(Reading time: 3 - 5 minutes)

Chillzee Stories Memorable quotes collection - 05 - May 2016

Memorable

1. 

அன்பு அடக்கி ஆளாது
அடிமைப்படுத்தாது
அன்பு வதைக்காது
வலி நீக்கும்
கொண்டவர்க்கும்
கொடுப்பவர்க்கும்
இன்பம் சேர்க்கும்
சிலுவையில் கூட

- ANNA SWEETY - Kaniyatho kathal enbathu - 05 - Shared by Flower

 

2. 

நிரந்தரப் பிரிவை எதிர்கொள்ள காலம் அதற்கு மருந்து என்றார்கள். எவ்வளவு காலம் என்று யாராவது சொன்னதுண்டா? அல்லது, யாருடைய காலம் என்று சொன்னதுண்டா?

- LAVANYA - Muthal Kathal - Shared by Jansi

3.

 வரும் விதி வரினும் வருவது முற்றும் நன்மையே என நம்பி வாழ்வேன்

- NEELA - En uyirsakthi # 11 - Shared by Prama

4. 

கணவன் மனைவி உறவு என்பது தான் கடைசி வரை கூட வருவது…..அம்மாவாக இருந்தாலும் ஒரு எல்லை வரையே இருக்க வேண்டியவர்கள். அவர்களை பாசத்தோடு பாதுகாக்க வேண்டியது நமது கடமை….அதற்கு மேல் அவர்களுக்காக யோசித்து, நாம் நம் உறவில் விரிசல் ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது.

- Devi - Anbe unthan sancharame - 05 - Shared by Anna Sweety

5. 

வாழ்க்கை ஒரு அற்புதமான பயணம் ..அது எல்லோருக்கும் ஒரே விதமான அனுபவத்தை கொடுத்து விடாது .....அவரவர் பயணத்தில் தோன்றும் அனைத்தையும் இன்முகத்தோடு சந்தித்து பயணிப்பதே வாழ்க்கையின் சுவாரஸ்யம்

- PRAMA - Kanamoochi re re - 23 - Shared by Flower

6.

குரோதம் அது வெறும் பகையை மட்டும் குறிக்கும் சொல்லா?குரோதம் என்ற சொல்லை உச்சரித்து பாருங்கள்...அச்சொல்லை சொல்லும்போது இயற்கையாக உங்கள் முகம் கொண்ட தேஜஸ் குலைந்துபோகும்.ஆம்..குரோதம் என்ற சொல்லே பாவத்தின் திறவுகோல்.
விரோதிக்கும் மனதில் பொறாமை எண்ணம் குரோதத்தை வளர்கிறது.
ஒருவரின் இயலாமை மற்றொருவருக்கு இயன்று போனால் பொறாமை துளிர்கிறது.
ஆனால் ஒன்று உறுதி!!
குரோதம் யாரிடம் கொள்ளப்படுகிறதோ அவர் அழிவதை காட்டிலும் ஆயிரம் மடங்கு வேகமாய் குரோதம் கொள்பவர் அழிந்துப் போகிறார் என்பதில் ஐயம் வேண்டியதில்லை.

- SAKI - Sathi endru saranadainthen - 12 - Shared by Thenmozhi

7.

எல்லாக் கடவுளும் ஒன்றுதான் என்பதன் அர்த்தம் இப்போதுதான் எனக்குப் புரிகிறது! சமயத்தைப் பற்றி ஒன்றும் தெரியாமல் இருந்து விட்டால் எல்லாச் சமயமும் ஒன்றுதானே?

- WINNI - Muthalaam vaguppu - Shared by Anusha

8.

முழ்கிட்டு இருக்கோம்னு தெரியும் போது கையில புதையலே இருந்தாலும் விட்டுட்டு நீச்சல் அடிச்சால் தான் உயிர் பிழைக்க முடியும். இல்லைன்னா மூழ்கி போக வேண்டியது தான்

- BINDU VINOD - Pani paarai - 04 - Shared by Thenmozhi

9.

விதி என்பதை வெல்ல இறைவனாலும் முடியாத போது மனித ஜன்மம் என்ன செய்ய இயலும். தெய்வ பிறப்பான ராமரை வன வாசம் செல்ல வைத்தது விதி அன்றோ?
சீதா தேவியை விட்டு ராமரை பிரித்து வைத்து சதி செய்தது விதி அன்றோ?
குப்பைதொட்டியில் பிறந்தவன் நாடாள்வதும் நாடாளும் மன்னன் மகன் படுக்கையில் உணவின்றி இறப்பதும் விதி செய்யும் சதி அன்றி வேறென்ன?
இந்த உலகில் ஒரோரு உயரும் உயிர் பெற்று விழும் முன் அவனுடைய எதிர்காலம் எழுதப்பட்டு விடுகிறது. உன் பிறப்பின் நோக்கமும் அதிலே எழுதப்படுகிறது.

- Renuga Devi - Anal mele pani thuli - 02 - Shared by Thenmozhi

10.

இந்த பூமியிலே எல்லாரும் வாழறது மிஞ்சி மிஞ்சி போனா எண்பது, எண்பத்தஞ்சு வருஷம்டா. அதுக்கப்புறம் நாம நினைச்சாலும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்க முடிய போறதில்லை. அதுக்குள்ளே ஏண்டா உன்னை பார்த்த எனக்கு பிடிக்கலை என்னை பார்த்தா உனக்கு பிடிக்கலைன்னு சண்டை?

- VATHSALA - Ullam varudum thendral - 18 - Shared by Sivaranjani

Apr 2016 quotes 

{kunena_discuss:788} 

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.