(Reading time: 12 - 23 minutes)
Thulasi maadam - Naa.Parthasarathy
Thulasi maadam - Naa.Parthasarathy

சொற்களாலேயே உன்னை வழிபடுகிறேன்'- என்று சௌந்தரிய லஹரியின் நிறைவில் ஆதிசங்கரர் கூறும் கருத்தையும் நவீன மொழியியல் ஆராய்ச்சியோடு சம்பந்தப்படுத்திக் கமலி விளக்கினாள். அதைக்கேட்டு நான் ஆச்சரியப்பட்டுப் போயிட்டேன். நான் அவளுக்குச் சொல்லிக் குடுத்துண்டிருக்கேனா, அல்லது அவள் எனக்குச் சொல்லிக் குடுத்திண்டிருக்காளான்னேசந்தேகமாயிடுத்துடா ரவி.

   

"உலக மொழிகள் அனைத்தும் ஓர் அடிப்படையிலானவை என்பதை விளக்கற சமயத்திலே - 'சொல்லும் பொருளும் போல (அர்த்தநாரீசுவரனாக) இணைத்திருக்கிற உலகின் தாயும் தந்தையுமான பார்வதி, பரமேசுவரர்களாகிய உங்களைச் சொல்லினாலும் பொருளாலும் பயனை அடைவதற்காக நான் வணங்குகிறேன்' - என்கிற ரகுவம்ச ஸ்லோகத்தைச் சொல்லிக் குடுத்தேன் நான். அப்புறம் அவளா அதைப் போல வர ஒவ்வொரு ஸ்லோகத்தையும் இணைச்சுச் சிந்திக்க ஆரம்பிச்சுட்டாப்பா. 'கம்பேரிட்டிவ் ஸ்ட்டீ' என்பது வளர்ந்த நாடுகளில் தவிர்க்க முடியாத ஒரு அறிவுச் சாதனம் ஆகிவிட்டது."

   

"ரொம்ப ஆழமான சிந்தனைடா அவளுக்கு!"

   

இதைக் கேட்டு ரவிக்குப் பெருமையாயிருந்தது.

   

அந்த வார இறுதியில் அப்பாவின் அனுமதியோடு பக்கத்துக் கிராமத்தில் உறவினர் வகையில் நடைபெற்ற வைதிகமுறையிலான நான்கு நாள் கல்யாணம் ஒன்றிற்குக் கமலியையும் அழைத்துக் கொண்டு போனான் ரவி. ஹோமம், ஔபாசனம், காசி யாத்திரை, நலுங்கு, ஊஞ்சல், அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல், சப்தபதி என்று ஒவ்வொரு சடங்காக பிலிம் சுருளில் அடக்கி எடுத்துக் கொள்வதில் கமலி ஆவல் காட்டினாள். சடங்குகளின் பொருளையும், உட்பொருளையும் ரவி அவளுக்கு விளக்கினான். நலுங்கு ஊஞ்சல் ஆகியவற்றைக் கமலி மிகவும் இரசித்தாள். பழைய தலைமுறைப் பெண்கள் அருகிலிருந்து பாடிய நலுங்குப் பாட்டுக்களையும், ஊஞ்சற் பாட்டுக்களையும் கூட ரெக்கார்டரில் பதிவு செய்து கொண்டாள். 'டிரெடிஷனல் இண்டியன் மேரேஜ்' மிகவும் சுவாரஸ்யமாகவும் கலர் ஃபுல்லாகவும் மணமக்கள் இருவரின் ஆவல்களையும் மிகுவிப்பதாகவும் இருப்பதாய்க் கமலி கூறினாள்.

   

நலுங்கில் மணமக்கள் இருவரும் பரஸ்பரம் ஒருவர் தலையில் மற்றொருவர் அப்பளம் உடைத்ததைச் சிறு குழந்தை போல் கைகொட்டிச் சிரித்து இரசித்தாள் கமலி. அந்தத் 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.