(Reading time: 10 - 20 minutes)

  

அந்தச் சிட்டுக்குருவிகள் இரண்டும் தூக்கம் வரும்வரை தேவதையைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தன. அவளுடைய அழகைப் பற்றியும், இனிய மொழிகளைப் பற்றியும், அன்பான பார்வையைப் பற்றியும், அவள் சொன்ன நல்ல கருத்தைப் பற்றியும் பேசிக்கொண்டே தூங்கின.

  

தூக்கத்தில் கூட அந்த அழகான தேவதை நேரில் வந்து அவற்றோடு அன்பாகப் பேசிக் கொண்டிருப்பது போல் கனவு கண்டன. அந்த நல்ல தேவதையின் நட்புக் கிடைத்தது பற்றி அவை மகிழ்ச்சியடைந்தன.

  

ஒரு நாள் இரண்டு சிட்டுக் குருவிகளும் கடற்கரையில் தீனி பொறுக்கித் தின்று கொண்டிருந்தன. தீடீரென்று மழை பெய்யத் தொடங்கியது. உடனே, கடற்கரையில் காற்று வாங்க வந்திருந்த அனைவரும் எழுந்து ஓடினர்.

  

சாலைக்கு வந்து பேருந்துகளில் ஏறக் காத்திருந்தனர். சிறிதுநேரத்தில் ஒரு பேருந்து வந்து நின்றது. மக்கள் முட்டி மோதிக்கொண்டு பேருந்தில் ஏற முயன்றனர்.

  

பேருந்தில் ஏறிக் கொண்டிருந்த ஒரு சிறுமியின் கழுத்தில் இருந்த சங்கிலியை கூட்டத்தில் கலந்திருந்த ஒரு திருடன் அறுத்துக் கொண்டு ஓடினான்.

  

"ஐயோ, சங்கிலி சங்கிலி' என்று அந்தச் சிறுமி கதறினாள். உடனே பேருந்து நின்றது. பேருந்தில் படிக்கட்டில் நின்ற பலர் திருடனை விரட்டிக் கொண்டு ஓடினர். திருடன் மிகவேக மாக ஓடினான். யாராலும் பிடிக்க முடியாது போல் இருந்தது.

  

மழைத் தூறல் நின்றுவிட்டது.திருடனைத் துரத்தியவர்களில் சிலர் அங்கங்கே கால் ஒய்ந்து நின்று விட்டனர். ஐந்து பேர் மட்டும் எப்படியாவது பிடிப்பதென்ற உறுதியில் ஒடிக் கொண்டிருந்தனர்.

  

மழை நின்றதும் சிட்டுக் குருவிகள் பறந்தன. ஒடிக் கொண்டிருக்கும் திருடன் மீது பாய்ந்தன. அவன் முகத்தின் மீது பாய்ந்து பாய்ந்து கொத்தின. அவன் ஒட முடியாமல் தடுமாறினான். அப்போது பின்னால் விரட்டிக் கொண்டு வந்தவர்கள் நெருங்கி வந்து அவனைப் பிடித்து

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.