(Reading time: 18 - 35 minutes)
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal

வைத்துவிட்டு உடனே காலி செய்து விடு. இரண்டு மாத வாடகை பாக்கியாகி விட்டதால் நீ இன்னும் எப்படி பணத்தைக் கொடுப்பாய். ஆகையினால் உடனே காலி செய்துவிடு" என்று தாக்ஷண்ய மின்றிப் பேச வாரம்பித்தார்கள்.

   

அந்தோ! துர்ப்பாக்யவதியான கோமதி அவர்கள் காவில் விழுந்து "அம்மா! தாயே! எந்நிலைமையறித்தும் என்னைக் கடிந்து கொண்டால் இந்த நேரம் நான் என்ன செய்வேன்? எங்குய்வேன்? என் மீது இரக்கங் கொண்டு சற்று பொறுத்துக் கொள்ள வேண்டும்" என்று எத்தனை சொல்லியும், கெஞ்சியும் அவர்கள் கேளாது மிக்க கடினமாகவே கூறி விட்டதால் கோமதி மனந் தவித்தவாறு எழுந்து நடக்கவும் மாட்டாது, தள்ளாடி தடுமாறிக் கொண்டே தாசி லோகாவின் வீட்டிற்குச் சென்றாள்.

   

----

   

தன் ஊரில் 10 அணாவுக்கு ஒரு டஜன் வாங்கக் கூடிய பழத்தை வெளியூரில் ஒரு ரூபாய் கொடுத்து வாங்கிப் புசிக்க நேருகின்றது. இங்கு காலணா வண்டிச் செலவிற்கு யோசிக்கிறோம். அங்கு 5 ரூபாய் வெள்ளரிப் பழத்தைப் போலக் கொடுத்து விடுகிறோம். இவ்விதமே அதிகப் பணம் கரைந்து விடுகின்றது.

   

-----

   

அங்கு சென்று பார்க்கையில் அவ்வீட்டில் ஒரு முதலியார் குடித்தனம் செய்வதைக் கண்டு திடுக்கிட்டு அவர்களை விசாரித்ததில் தாங்கள் நேற்றுதான் குடித்தனம் வந்ததாயும், தங்களுக்கு எதுவும் தெரியாதென்றும் அவர்கள் கூறிவிட்டார்கள். இதுகேட்டு மனமுடைந்த கோமதி அவ் வீட்டிற்கு எதிரில் உள்ள சோடாக் கடைக்குச் சென்று "இத் தாசி எங்கே?” என்று விசாரிக்கையில் அக் கடைக்காரன் அவளுடைய இனத்தினர்கள் ஜாதிப் பிரஷ்டம் போட்டு விட்டதால் அவள் அவர்களின் முன்னிலையில் இருப்பதற்கு வெட்கிச் சிதம்பரத்திற்குக் குடியேறியதாகச் செய்தி தெரிந்தது" என்றான். இது கேட்ட கோமதி மிகுந்த துக்கத்தை யடைந்து "ஐயோ! இதுவும் ஒரு விதியா! என் காலக் கொடுமையே அவளை ஊரை விட்டுத் தள்ளியதோ! ஹா! கடவுளே!" என்று விசனித்த வாறு வீட்டை யடைந்தாள்.

   

அத் தருணம் வீட்டு வாசலில் அதிகக் கூட்டமாக இருப்பதைக் கண்டு "இங்கென்ன ஆபத்து 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.