(Reading time: 8 - 16 minutes)
Aval Vizittiruntal  - Caroja Ramamurti
Aval Vizittiruntal - Caroja Ramamurti

"ஆமாம். நீ வெங்குதானே? அப்பவே நெனச்சேன். இந்த மாதிரி பரங்கிப்பழம் போல ஒரு சிவப்பை நான் அப்புறம் யார்கிட்டேயும் பார்க்கலை."

  

இருவரும் நெருங்கி வந்து உட்கார்ந்தார்கள்.

  

"சிவப்பாவது மண்ணாவது! எல்லாம் போச்சு. அவர் போனப்பறம் எத்தனையோ திண்டாட்டம். கிச்சாமியைத் தான் உனக்கு தெரியுமே. சரியாப் படிக்காம இப்ப பலகாரம் போட்டு டவுன் ஸ்டால்லே கொண்டு போய் விக்கறான். அவனுக்குக் கல்யாணம் ஆயிடுத்து. எம் பொண் நர்மதாவை நீ பாத்திருக்கமாட்டே...'

  

"பொண் பொறந்துதா?"

  

"பொறந்து, சாறகாலத்துலே எங்கழுத்தை அறுத்துண்டு இருக்கு-'

  

''சீ..சீ அப்படியெல்லாம் பேசாதே. படிக்க வக்கிறது தானே. வேலைக்குப் போயி சம்பாதிச்சுட்டுப் போறா-''

  

"படிப்பு ஏறினாத்தானே? கதை புஸ்தகம் தான் படிப்பா அதுவும் சினிமா கதை புஸ்தகம். நன்னா சினிமா பார்ப்பா"

  

கங்கம்மா சிரித்துக் கொண்டாள்.

  

"இப்ப யார் தான் சினிமாவுக்கு போகாம இருக்கா? அதை விடு. நான் உன்மாதிரி இல்லை. வசதியா இருக்கேன். நீதான் ரெண்டாந்தாரமா பணக்காரனுக்கு வாழ்க்கைப் படறதை விட பால்யமா இருக்கிறவனுக்கு மொதல் தாரமா வாழ்க்கைப் பட்டே வறுமை, இல்லாமைன்னு அனுபவிக்கிறே. நான் அப்படியில்லே. அறுபது வயசுக்காரருக்கு மூணாந்தாரமா கமுத்தை நீட்டினேன். ஐஞ்சாறு வருஷம் வாழ்ந்திருப்பேன். வாழ்க்கைனு என்ன அனுபவிச்சேன்? ஒன்னுமே இல்லை. அவர் தெருக்குறட்டிலே படுக்கையும், நான் கூடத்து உள்ளே படுக்கையுமா கழிஞ்சுது. எனக்கு உடம்புக்கு தேவைங்கற ஆசை இல்லை... நகை நட்டு, பூமி காணிங்கற ஆசைதான் அதிகம், இரண்டு தாரங்களும் கழட்டி வச்சுட்டுப்போன நகைகளை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.