(Reading time: 9 - 17 minutes)
Aariloru pangu
Aariloru pangu

"ஓம்" என்று கூறி ஆசீர்வாதம் செய்தார்.

“பால ஸந்யாஸி, கபட ஸந்யாஸி, அர்ஜுன ஸந்யாஸி; உன் பக்கம் சீட்டு விழுந்தது” என்றார்.

மீனா பிழைத்துவிட்டாள் என்ற தெரிந்து கொண்டேன்.

"முற்றிலும் சௌக்கியமாய் விட்டதா?" என்று கேட்டேன்.

"பூர்ணமாக சௌக்கியமாய் விட்டது. இன்னும் ஓரைம்பது வருஷத்திற்கு ஸமுத்திரத்திலே தள்ளினாலும் அவளுக்கு எவ்விதமான தீங்கும் வரமாட்டாது" என்றார்.

"அப்படியானால், நான் போகிறேன். அவள் இறந்துபோகப் போகிறா ளென்ற எண்ணத்தினாலேதான் என் விரதத்தைக்கூட மறந்து, அவளைப் பார்ப்பதற்காகப் பறந்தோடி வந்தேன். இனி, அவளைப் பார்த்து, அவளுட. னிருக்கவேண்டுமென்ற எண்ணம் எனக்கில்லை, நான் போய்வருகிறேன்” என்று சொன்னேன்.

அசுவினி பாபு கடகடவென்று சிரித்துவிட்டுப் பக்கத்தி லிருந்த சேவகனை நோக்கி “இவருக்குக் கொஞ்சம் பால் கொணர்ந்து கொடு" என்றேவினார்.

அவன் முகம் கழுவ நீரும், அருந்துவதற்குப் பாலும் கொணர்ந்து கொடுத்தான். அசுவினி குமாரர் அந்தப் பாலை விரலால் தீண்டி என்னிடம் கொடுத்தார். அந்தப் பாலை உட்கொண்டவுடனே, திருக்குற்றாலத்து அருவியில் ஸ்நாநம் செய்து முடித்ததுபோல், எனது உடலிலிருந்த அயர்வெல்லாம் நீங்கிப் போய் மிகுந்த தெளிவும், செளக்கியமும் அமைந்திருக்கக் கண்டேன்.

"இப்பொழு தென்ன சொல்லுகிறாய்? புறப்பட்டுப் போகிறாயா?" என்று அசுவினி பாபு புன்னகையுடன் கேட்டார்,

"அவளை ஒருமுறை பார்த்துவிட்டு, அவளிடம் விடை பெற்றுக்கொண்டு செல்லுகிறேன்” என்றேன்.

திடீரென்று அசுவினி பாபுவின் முகத்தில் இருந்த புன்னகை மாறி சிரத்தாரூபம் தோன்றியது. அப்பால் என்னிடம், “மகனே, நீ மீனாம்பாளை மணஞ் செய்து கொள்வாய். நீங்களிருவரும் சேர்ந்து வாழ்ந்து, முற்காலத்தில் ரிஷியும் ரிஷி பத்தினியுமாக தேவயக்ஞம் செய்ததுபோல, உங்கள் வாழ்நாள் முழுதும் மாதாவுக்குப் பிரீத்யர்த்தமாக ஜீவயக்ஞம் புரியக் கடவீர்கள்" என்றார்.

"காளி தேவியின் கட்டளை என்னாகிறது?" என்று கேட்டேன், இந்த ஜன்மத்திலே நீ கோவிந்தராஜனை மணஞ் செய்து கொள்ளலாகாதென்று காளி தேவி மீனாளுக்கு கூறி, அவளை விஷந் தின்னும்படியாகக் கட்டளை யிட்ட செய்தியை அவருக்கு நினைப்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.