(Reading time: 5 - 10 minutes)

பெரியவங்க சொல்றதை கேட்கனும்!

Kids

ன்றைய காலக்கட்டத்தில் யார் நல்லவர், யார் கெட்டவர் என்பதை கண்டுப்பிடிப்பது பெரியவர்களுக்கே கஷ்டம்.

இதில் குழந்தைகளிடம் பெரியவர்கள் அனைவரும் நல்லவர்கள், அவர்கள் சொல்வது எல்லாம் சரி என்று சொல்லி வளர்த்தால், குழந்தைகள் கண்ணை மூடிக் கொண்டு யாரையும் நம்பி விடவும் வாய்ப்பு உண்டு.

 

எனவே பொதுப்படையாக இல்லாமல், குடும்பத்தில் இருப்பவர்களை வைத்து குழந்தைகளிடம் சொல்ல வேண்டும்.

அம்மா, அப்பா சொல்றதை கேட்கனும்

தாத்தா பாட்டி சொல்றதை கேட்கனும்

 

அதே போல தெரியாதவர்களிடம் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் சொல்லி வளர்க்க வேண்டும்.

 

அந்த பாப்பா பாரு, எவ்வளோ நல்ல பாப்பாவா இருக்கு!

Kids

ரு குழந்தையை மற்ற குழந்தையுடன் ஒப்பிடுவது எப்போதுமே, எந்த காரணத்திற்க்காக இருந்தாலும் தவறு தான்!

 

இது போன்ற பேச்சுக்கள் குழந்தைகளின் தன்னம்பிக்கையை பாதிக்கும். என்னால் எதையும் சரியாக செய்ய முடியாது என்ற எண்ணத்தை குழந்தை மனதில் விதைக்கும்.

 

எனவே, ஒப்பீடு செய்யாமல், ‘நீயும் நல்ல பாப்பாவா இருக்கனும்’ என எடுத்து சொல்லலாம்.

 

எல்லாத்தையும் நீயே வச்சுக்க கூடாது ஷேர் செய்

Kids

ன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருக்கும் வீடுகளில் பொதுவாக காதில் விழும் வார்த்தைகள் இவை.

 

பெற்றோராக நாம் சொல்ல வருவது சரி என்றாலும், அதை சரியான விதத்தில் சொல்லாவிட்டால், குழந்தைகளிடம் பொறுப்புணர்வு இல்லாமல் போக வாய்ப்பிருக்கிறது.

 

எதுவுமே என்னுடையது இல்லை. எல்லா பொருட்களையும் நான் பகிர்ந்துக் கொள்ள வேண்டும், என்ற எண்ணம் குழந்தைகளிடம் ஏற்பட்டால், அது அவர்கள் சிறியவர்களாக இருக்கும் போது வெளியே தெரியாது ஆனால் வளர்ந்த பின்பு எதிலும் மற்றவர்களுக்கு விட்டுக் கொடுத்து ஏமாளி ஆக நிற்கலாம்.

அதே போல இது என் கடமை, என் பொறுப்பு என்ற உணர்வும் இல்லாமல் போகலாம்.

 

எனவே குழந்தைகளுக்கு புரியும் வண்ணம்,

கொஞ்சம் நேரம் உன் டாயை விளையாட கொடு.

நீ அந்த டாய் வச்சு விளையாடு, அந்த பாப்பா இந்த டாய் வச்சு விளையாடட்டும்

என சொல்லலாம்.

 

யார் உனக்கு இதை சொல்லி தந்தது?

Kids

ல வீடுகளில் அவ்வப்போது நாம் கேட்கும் கேள்வி இது.

 

இது போன்ற கேள்விகள் மற்றவர் மேல் பழி போட்டால் நான் தண்டனை இல்லாமல் தப்பித்துக் கொள்ளலாம் எனும் எண்ணத்தை குழந்தைகளுக்கு கொடுக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

 

எனவே நாம் கேட்கும் கேள்வியில் வேறொருவரை நுழைக்காமல், ‘ஏன் இப்படி செய்த?’ என குழந்தையிடம் நேரடியாகவே கேட்கலாம்.

தவறான பழக்கத்தை வேறு யாரிடமாவது கற்றிருந்தால் அதை தெரிந்துக் கொண்டு அந்த குழந்தையை சீர் செயலாம்.

 

ந்த பட்டியலில் விட்டுப் போன கேள்விகள், வாக்கியங்கள் இருப்பதாக உங்களுக்கு தோன்றினால், அதை கமன்ட்சில் பகிருங்கள். இந்த கட்டுரையை படிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும். நன்றி!

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.