(Reading time: 11 - 21 minutes)
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal

இப்போது ஒருவனை யமனுலகத்திற்கு அனுப்பி விட்டோமா!" என்று மிக்க வருத்த மடைந்தவாறு, பாலா, லீலா இருவரையும் அழைத்துக் கொண்டு அந்த சாமான்களைத் தூக்க மாட்டாது தூக்கிக் கொண்டு பதைத்த மனத்துடன் ஜெனால் ஆஸ்பத்திரியை நோக்கி நடக்கலானாள். அதற்கும், இவள் இருக்குமிடத்திற்கும் ஒரு மைல் தூரமிருக்கும், இந்த மைல் தூரத்தையும் பொருட்படுத்தாது வெகு ஆவேசத்துடன் நடந்து ஆஸ்பத்திரியை அடைந்து விசாரிக்கையில் அன்று மோட்டாரில் அகப்பட்ட பையன் ஒரு பிராம்மணப் பையனென்றும் அவனை அவனுடைய பெற்றோர் வந்து ஒப்புக் கொண்டார்கள் என்றும் தெரிந்த உடனே கோமதியம்மாள் அந்த பெருந்திகிலிலிருந்து விடுதலையாகி மீண்டும் முன்பிருந்த இடத்திற்குப் போகலானாள். வழியில் இவளுடைய பலஹீனத்தினால் சற்று உட்காருவதும், படுப்பதும், நடப்பதுமாகச் சிறிது தூரம் சென்றாள்.

   

அங்கு வழியில் ஒருவன் சின்ன மாட்டு வண்டியில் போய்க் கொண்டிருந்தான். அவன் வண்டியை நிறுத்தி "அம்மணி! உங்களைப் பார்த்தால் பிராணன் இப்போதே போய்விடும்போலிருக்கிறதே! என்ன உடம்பு! நீங்கள் எங்கே செல்லவேண்டும், சொல்லுங்கள். இந்த வண்டியில் கொண்டு விட்டுவிடுகிறேன்!'' என்று வெகு உருக்கத்தோடு கேட்டான்.

   

இதுகேட்ட கோமதி "ஐயா! எனக்கு வண்டியும் வேண்டாம்; நொண்டியும் வேண்டாம். என்னுடைய பையனைக் காணாமல் நான் தேடி யலைகிறேன். எனக்கு எங்கும் போக்கிடம் இல்லை. உலகத்தில் சகல இடமும் என்னுடைய சொந்த இடந்தான்" என்றாள். இதுகேட்ட அம்மனிதன் “தாயே! நான் உங்களுடைய பரிதாபத்தைக் கண்டு கேட்டேன். நீங்கள் பையனை எங்கே யனுப்பினீர்கள்? அல்லது அவனாக எங்கேனும் சென்றுவிட்டானா?" என்றான்.

   

கோமதி:- எனக்கு சற்று முன் மயக்கம் அதிகரித்ததனால் சிறிது ஆகாரம் வாங்கி வருவதாகச் சென்றான். இன்னும் வாராமை யினால் தேடுகிறேன்.

   

வந்தவன்:- ஓகோ! அந்தப் பையனா! என் வீட்டிலிருக்கிறான். அங்கு வந்து சாப்பாடு கேட்டான். தாயாருக்கு மயக்கம் என்றும் சொன்னான். சாதம் அவனுக்குப் போடச் செய்து கையிலும் கொடுக்கச் சொன்னேன், அவன் சாப்பிட்ட உடனே தன்னால் தடுக்க வியலாத மயக்க மேலீட்டால் தன்னை யறியாது அப்படியே படுத்து விட்டான், பாவம் பையன் களைத்துவிட்டான் என்று நானும் பேசாதிருந்து விட்டேன். என்னுடைய வீடு சமீபத்திலேயே இருக்கிறது. வாருங்கள்; அழைத்துச் செல்கிறேன். அதற்குள் வழியில் பையனைப் பார்த்தால் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.