(Reading time: 11 - 22 minutes)

விரட்டி விரட்டி அலுத்துப்போன பிரம்மா, என்ன இது தொல்லையாக இருக்கிறது. இந்த இடத்தை விட்டுப் போகிறாயா இல்லையா?' என்று கேட்டார்.

  

எனக்கு வால் வேண்டும். வால் தருகிறவரையில் சும்மா இருக்க மாட்டேன். கடவுளே என்னை எங்கெங்கோ சுற்ற வைத்தீர்கள். யார் யாரையோ கெஞ்ச வைத்தீர்கள், நானும் சுற்றாத இடமில்லை, பார்க்காத உயிர் இனங்கள் இல்லை. எல்லா விலங்கு களுக்கும் வால் தேவையாம், யாரும் தங்கள் வாலை இழக்க விரும்ப வில்லை. அப்படிப் பயனுள்ள வாலை எனக்கும் தரவேண்டும். வால் தருகிற வரையில் உங்களைச் சுற்றிச்சுற்றி வருவேன்.

  

வால் இல்லாமல் உலகத்திற்குத் திரும்ப மாட் டேன் என்று சாதித்தது ஈ.

  

பிரம்மா மலைத்துப் போனார். இந்த ஈயிட மிருந்து எப்படித் தப்புவது என்று சிந்தித்தார்.

  

அப்போது அவர் பார்வை கீழ் நோக்கித் திரும்பியது.

  

கீழே பூவுலகில் ஒரு மலையடிவாரத்தில் ஒரு பசுமாடு புல்மேய்ந்து கொண்டிருந்தது.

  

உடனே பிரம்மாவுக்கு ஓர் எண்ணம் பளிச் சிட்டது.

  

ஏ ஈயே! எல்லாரிடமும் கேட்டாய். பசுவிடம் கேட்டாயா?' என்று கேட்டார். 'இல்லை ' என்றது ஈ.

  

பார்த்தாயார்? யார் கொடுக்கக் கூடியவர்களோ, அவர்களை விட்டுவிட்டு யார் யாரிடமோ கேட்டுக் கொண்டு வந்திருக்கிறாய்.

  

இப்போது நீ நேரே பசுவிடம் போ. அதன் வாலைக் கொடுக்க முடியுமா என்று கேட்டுக் கொண்டு வா” என்றார் பிரம்மா.

  

ஈ சொன்னது: ”கடவுளே, இப்போதே நேரே போகிறேன். பசுவிடம் கேட்கிறேன். அது கொடுக்க ஒப்புக் கொண்டால் சரி. இல்லாவிட்டாலும் நான் திரும்பி வருவேன். எனக்கு வால்

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.