இது கேட்ட வீட்டுக்காரி "அதோ உன்னிடம் ஒரு மரப் பெட்டி இருக்கிறதே அதையும், தண்ணீர் மொள்ளும் தவலை ஒன்று இருக்கிறதே அதையும் கொடுத்துவிட்டுச் செல்லு. மற்றவைகளை வேண்டுமானால் நான் ஐயோ பாவமென்று மன்னித்துவிடுகிறேன்." என்று வெகு தாராளமாய்ப் பதில் கூறி அவ்விரண்டையும் எடுத்து வைத்துக்கொண்டாள். பரதேசியான கோமதி மிச்சமுள்ள கந்தல் பொந்தல்,தட்டுமுட்டு, ஓட்டை உடைசல் முதலியவற்றை எடுத்து வீதியில் வைத்துக்கொண்டு தனக்கு உபயோகமற்றதை வீசி எறிந்துவிட்டு வீட்டுக்காரர்களுக்கு நமஸ்காரம் செய்து உத்தரவு பெற்றுக்கொண்டு வீதியில் வந்தாள்.
-----
உண்மைக் காதலுடைய கணவன் தன் மனைவியை கோக்கி " என் கண்மணி! மூன்று தினங்களாக உன் கையினால் அன்னமிட்டுப் புசிக்காததால் என் பசியாறவே இல்லை. இன்றே என் வயிறு நிறையப் பசியாறப் புசித்தேன்" என்கிறான்.
----
அந்தோ! "மூன்று மக்களுடன் கர்ப்பிணியான பேதை எங்கு செல்வது என்னவிதம் இனி உய்வது?" என்ற பெரும் துக்கம் அவளது தொண்டையை அடைத்துக் கொண்டது. அச்சமயத்தில் அவளுடைய சிறிய மகன் தாயின் துயரைக் கண்டு சகியாமல் "அம்மா! வருந்தாதே! எப்போதும் ஈசன் சோதனை செய்யாது நன்மையளிக்கமாட்டார். நாம் பரதேசியாக அலைவது நரஜென்மங் கொண்டவர்களுக்குக் கண் தெரியாவிடினும் சர்வாந்தர்யாமியாகிய அச்சுதனுக்குத் தெரியவில்லையா! அவனை நம்பி நாம் இப்போதே கிளம்புவோம், வா!" என்று கூறி சட்டிப்பானைகளை எடுத்துக்கொண்டு தங்கையிடம் சிலவற்றைக் கொடுத்து எல்லோரும் நடக்கவாரம்பித் தார்கள்.
அப்போது சரியான உச்சி வேளையாதலால் வெய்யில் வெகு தீக்ஷண்யமாகக் காய்கின்றது. "அவ்வீட்டுக்காரர்கள் காட்டிய கடின இருதயத்திற்கு நான் தோற்கவில்லை" என்று சூரியன் போட்டியிடுவது போலிருக்கின்றது. ஆனால் இந்த அநாதைப் பரதேசிகளைக் கண்டு இரக்கங்காட்டிச் சூரியனிடம் சிபார்சு செய்யவருவதுபோல மேகங்கள் தாராளமாகத் தண்ணீரைக் குடித்துவிட்டு குளிர்ந்த முகத்துடன் சூரியனருகில் சென்று, வெப்பத்தை