(Reading time: 8 - 16 minutes)
Aval Vizittiruntal  - Caroja Ramamurti
Aval Vizittiruntal - Caroja Ramamurti

பயந்து செத்துண்டிருக்கேன் ஒவ்வொரு நாளும் வெந்து தணியறேன். ஆம்பளைன்னா தேவடியா வீட்டைத் தேடிண்டு போயிடுவான். அதுக்கொரு நியாயம் சொல்லுவான். அவன் மேலே ஒண்ணும் ஒட்டறதில்லையாமே சாஸ்திரம் சொல்றதாம், பொம்மனாட்டி நெருப்பு மாதிரி இருக்கணும்னு... நெருப்பா இருந்தாத் தானே சட்டுன்னு எரிஞ்சும் போயிடலாம்.

  

நெஞ்சுக்குழி விம்ம விம்ம மனசுக்குள் மனசுக்குள் அறற்றியவள் விம்மி அழுதாள்.

  

"அழறயா என்ன?”

  

இந்த ஊருக்கு வந்ததிலிருந்து யாருடைய நினைவு மளசைப் போட்டு உலுப்பறதோ அந்த சாயிராம் சிரித்துக்கொண்டே எதிரில் நின்றான்.

  

'இல்லியே. கண்ணிலே என்னவோ விழுந்துட்டாப்பல இருக்கு"

  

சொல்லிக்கொண்டே தூணில் தூணில் இருந்த குங்குமத்தை எடுத்து இட்டுக் கொண்டபடி வெளியே வந்தாள்.

  

சுவாமி சன்னதியை அதற்குள் பூட்டி விட்டார்கள். வரும்படி இருந்தால் சுவாமி சற்று நல்ல காற்றை சுவாசிக்க திறந்து வைப்பது வழக்கம். இல்லையெனில் அவரைக் கம்பிக் கதவுக்கு அப்பால் தள்ளி விடுவது.

  

அப்புறம் சுற்றுக் கோவில்களில் விளக்கே இல்லை. நல்லெண்ணெய் இருபது விற்கிற போது யார் தீபம் போடப் போறா... ஒண்ணும் தெரியலை. பிள்ளையாரா, தணாக்ஷிணாமூர்த்தியா, துர்க்கையா? எல்லாம் ப்ரும்மம்தான்... என்று ஒரு கிழம் சொல்லிக் கொண்டு போயிற்று.

  

"கொஞ்சம் உட்காருவோமே.." அங்கேயிருந்த கல்லில் உட்கார்ந்தான். அவளும் எதிரில் உட்கார்ந்தாள். இந்த மூக்கும், கண்களும், உதடுகளும் எப்படி இவ்வளவு அளவோடு இவளுக்கு வாய்ச்சுது... என்று அதிசயித்தான் சாயிராம்.

  

ஆத்துக்காரர் இல்லாம விட்டுட்டுப் போயிட்டான்னு. அம்பாள் கிட்டே சொல்லிண்டு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.