(Reading time: 8 - 15 minutes)
Irulum oliyum
Irulum oliyum

Flexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 18 - ஸரோஜா ராமமூர்த்தி

இருளும் ஒளியும் : 18 'அந்தப் பெண் யார்?'

திறப்பு விழாவுக்கு இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பு ரகுபதியின் அத்தை அலமேலு 'திடு திப்' பென்று கிராமத்திலிருந்து வந்து சேர்ந்தாள். ஒற்றை மாட்டு வண்டியில் மூட்டை முடிச்சுகள் -கிதம் அவள் வந்து இறங்கியதுமே ஸரஸ்வதிக்கு அலமு அத்தை வெறுமனே வரவில்லை; வெறும்வாயை மெல்லுகிறவளுக்கு ஒரு பிடி அவல் கிடைத்த சமாசாரமாக வம்பை அளக்க வந்திருக்கிறாள்' என்பது புரிந்துவிட்டது. "அத்தை! அத்தை ! உன் நாத்தனார் வந்திருக்கிறாரே. இனிமேல் நீ இதுவரையில் ஒருத்திக்கும் பயப்படாமல் இருந்த மாதிரி இருக்க முடியாது! வீட்டு விஷயங்களை மூடி மூடி ரகசியமாகவும் வைத்துக்கொள்ள முடியாது. அலமு அத்தை இருப்பது கிராமமாக இருந்தாலும் ஆல் இந்தியா ரேடியோ'வுக்குச் செய்திகள் எட்டுவதற்கு முன்பே அவளுக்கு எட்டிவிடும் தெரியுமா?" என்று பின் கட்டுக்கு விரைந்து விஷயத்தை அறிவித்தாள் ஸ்ரஸ்வதி. ஸ்வர்ணம் ஸரஸ்வதியின் கன்னத்தில் லேசாகத் தட்டி, "அடி பெண்ணே ! இன்னும் நீ குழந்தையா என்ன? வாயைத் திறக்காமல் தான் கொஞ்சம் இரேன். வாயும் கையும் 'பர பரவென்று ஏன் தான் இப்படி இருக்கிறாயோ?" என்று கடிந்து கொண்டே நாத்தனாரை வரவேற்கக் கூடத்துக்கு வந்தாள்.

வண்டியிலிருந்து இறங்கிய நாலைந்து தகர டப்பாக்கள், புடைவையில் கட்டப்பட்ட மூட்டை ஒன்று, - சிறிய பிரம்புப் பெட்டி இவைகள் புடைசூழ அலமு காலை நீட்டிக்கொண்டு கூடத்தில் உட்கார்ந்து சாவித்திரியும் - ரகுபதியும் கல்யாணத்தின் போட்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். நடையில் கதவுக்கு அருகில் சற்று ஒதுங்கி பயத்துடன் நின்றுகொண்டிருந்த ஒரு பெண்ணை அதுவரையில் யாரும் கவனிக்கவில்லை. அலமு அத்தை வண்டியிலிருந்து இறங்குவதைப் பார்த்ததுமேதான் ஸரஸ்வதி பின்கட்டுக்கு விஷயத்தை அறிவிக்க ஓடிவிட்டாளே? தயக்கத்துடன் அந்தப் பெண்ணைப் பார்த்து ஸரஸ்வதியும், ஸ்வர்ணமும், “உள்ளே வாயேன் அம்மா" என்று அழைத்தார்கள். அவர்கள் அழைத்ததைக் கேட்டவுடன் அலமு முகத்தைத் திருப்பி நடைப்பக்கம் பார்த்துவிட்டு, "இதென்னடி இது அதிசயம்? உள்ளே வாயேன் தங்கம். கல்யாணப் பெண் மாதிரி ஒளிந்து கொண்டு நிற்கிறாயே!" என்று அதட்டலுடன் அவளைக் கூப்பிட்டாள். பதினாறு பதினேழு வயது மதிக்கக்கூடிய அந்தப் பெண் பயந்து கொண்டே உள்ளே வந்து அத்தை அலமுவின் பக்கம் உட்கார்ந்து கொண் டாள். அலமு அத்தை சுவரில் மாட்டியிருந்த புகைப்படத்திலிருந்து கண்களை ஒரு சுழற்றுச் சுழற்றி ரகுபதியின் மனைவி எங்கே இருக்கிறாள் என்று அறிவதற்காகக் கூடத்தை ஒரு கோடியிலிருந்து மறு கோடிவரைக்கும் ஆராய்ந்தாள். சாவித்திரி புக்ககத்தில் கோபப்பட்டுக்கொண்டு பிறந்தகம் சென்றிருக்கிறாள் என்பதும் அவளுக்கு

2 comments

  • அந்தக் காலத்திலே, ராஜம் கிருஷ்ணனும் அநுத்தமாவும் எழுதுவதுபோல அருமையாக உள்ளது! பாராட்டுக்கள்!

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.