(Reading time: 10 - 20 minutes)

விட்டனர்.

  

திருடன் பிடிபட்டதைக் கண்டு மற்றவர்களும் ஓடி வந்தனர். கூட்டம் கூடிவிட்டது. எல்லோரும் திருடனை உதைத்து அவன் அறுத்து வந்த தங்கச் சங்கிலியை அந்தச் சிறுமிக்குத் திருப்பிக் கொடுத்தனர்.

  

சிட்டுக் குருவிகள் மகிழ்ச்சியுடன் தங்கள். கூட்டுக்குத் திரும்பின.

  

இன்று நாம் அந்தச் சிறுமிக்கு உதவி செய்தோம். இது தெரிந்தால் கடல் தேவதை மிகுந்த மகிழ்ச்சியடைவாள்' என்று அவை பேசிக் கொண்டன.

  

மறுநாள் வழக்கம் போல் அவை கடற் கரைக்குச் சென்றன. தீனி பொறுக்கித் தின்று கொண்டிருந்தன.

  

அப்போது அவற்றின் மீது ஒரு வலை வந்துவிழுந்தது. எதிர்பாராத இந்த ஆபத்தைக் கண்டு அவை திடுக்குற்றன. வலையை இழுத்துச் சுருக்கிக் கொண்டிருந்த மனி தனைத் திரும்பிப் பார்த்தன.

  

முதல் நாள் சங்கிலி திருடி அகப்பட்டு அடி வாங்கிய திருடன் தான் அவன்.

  

என்னைக் காட்டிக் கொடுத்தீர்களா? இன்று பாருங்கள். உங்களை என் பூனைக்கு

  

விருந்து வைக்கிறேன்! “ என்று பல்லைக் கடித்துக்கொணடே பேசினான் அந்த மனிதன்.

  

சிட்டுக் குருவிகளுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அந்தக் கொடிய திருடனமிருந்து எப்படித் தப்பிப் பிழைப்பதென்றும் புரியவில்லை.

  

ஒன்றை யொன்று பார்த்து விழித்தன.

  

கடற்கறை ஓரத்தில் ஒரு குடிசையை நோக்கி அந்த மனிதன் விரைந்தான். அந்தக் குடிசையின் முன்னே ஒரு முரட்டுப் பூனை உட்கார்ந்திருந்த்து.

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.