(Reading time: 7 - 13 minutes)
Visiri Vazhai
Visiri Vazhai

சிரித்துக்கொண்டே கேட்டாள் பாரதி.

"ஆமாம்; வீட்டை விட்டுப் புறப்படும்போது பிரின்ஸி பாலிடம் சொல்லிக் கொள்ளாமல் தானே வந்தாய்?”

அதை உங்களுக்கு யார் சொன்னது?

"உன் தலை!''

"என் தலையா?” என்று தன் தலையைத் தொட்டுப் பார்த்தாள் பாரதி.

ஓகோ! இந்த மாதிரிக் கொண்டை போட்டுக்கொண்டு பிரின்ஸிபால் எதிரில் போயிருக்க மாட்டேன்னுதானே கேட்டீங்க? பிரின்ஸிபால் கிட்டே சொல்லிட்டுத்தான் வந்தேன்.''

அப்ப, பிரின்ஸிபாலிடம் சொன்ன பிறகு கொண்டை போட்டுக் கொண்டிருப்பாய்!”

"சரி, காட்டுக்குப் போகலாம் வாங்க.....”

ராஜா அவளைக் கிண்டி எஸ்டேட் வனத்துக்குள் அழைத் துச் சென்றான்.

ரொம்ப அழகாயிருக்கே இந்த இடம்” என்றாள் பாரதி.

''நீ கூட இன்று ரொம்ப அழகாயிருக்கே. உன்னை இந்த இடத்தில் இப்போது ஒரு படம் எடுக்கப் போகிறேன். இந்தக் காடு ஓர் ஆசிரமம் மாதிரி இருக்கிறதா? பக்கத்திலே மான்கள் வேறு சஞ்சரிக்கிறதா? நீயும் ரிஷி குமாரி மாதிரி வந்திருக்கிறாயா? இந்தச் சூழ்நிலையிலே உன்னைப் படம் எடுத்தால் அசல் சகுந்தலை மாதிரியே இருக்கும்!”

"ஏன் ஒரு சினிமாவே எடுத்துடுங்களேன்.....!”

"ஐயோ, வேண்டாம்; புராணிக் பிச்சராயிடும். எடுத்தால் ஸோஷல் எடுக்கணும்.''

"சரி சரி, போட்டோ எடுங்க”.

ராஜா காமிராவை எடுத்துச் சரி செய்து கொண்டான்.

எங்கே! இப்படிக் கொஞ்சம் என்னைப் பாரு! லிட்டில் ஸ்மைல் !... வெரி குட்! ஒன், டூ, த்ரீ! தாங்க்ஸ்” என்றான் ராஜா.

ஒரு மானைப் பிடித்து வந்தால் அதோடு சேர்ந்து ஒரு படம் எடுத்துக் கொள்ளலாம்...'' என்றாள் பாரதி..

''நான் ராமன் இல்லை. மானைத் துரத்திக்கொண்டு போவதற்கு - துஷ்யந்தன்...!'' என்று கூறிச் சிரித்தான் ராஜா.

'இல்லை' என்றாள் பாரதி.

"வேறு யாராம்?'' என்று கேட்டான் ராஜா.

''துஷ்யந்த மகாராஜா!'' என்று திருத்தினாள் பாரதி!

நேரமாகிறது, புறப்படலாமா?'' ராஜா கேட்டான்.

எங்கே ?”

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.