(Reading time: 18 - 35 minutes)
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal

Flexi Classics தொடர்கதை - பரிமள கேசவன் - 01 - வை. மு. கோதைநாயகி அம்மாள்

  

பட்ட காலிலே படும்; கெட்ட குடியே கெடும்

   

"பிராணநாதா! நான் எத்தனை நாட்களாகச் சொல்கிறேன். அதை அடியோடு மறந்து, மதியாது அலக்ஷ்யம் செய்கின்றீர்களே! பாழுங் குடியும்,வேசியும் ஒரு ஆளைக் கொள்ளும் யமனல்லவா! நமது குடும்பம் முன்னர் பெரியார் நாளில் எவ்வித செழுமையாக இருந்தது? இப்போது எந்த கதியை அடைந்திருக்கின்றது? இந்த சாப்பாட்டுச் சமயத்தை விட்டால் தங்களைப் பார்ப்பதற்கே அரிதாக இருக்கின்றதே ! இவ்விதம் இருந்தால் நான்கு குழந்தைகளும் நானும் எக்கதியாவது? இந்த துர்ப்பழக்கத்தை ஒழியுங்கள்; இனி வேண்டாம். இந்த புட்டியை நான் கட்டாயம் உடைத்தே தீருவேன்" என்று கூறிச் சாராயப் புட்டியைக் கணவனின் கைவிலிருந்து கோமதி என்ற மின்னாள் பிடுங்க முயன்றாள்.

   

---

   

அட்டகாஸமாக வாய்ப் பேச்சைக் கொட்டி, சட்டதிட்டமாக அளந்து விட்டு சமயம் கிட்டி முட்டி வருங் காலையில் கிட்ட செருங்காமல் கை விட்டு எட்டிச் சென்று வேடிக்கை பார்க்கும் மட்டு மரியாதை யற்ற கட்டைகளும் சிலர் உண்டு.

   

----

   

புட்டி புட்டியாகக் குடியைத் தள்ளும் குண்டோதானின் முன்பு சாமானிய எளிய பேதையின் பலம் சாயுமா! அவன் அவளை இழுத்துத் தாறுமாறாகத் தள்ளி உதைத்து "திமிர் பிடித்த நாயே ! எனக்கு புத்தி சொல்ல வேண்டாம் என்று நான் எத்தனை தரம் சொல்வது. இன்னும் இந்த அகம்பாவத்துடன் இருக்கிறாயா! இனி இப்படிப் பேசாதே. என் இஷ்டம். என் மனம் விரும்புகிற விதந்தான் நான்இருப்பேன், சீ விலகு" என்று தள்ளிவிட்டு, புட்டியிலிலிருந்த சாராயத்தைப் பொட்டு விடாது குடித்து விட்டுத் தாசி லோகாம்பாளின் வீட்டிற்கு ஓடினான்.

   

கோமதி என்ற மடந்தைக்கு வயது 18 இன்னும் பூர்த்தியாக வில்லை. இதற்குள் 4 குழந்தைகள். அவள் தனது 13-வது வயதிலிருந்து குழந்தைகளைப் பெறும் யந்திரமாயும், வீட்டு வேலை செய்யும் எந்திரமாயும் குடிகாரனிடம் சிக்கிக்கொண்டாள். கேவலம் சிறிய வயது முதல் குழந்தைகளைப் பெற்றுக் குடிகாரனின் உதைகளுக்கும், வெறி கொண்ட செய்கைகளுக்கும், 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.