பயந்துபோய் "அம்மா! அம்மா! நான் தெரியாமல் செய்துவிட்டேன். இனிமேல் செய்ய மாட்டேன். அம்மா! அம்மா!" அம்மா! அம்மா!' என்று கத்தினான். திருடன் எத்தனை கத்தினாலும் விடுபவர் உண்டா! சற்று நேரத்திற்கெல்லாம் அவர்கள் போலீஸ் ஸ்டேஷனை அடைந்தார்கள். தான் எவ்வளவு சொல்லியும் கேளாமையால் ஒரு தடவை தண்டனையடைந்த பிறகாவது திருந்துவாள் என்று நினைத்து கோமதி அவனுக்குப் பதிலே பேசாது மெளனம் சாதித்து உள்ளே சென்றாள். அவளுடைய துக்கத்தின் எல்லையை அறிந்தவர் கடவுள் ஒருவர்தான்.
----
அலங்காாவதிகளான பெண்கள் இடையில் ஒரு குழக்கதையைத் தாங்கிச் செல்வதும், ஆண்கள் ஒரூ குழந்தையைத் தாங்கிச் செல்வதும் தனித் தனி யான அழகுடன் விளங்குகின்றது.
-----
இந்த நிலைமையில் கோமதியைக் கண்ட வீட்டுக்காரர்கள் "நீ உடனே காலி செய்கிறாயா! உன் சட்டிப்பானையை எடுத்து வீதியில் வைக்கட்டுமா! எங்கள் வீட்டில் எத்தனையோ பண்டங்கள் இதுபரி யாதம் காணாதுபோனதை எல்லாம் உன் மகன் நான் களவாடியிருப்பான் என்று இப்போதுதான் எங்களுக்குத் தெரிந்தது. இனி அரை விநாடியும் இவ்வீட்டில் இருப்பது கூடாது, உன்னுடைய ஓட்டை உடைல்சல்களை எடுத்துக்கொண்டு நட" என்று கண்டிப்பாய் கூறி அவளுடைய சட்டிபாளைகளை எடுத்து முற்றத்தில் போட்டார்கள்.
"அந்தோ! பட்ட காலிலே படும்; கெட்ட குடியே கெடும். என்பதுபோல என் கதி இவ்விதமாகவா ஆய்விட்டது?" என்று வருந்திய கோமதி அவர்களை நோக்கி "என் அன்புடையீர்! நான் இதோ சாமான்களைக் காலி செய்துவிடுகிறேன். ஆனால் இந்த நிலைமையில் நான் உங்கள் வாடகைப் பாக்கியை எவ்விதம் செலுத்துவேன். அந்தப்பணம் செலுத்துதற்கான மார்க்கம் ஒன்றுமே புலப்படவில்லையே! என் பர்த்தாவைப் பார்க்க எண்ணிச் சென்றேன். அவர் ஊரைவிட்டே சென்று விட்டனராம். என்னுடைய பரிதாபத்திற்கு இறங்கி நீங்கள் ஓர் வழி செய்யவேண்டும். என்னிடம் 5 ரூபாய் பெறுமானமுள்ள பாத்திரங்கள்கூட இல்லையே! நான் என்ன செய்வேன்?" என்று கண்ணீர் உதிரக கேட்டாள்.