(Reading time: 5 - 9 minutes)

ர்ச்சிலுக்கு கீழே வேலை செய்யும் இளம்பெண் ஒருத்தி மூடுபனி மூடிய சாலையை கடக்க முயற்சி செய்யும் போது விபத்தில் இறந்து விடுகிறாள். இந்த நிகழ்வு சர்ச்சிலுக்கு மக்களின் நிலையை தெளிவாக விளக்க காரணமாக இருக்கிறது. மருத்துவமனைகள், டாக்டர்கள், நர்ஸ்கள் அனைவருக்கும் கூடுதல் உதவி செய்ய முடிவு செய்கிறார். அதே நேரம் இந்த காற்று மாசுக்கு காரணம் என்ன என்று கண்டுப்பிடித்து இன்னொரு முறை இப்படி நடக்காமல் தடுக்க விசாரணை கமிஷனை அமைப்பதாகவும் அறிவிக்கிறார்.

ந்து நாட்கள் லண்டன் மக்களை தவிக்க விட்டு, பல ஆயிரம் பேர் இறக்க காரணமாக இருந்த மூடுப்பனி மெல்ல கலைந்துப் போகிறது.

  

ர்ச்சில் மீண்டும் எலிசபெத்தை சந்திக்கிறார். எலிசபெத்திற்கு சர்ச்சில் மூடுப்பனி நெருக்கடியை கையாண்ட விதம் பிடிக்கவில்லை என்றாலும், தன் தந்தை வழியை பின்பற்றி அரசியல் அமைப்பில் மூக்கை நுழைக்காமல் பொதுவான விஷயத்தை மட்டும் அவரிடம் பேசுகிறாள். சர்ச்சில் அவள் மனதில் இருப்பதை புரிந்துக் கொண்டு அவளின் அறிவுக்கூர்மையை மனதில் மெச்சிக் கொள்கிறார். அதனாலேயே எலிசபெத்தின் கணவர் விமானம் ஓட்ட தடை வராமல் பார்த்துக் கொள்ள முயல்வதாக உறுதி அளிக்கிறார்.

  

லிசபெத் தன் பாட்டியை சந்தித்து மனதில் இருக்கும் விரக்தியை கொட்டுகிறாள். ஒருவேளை மூடுப்பனி ஐந்து நாட்களில் விலகாமல் இருந்து, இன்னும் பலர் இறந்திருந்தால், என்ன ஆகி இருக்கும்? அப்போதும் சர்ச்சில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் போயிருந்தால் என்ன ஆகி இருக்கும்? ராணியாக இருந்துக் கொண்டு அதை எல்லாம் பார்த்துக் கொண்டு அரசியலமைப்பு, இறையாண்மை என வாயைத் திறக்காமல் அமைதியாக தான் இருக்க வேண்டுமா என்று கோபப்படுகிறாள்.

பெரியவராக அவளுக்கு அறிவுரை வழங்குகிறார் பாட்டி. ராணியாக இருப்பவர்கள் பிடிக்கிறதோ இல்லையோ, நடு நிலையில் தான் இருந்தாக வேண்டும். இந்தப் பக்கம், அந்தப் பக்கம் என்று எந்தப் பக்கமும் சப்போர்ட் செய்து பேசக் கூடாது. அது சரி கிடையாது என்கிறார்.

ராணியாக இருப்பது தன தனிப்பட்ட வாழ்க்கையை, உரிமையை பல விதங்களில் பாதிக்கும் என்பதை எலிசபெத் புரிந்துக் கொள்கிறாள். தனக்கென்று தனியான கருத்து இருப்பதைக் கூட வெளிக் காட்ட முடியாது என்று வருத்தப்படுகிறாள். இன்னொரு பக்கம், பிலிப் எந்த இடைஞ்சலும் இல்லாமல் விமான பயிற்சியை தொடர்கிறார்.

ஒரு அரச பரம்பரையின் insider view போன்ற இந்த வெப் சீரீஸ் உலகெங்கும் மிகவும் பிரபலம். நீங்களும் இதன் பார்வையாளர் என்றால் உங்கள் கருத்தையும் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.