(Reading time: 7 - 13 minutes)
காகித மாளிகை
காகித மாளிகை

Flexi Classics தொடர்கதை - காகித மாளிகை - 11 - (முப்பாள ரங்கநாயகம்ம) (தமிழில் - பா. பாலசுப்பிரமணியன்)

" மாம். இத்தனெ நாள் என் கஷ்டங்களெக் கேட்டு புரிஞ்சிக்கக் கூடிய அண்ணன் ஒருத்தனாவது இருக்கறான்னு, அவன்கிட்டெ சொல்லிக் குறெஞ்சது இரக்கமாவது பெறலாம்னு பேராசெ வெச்சிருந்தேன். போவட்டும், என்னெப் புரிஞ்சிக்கிட்டேன்னு சொன்னாவாவது எனக்குத் திருப்தியா இருக்கும். இனிமே எனக்கு யாரும் இல்லே. யாரும் இல்லே." பானு முழங்கால்மேல் தலையை வைத்தக்கொண்டு விக்கி விக்கி அழுவதைப் பார்க்கும்பொழுது என் மூளையே குழம்பிவிட்டது. என் கண்கள்கூட நிறைந்துவிட்டன. பானுவின் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டேன்.

" பானூ! தங்கச்சி! என்னெ எவ்வளவு தப்பா புரிஞ்சிக்கிட்டேம்மா!"

பானு தலை யெடுத்துப் பார்த்தாள்.

" நீ ஏதோ கஷ்டத்தலெ அவதிப்பட்டு வர்றேன்னு எப்பவோ ஊகிச்சேன். ஆனா உன்னெக் கேக்கற்துக்கு தைரியம் வரலே. இன்னக்கி நீ சொன்ன தெல்லாம் கேக்கக் கேக்க என் மனசு எவ்வளவு வேதனெப் படுதோ உனக்குத் தெரியுமா? உன் கண்ணுலே யிருந்து நீர் வழிஞ்சா என்னெ எப்படி ரம்பம் வெச்சி அறுக்கறா மாதிரி இருக்குதுங்கற்தெ நீ கிரகிக்க முடியுமா? பானூ! உன்னெ நான் புரிஞ்சிக்கலேன்னு நினெக்கறியா? ஆனா என் மனசிலே இருக்கற்தெ யெல்லாம் வெளியே சொல்லி உன்னெ இன்னும் வேதனெப் படுத்தற்லே லாபம் என்ன சொல்லு? மென்மையான உன் மனசு உடெஞ்சு போனா, உன் புருஷன் மேலே நீ வெறுப்பெ அதிகமாக் கிக்கிட்டா உடெஞ்ச கண்ணாடி திரும்ப ஒட்டிக்குமா? உன் மனசெப் பாழாக்கற்துக்கே என்னெ உதவி செய்யச் சொல்றியா? இத்தனெ நாள் நட்பெ எவ்வளவு லேசா தூக்கி எறிஞ்சிட்டெ பானூ!"

" அண்ணா!" பானு ஈரக் கண்களுடன் உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தாள். "பானூ! சாரதா என் சொந்தத் தங்கெ! ஆனா எந்த வகெயிலும் சாரதாவுக்கு இந்த அண்ணனின் உதவி தேவெயில்லே. வேண்டிய புடவெங்க, நகெங்க, பொருளுங்க அம்மா அப்பா குடுத்து வர்றாங்க. சாரதாவோட மனசு உன் மனசுபோல மென்மெயான தில்லே. அப்படிப்பட்டவங்களுக்கு மானசீகமான வேதனெயே இருக்காது. அண்ணாவாக நான் ஏதாவது வழியிலே உதவி செய்ய முடிஞ்சிதுன்னா அது உனக்குத்தான்."

"என்னெ மன்னிச்சுடு அண்ணா! நான் அவசரப் பட்றேன்னு நீயே சொல்றே இல்லே? எனக்கு யாருமில்லேன்னு நினெச்சேனே தவர-- அது உண்மெயில்லே. எனக்கு நீ இருக்கறே. உன்னெத் தவர என்னெ நேசிக்கறவங்க யாருமில்லே" என்றாள் தன் கையால் என் கண்களைத் துடைத்துகொண்டே.

அந்தக் கையைப் பிடித்துக் கொண்டேன். "தப்பு பானூ! மாமாவுக் கப்புறம்தான் நான். ஒரு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.