்வ காலமும் அடைந்து கிடந்தாள் ருயம்மா…… யாரையும் எதற்காகவும் சந்திக்க மனம் ஒப்பவில்லை….மானகவசரை பார்த்துவிடும் ஆவல் ஒன்று ஏறுமுக எரிமலையாய் இவளுக்குள் எரிந்து கொண்டிருந்தாலும்….. கனவாகிப் போக இருக்கும் காதலுக்கு ஏன் தீனி இட என இன்னுமாய் தன் மனம் கொண்டவனை தவிர்த்தாள்….

ஆனாலும் போஜன வேளைகளில் அனைவரும் இணைந்து உணவு உண்பது என்பது அங்கு சட்டம்…..ஆக அந்த மூன்று வேளையும் கடமையாய் போய் பெயரளவில் எதையோ உண்டுவிட்டு வந்துவிடுவாள்….

அத்தகைய வேளைகளில் கௌரவ இருக்கை போலும் எப்போதும் வேந்தருக்கு அடுத்த இருக்கை விருந்தினர் என்ற வகையில் இவளுக்குத்தான்…….நேருக்கு நேராய் அவர் கண்களை சந்தித்தால் எங்கே இழப்பின் வேதனையில் கண்ணீர் சிந்திவிடுவோமோ என்ற அச்சத்தில் மானகவசரை பார்ப்பதை தவிர்க்கவும் இந்த இருக்கை அமைப்பு இவளுக்கு பேருதவி செய்தது….

சில தினங்கள் இவ்வாறு கழிந்திறுக்க…… அன்றும் இராப் போஜனத்திற்கு இவள் சென்றிருந்தாள்…. உணவுப் பதார்த்தங்கள் நடுவில் இருக்க அனைவரும் அவரவர்க்கு பரிமாறிக் கொள்வதுதான் அங்கு கடை பிடித்து வரும் வழமை…. அதன் படி இவள் தனக்கென ஒரு சோள ரொட்டியை எடுத்து வைத்துக் கொள்ளும் நேரம் காதில் விழுகிறது அருகிலிருந்த மானகவசனின் குரல்….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "பைராகி" - முன்ஜென்மம் சொல்லும் கற்பனை வரலாற்று நாவல்...

படிக்க தவறாதீர்கள்..

“சேகரா……ருயமர் இதை முடித்து இன்னுமொரு ரொட்டியையும் எடுத்தாரானால்தான்  உண்மையில் இக்குறுகிய காலத்தில் நீ காகதீய உணவு சமைப்பதை கற்றுவிட்டாய் என நான் ஒப்புக்கொள்வேன்…..அடுத்த பின் பனிக்காலம் வரைக்குமே உனக்கு மனை இறை ( பாண்டியர் கால வீட்டு வரி) நானே செலுத்தி விடுவேன்….பார்க்கலாம் இன்று அதிர்ஷ்டம் உன்பக்கம் இருக்கிறதா என….?”

சற்றாய் அதிர்ந்து போனாள் ருயம்மா……அதன் பின்புதான் இவள் கவனத்தில் வருகிறது பதார்த்தங்கள் எல்லாம் காகதீய வகை என…..மரகலத்தில் சமைப்பது என்பது வெகு இயல்பான ஒன்று இல்லை…..அதில் இவளுக்காக இத்தனை மெனக்கெட்டுக்கிறார்கள்…

பேச்சு வழக்கில் கூட வெளியாட்கள் காதில் விழும்படி தன்னை மன்னர் என வெளிப்படுத்திக் கொள்ள கூடாதென்பதால் நானே செலுத்துவேன் என மானகவசர் குறிப்பிட்டாலும் அவர் வரிவிலக்கு அறிவிக்கிறார் என்பது வரை இவளுக்கு புரிகிறது…

என்னதிது என்னை வைத்து சிறுபிள்ளைத்தனமான விளையாட்டு என தோன்றினாலும், வெகுவாகவே முயன்று மீண்டுமாய் எடுத்து சாப்பிட்டுவிட்டே எழுந்தாள் இவள்…..எது எப்படியாயினும் ஒரு குடியானவனுக்கு வரிவிலக்கென்பது எத்தனை மகிழ்வான ஒன்று என இவளுக்கும் தெரியும்….

இவளுக்காக முயன்று செய்த ஒருவருக்கு இதை நிச்சயமாய் செய்யலாம் இவள்…

போஜன வேளை முடியவும் அந்த சேகரனும் அவர்களது அணியும் ஏதேதோ கேலியும் குதுகலமுமாய் இந்த வரிவிலக்கை கொண்டாடவென மரகலத்தின் மேல் தளத்திற்கு கிளம்பிச் செல்ல

சற்று நேரம் உம்மிடம் பேச வேண்டும் ருயமரே என அழைத்தான் மானகவசன்…

இம்முறையும் உரையாடலில் வரதுங்கரும் உடன் இருக்க….இவர்களுக்கான பொது அறையில்  மூவருமாய் அமர்ந்திருக்க சம்பாஷணையை துவக்கினான் பாண்டிய வேந்தன்…. அது சம்பாஷணையா இல்லை விசாரணையா?

அதன் பின் விளைவு என்ன?????

தொடரும்

Episode # 13

Episode # 15

{kunena_discuss:1063}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.