(Reading time: 2 - 3 minutes)

கருத்துக் கதைகள் – 30. பாசம் - Chillzee Team

Old man

ன்னுடைய வயதான தந்தையை அந்த பிரசித்தி பெற்ற ஹோட்டலுக்கு அழைத்து சென்றான் அவன்.

வயதானவர் என்பதால் ஹோட்டலில் பரிமாற பட்ட உணவுகளை உண்ணும் போது அவனின் தந்தை உணவை தன் மீதும், டேபிளின் மீதும் சிந்திய படி உண்டார்.

இது அங்கே உணவருந்தி கொண்டிருந்த மற்றவர்கள் பலரையும் முகம் சுழிக்க வைத்தது. ஆனால் அவன் அமைதியாக இருந்தான்.

தந்தை சாப்பிட்டு முடிக்கவும், பொறுமையாக அவரின் கையையும், முகத்தையும் கழுவ உதவி, பில் பணத்தை கொடுத்து விட்டு, அவரின் கையை ஆதரவுடன் பிடித்து நடந்தான் அவன்.

மற்றவர்கள் இப்பொழுதும் அவர்கள் இருவரையும் வெறித்து பார்த்தபடி இருந்தனர்...

இப்படி பொது இடத்தில வந்து தன்னை தானே இவர் அசிங்கப் படுத்திக் கொள்ள வேண்டுமா என்று சிலர் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்...

அதை எதையும் கண்டுக்கொள்ளாமல், தந்தையின் கையை பற்றிக் கொண்டு நடந்தான் அவன்.

அப்பொழுது அங்கே இருந்த ஒரு பெரியவர், அவனிடம்,

“தம்பி, நீ எதையோ மறந்து விட்டு போகிறாய்...” என்றார்.

அவனோ, “இல்லை சார், நான் எதையும் மறக்கலை....” என்றான்.

“இல்லை தம்பி, இங்கே இருக்கும் மகன்கள் ஒவ்வொருவருக்கும் வயதான அப்பாவை எப்படி கவனிக்கனும்னு ஒரு விலை மதிப்பு இல்லாத பாடத்தை விட்டுட்டு போகிறாய்.... அதே போல நம் மகனும் நம்மை இப்படி கவனிப்பான்னு ஒவ்வொரு தந்தைக்கும் நம்பிக்கையை விட்டு போகிறாய்...” என்றார்.

அங்கே இருந்த அனைவரும் இப்போது அசந்து போய் அமர்ந்திருந்தனர்.

 

நம் அனைவருக்கும் நம் பெற்றோர் எப்படி சின்ன விஷயம், பெரிய விஷயம் என்ற பாகுபாடு இல்லாமல் நம்மை பாசத்துடனும், அன்புடனும், பரிவுடனும் வளர்க்கிறார்கள் / வளர்த்தார்கள் என்பது தெரியும்.

நம்மை கனிவோடு பாதுகாத்து வளர்த்த(ப்ப)வர்களை அதே போல கவனிப்பது நம் கடமை.

Let us all love our parents, respect our parents and care for our parents.

Story # 29 - Kathavugal

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.