பவ் பாப்பாவ காமாட்சி பாப்பாவோட பொறுப்பில் கொடுத்துட்டு தான் தரணி தாத்தாவும் போய் சேர்ந்துட்டாரு. பாரிஜாதம் அம்மா இருந்தாங்க அவங்க காமாட்சியை தான் பொண்ணு மாதிரியே பார்த்தாங்க . எல்லா விஷயத்துக்கும் காமாட்சி பாப்பாவும் முன்ன வச்சி செய்வாங்க யாரும் அந்த பாப்பாவ எதுவும் சொல்லிவிடாமல் பாத்துட்டாங்க . அதுக்கேத்த மாதிரி ஐயா கிட்டயும் அம்மா கிட்டயும் இருக்க குணமும் நிறைய காமாட்சி அம்மா கிட்டே இருக்கு நம்ம பாப்பா அவங்க கிட்ட இருக்க கம்பீரமும் காமாட்சிக்கு கொஞ்சம் கொடுத்துட்டாங்க யாருமே எந்த விஷயத்துக்கும் அவங்க கிட்ட பேசுறதுக்கு கொஞ்சம் எட்ட நின்னு தான் பேசுவாங்க.
காமாட்சி பாப்பாவை அவ்வளவு ஈசியா யாராலும் நெருங்கவே முடியாது அப்படியே நெருங்க எதுவும் மரியாதை இல்லாம பேச வாய்ப்பே இல்லை பாப்பாவும் யாருக்கும் வாய்ப்பு கொடுத்தது கிடையாது
பாப்பா எங்கேயாவது வேல விஷயமா வெளியே போகுதுன்னு காமாட்சி அம்மா கிட்ட தான் எல்லா பொறுப்பையும் கொடுத்துட்டு போகும் காமாட்சி அம்மா என்ன முடிவெடுத்தாலும் அதுல இந்த ஃபேக்டரியில் இருக்கிறவங்க ஒத்துக்கணும் அவங்கள மீறி இங்கு எதுவும் நடக்காது
காமாட்சி பாப்பா எடுத்த முடிவு ஏதும் சரியா வரல அப்படின்னா இந்த மாதிரி வந்த இந்த விஷயம் நடக்குமே அதனால இது பண்ணலாமா செய்யலாமா செஞ்சா என்னென்ன வரும் அப்படின்னு எட்டவே இருந்து சொல்லிக்கொடுக்கும் ஆனா எப்பவுமே அவங்க முடிவுல எந்த மாற்றத்தையும் கொண்டுவராது நீங்கள் செஞ்சா சரியாதான் இருக்கும் அப்படி என்கிற நம்பிக்கை பாப்பா அதுவும் வச்சிருக்கு காமாட்சிக்கும் கொடுத்து இருக்கு நீ என்ன செஞ்சாலும் அதை நான் ஒத்துக்குறேன் அப்படிங்கற மாதிரி
ஹவ் நைஸ் -ஈஷ்வர்.
ஆமாம் தம்பி அந்த காமாட்சி பாப்பா இருக்கு இல்ல ரொம்ப திறமைசாலி என்று கேள்விப்பட்டு இருக்கேன் எங்க மீட்டிங் அட்டென்ட் பண்ண போனாலும் நம்ம பாப்பா அந்த பொண்ண நம்பி தான் நம்ப முழு ஃபேக்ட்டரியையும் விட்டு போகும் அந்த பாப்பாவும் நம்ம