அந்த ஆள் கூட வந்த ஒரு முரடன்னை ஒரு மிதி மிதித்து பாருங்க அந்த ஆளு இங்க சண்டே முடிஞ்சு போன பின்னாடி கூட இன்னும் எழும்பல. நாங்க அந்த ஆளு சத்துதான் போய்ட்டானு நெனச்ட்டோம்ம் ஆனா அவன் மயக்கத்தில் கிடந்தான். கொண்டுபோய் ஆஸ்பத்திரியில் தூக்கிப் போய் போட்டோம் அந்த மாதிரி பண்ணுச்சு ஒரே அடிதான் பேசினா அத்தனை பயலும் வாயை மூடிக்கொண்டான்.
ரௌடி ராக்கம்மா என்று மனதினுல் கொஞ்சிக் கொண்டான் தன்னவளை. அப்பாரம் என்ன ஆச்சி அண்ணா என்று ஆற்வத்துடன் கதையும் கேட்டான்.
பொண்ணு விஷயம் ஆச்சுனு அய்யா வெளி யார்கிட்டயும் சொல்லக்கூடாது தெரியக்கூடாது என்று பார்த்தால் ஆனாலும் இவனுங்க நல்லா வாங்கிக் கொண்டுதான் போனானுங்க. எங்க அம்மா இருக்கும்போது யார் வந்தாலும் பெண்ணை தொட முடியாது . படிக்கிற இடத்தில ஒரு பையன் இருந்தான் எல்லா ஊதாரித்தனம் பண்ணிக்கிட்டு போற வர பிள்ளைகளை கிண்டல் பண்ணிட்டு திரிஞ்சான் இந்தப் பிள்ளையோட உடம்பு ஊன்னத அவன் கிண்டல் பண்ண , இந்த புள்ள கூட படிக்கிறவங்க எல்லாம் கிண்டல் பண்றாங்க நான் போகமாட்டேன் என்னால போக முடியாது என்னால இந்த மாதிரி எல்லாம் எல்லார் முன்னாடியும் போய் உட்கார்ந்து படிக்க முடியாது அப்படின்னு சொல்லி அழுதது. நம்ம பாப்பாக்கு மனசு தாங்கல காமாட்சி புள்ள தாத்தா கிட்ட உக்காந்து அழுதுட்டு இருக்கு அதை கண்டுக்காத மாதிரி போனவங்க கொஞ்ச நேரத்தில உள்ள வந்துட்டாங்க திரும்பவும் அவங்க பாட்டுக்கு அவங்க வேலைய பாத்துட்டு இருந்தாங்க பார்த்தா ஒரு ரெண்டு மணி நேரத்துல இந்த பிள்ளையை கிண்டல் பண்ணுனவன் அவன் கூட நின்னவன் எல்லாரும் வரிசையா வராங்க கூட அவங்க காலேஜ் பிரின்சிபால் கூட கூட்டிட்டு வந்தாங்க. இந்த பிரின்சிபல் காரன் இருக்கான் இல்ல அவன் நம்ப ஐயா கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டு இவனுங்களை மன்னிக்க கேட்டு வச்சு அந்த பிள்ளையையும் இவனுங்களே காலேஜுக்கு கூட்டிட்டு போற மாதிரி செஞ்சு இப்ப வரைக்கும் அந்த பசங்க எல்லாம் காமாட்சி புள்ளைக்கு நண்பர்கலா தான் இருக்கானுங்க. நல்லா பார்த்துக்குவாங்க வயசு வித்தியாசம் இருக்கும் காமாட்சி அந்த பிள்ளைகளுக்கும் என கொஞ்ச நாளைக்கு ஸ்கூலுக்கு எங்கேயும் போகாமல் வீட்டில் வைத்திருந்தாக அதனால ஆனாலும் நம்ம பாப்பா எல்லாத்தையும் சரி பண்ணிடுச்சு .