Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
சினிமா சுவாரசியங்கள் - அன்று : வீடில்லாதவர் – இன்று : படத்திற்கு 70 கோடி சம்பாதிக்கும் நடிகர் - 5.0 out of 5 based on 1 vote
Pin It

சினிமா சுவாரசியங்கள் - அன்று : வீடில்லாதவர் – இன்று : படத்திற்கு 70 கோடி சம்பாதிக்கும் நடிகர்

ங்கில படங்கள் பார்க்கும் பலருக்கும் தெரிந்த பெயர் க்றிஸ் பிராட்.

கார்டியன்ஸ் ஆப் கேலக்ஸி, ஜூராசிக் வொர்ல்ட், அவேஞ்சர்ஸ் என பல பிரபலமான படங்களில் நடித்து புகழ் பெற்றவர் க்றிஸ்.

போன வருடம் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்ட் ஸ்குவாஷ்நேக்கர் மகளை திருமணம் செய்து இன்னும் நிறையப் பேரை அவர் பக்கம் பார்க்க வைத்தவர்.

 

க்றிஸ் பிராட்க்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டவசமானது என்றும் சொல்லலாம்!  

வாஷிங்கடனில் வளர்ந்த க்றிஸ் பள்ளி படிப்பை முடித்து விட்டு நடிப்பு சொல்லி தரும் அரசு கல்லூரியில் படித்தார். அது அவருக்கு சரியாக ஒத்து வரவில்லை. ஒரே செமஸ்டரில் கல்லூரியை விட்டு வெளியே வந்து விட்டார்.

 

டிக்கட் விற்பவராக மட்டுமல்லாமல் ஸ்ட்ரிப்பர் ஆகவும் வேலை செய்த க்றிஸ்க்கு நண்பர் ஒருவர் ஹவாய் செல்ல டிக்கட் வாங்கிக் கொடுத்தார்.

 

அங்கே வீடு இல்லாமல் கிடைக்கும் வேலையை செய்து வேனில் சுற்றிக் கொண்டு வாழ்ந்தார் க்றிஸ்.

  

அப்படி ஒரு ரெஸ்டாரன்ட்டில் சர்வராக வேலை செய்தப் போது ரே டான் சாங் எனும் நடிகை அங்கே வந்தார். டான் ஒரு படம் டைரக்ட் செய்வது பற்றி யோசித்துக் கொண்டிருந்த நேரம் அது.

அவருக்கு உணவு செர்வ் செய்த க்றிஸ் ஸ்மார்ட்டாக இருப்பதாக தோன்றவும் நடிக்க ஆர்வம் இருக்கிறதா என்று அவரிடம் கேட்டார்.

  

து தான் க்றிஸின் ஹாலிவுட் வருகைக்கான டிக்கட்.

 

அதற்காக க்றிஸ் அடுத்த வினாடியே ஹீரோ ஆகி விடவில்லை.

 

டான் க்றிஸ் வைத்து எடுத்த குறும் படம் ரிலீஸாகவில்லை!

  

வேறு வழி இல்லாமல் க்றிஸ் ஹாலிவுடில் சர்வர் வேலையை தொடர்ந்தார். பணம் சேர்த்து வைக்க அங்கே சாப்பிடுபவர்கள் மிச்சம் வைக்கும் உணவை எடுத்து சாப்பிடுவாராம்! அவரே ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார்.

 

டிவி தொடர்கள், படங்கள் என அனைத்திலும் சின்ன சின்ன ரோல்கள் செய்த க்ரிஸ்க்கு எவர்வுட் எனும் டிவி சீரியலில் சொல்லும் படியான வாய்ப்பு கிடைத்தது!

அதன் பிறகு வேறு டிவி தொடர்கள், டிஸ்னி, மார்வல் படம் என்று தொடர்ந்து இப்போது ஒரு படத்திற்கு பத்து மில்லியன் (~ 70 கோடி இந்திய ரூபாய்) சம்பாதிக்கும் நடிகராக உயர்ந்து இருக்கிறார் க்றிஸ்!

  

க்றிஸ் நடிகராக வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டவசமானது என்றாலும் அவருடைய விடா முயற்சியும், தன்னம்பிக்கையும் அவரை இன்று பிரபல நடிகராக உயர்த்தி இருக்கிறது!

Pin It

About the Author

-

Latest Books published in Chillzee KiMo

  • AndrilAndril
  • I MyselfI Myself
  • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
  • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
  • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
  • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
  • Un nesam en suvasamUn nesam en suvasam
  • Unnai kan thedutheUnnai kan theduthe

Add comment

Comments  
# RE: சினிமா சுவாரசியங்கள் - அன்று : வீடில்லாதவர் – இன்று : படத்திற்கு 70 கோடி சம்பாதிக்கும் நடிகர்maya000 2020-02-13 10:16
:clap: :clap:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: சினிமா சுவாரசியங்கள் - அன்று : வீடில்லாதவர் – இன்று : படத்திற்கு 70 கோடி சம்பாதிக்கும் நடிகர்ரவை 2020-02-13 07:19
Incredible yet true! Useful info.
Reply | Reply with quote | Quote
# RE: சினிமா சுவாரசியங்கள் - அன்று : வீடில்லாதவர் – இன்று : படத்திற்கு 70 கோடி சம்பாதிக்கும் நடிகர்madhumathi9 2020-02-13 07:04
:clap: (y) :-)
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top