(Reading time: 4 - 7 minutes)

மீண்டும் அது கண்ணில் படவே இல்லை. மீண்டும் சோர்ந்து போய் உணவு உண்பதற்காக மரத்தடிக்கு வந்தார்கள்.

  

மரத்தடியில் உட்கார்ந்து மீண்டும் கட்டுச் சோற்றை எடுக்கும் போது பக்கத்துப் புதர் சல சலத்தது. ஒருமுயல் அவர்கள் முன்னே குதித்தது. பர பரவென்று ஏறி எதிரில் இருந்த ஓர் அரச மரத்தின் கிளையில் குந்திக் கொண்டது. அவர்களை உற்றுப் பார்த்தது.

  

மாதவன் வியப்புடன் சொன்னார். நானும் வனத்துறையில் பத்து ஆண்டுகளாகப் பணி புரிகிறேன். மரமேறும் முயலை இது வரை பார்த்ததேயில்லை . இது ஒரு விந்தைதான்!''

  

"விந்தையல்ல ; மூடத்தனம்!'' என்று ஒரு குரல் கேட்டது.

  

இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். மற்றொரு வனத்துறை அதிகாரி குமரன் என்பவர் அவர்களை நோக்கி நடந்து வந்தார்.

  

"குமரன், அதோ பார்த்தாயா? மரக்கிளையில் ஒரு முயல் குட்டி! நீ இதுவரை முயல் குட்டி மரமேறிப் பார்த்ததுண்டா? என்று மாதவன் கேட்டார்!

  

'காலங் கெட்டுவிட்டது' என்றார்.

  

"காலம் கெட வில்லை ; உங்கள் கண் தான் கெட்டுவிட்டது! கண்களைக் கசக்கிக் கொண்டு நன்றாகப் பாருங்கள் !'' என்றார் குமரன்.

  

முருகனும் மாதவனும் உற்றுப் பார்த்தனர்.

  

உண்மையில் மரக்கிளையில் ஏறி உட்கார்ந்து கொண்டிருந்தது முயலல்ல; ஒரு வெள்ளைப் பூனைக் குட்டி !

  

அந்தப் பூனைக் குட்டி எழுந்து நின்று அவர்களைப் பார்த்து மியாவ்' என்றது.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.