(Reading time: 1 - 2 minutes)

குட்டிக் கதைகள் – 78. சேவல் கண்டுப்பிடித்த மாணிக்கம்!

ரு ஊரில் ஒரு சேவல் இருந்தது!

  

அதற்கு அன்று பயங்கர பசி. வழக்கமான இடங்களில் அதற்கு ஏற்ற உணவு ஒன்றும் கிடைக்கவில்லை.

  

அதனால் புதிய தோட்டம் ஒன்றை அடைந்து அங்கே தன் கால் நகங்களால் தரையில் தோண்டி தோண்டி தன் பாணியில் உண்ண உணவை தேடியது.

  

அப்போது அது ஒரு கல்லைத் திருப்பவும், அதன் கீழ் ஒரு பளபளக்கும் மாணிக்கம் இருப்பதைக் கண்டுப் பிடித்தது.

  

சேவல் அந்த மாணிக்க கல்லை சுற்றி சுற்றிப் பார்த்தது!

  

"இது பார்க்க நன்றாக தான் இருக்கிறது. ஒரு சிலருக்கு இது மதிப்பு மிக்கதாக கூட இருக்கலாம். ஆனால் இதை விட தானியம் ஏதாவது கிடைத்திருந்தால் என் பசியாவது குறைந்திருக்கும்!" என்று நினைத்துக் கொண்டே உணவு தேடும் வேலையை தொடர்ந்தது!

  

கருத்து:

  

மாணிக்கங்களோ விலை உயர்ந்த ரத்தினங்களோ பசியைப் போக்காது!

  

பணத்தை விட உணவு தான் அவசியம்!

   

2 comments

  • gud story. i can think of another moral too.<br /><br />எந்த ஒரு பொருளின் மதிப்பும் அதை வைத்திருப்பவரின் அறிவிற்கும், தேவைக்கும் ஏற்ப வேறு படும் ;-)

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.