(Reading time: 18 - 35 minutes)
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal

வந்து விட்டது?" என்று எண்ணி உள்ளே சென்று பார்க்கையில் கோமதியின் பெரிய மகனை ஒரு போலீஸ் சேவகன் பிடித்துக் கொண்டு உதைக்கிறான். அவன் எதிரில் சுமார் 5 வயதுள்ள குழந்தை "இவன்தான் என் கைக் காப்பைக் கழற்றினான்." என்று சொல்லிக் கொண்டிருந்தது. இந்த வேடிக்கையைப் பார்ப்பதற்கு நூற்றுக் கணக்கில் கூட்டம் கூடிவிட்டது.

   

-----

   

மைசூரிலுள்ள வீதிகளே ஓர் தனித்த அழகு. அரசர் வாசம் செய்யும் இடங்களின் மகிமையே அபூர்வ வசீகரம் பெற்றிலகும் போலும், கடவுளும் காவலனும் ஒன்று என்பது போல இடமும் அமைகின்றது.

   

-----

   

கோமதியின் மனம் ஏற்கெனவே எரிந்துகொண்டிருந்ததற்கு இன்னும் எண்ணெயை ஊற்றியதுபோல இங்கு தம் மகன் திருடனென்று பிடிக்கப்பட்டு நிற்கும் கண்ராவியைக் கண்டதும் அவள் மனம் தாங்கவியலாத துக்கந்தையும், ஆத்திரத்தையும் அடைத்து பொங்கிவிட்டது. "ஐயோ கடவுளே! என்னை இவ்விதம் வைத்து ஆட்டுவதைவிட உன்னடி சேர்த்துக்கொள்ளலாகா? குடியும் வேசிப்பித்தும் பிடித்த கணவனும், திருடனும் சோம்பேறியுமாண மகனும் வேண்டுமென்று நான் எத்தனை நாள் தவம் செய்தேன்! ஐயோ! இப்பூவுலகில் என்னைப்போல எத்தனை ஏழைகள் கஞ்சிக் கில்லாது பஞ்சைகளாக வாழவில்லை. அவர்கள் தங்கள் குடும்பத்துடன் சீராகவில்லையா! என் கதிதானா இவ்லிதம் பலவிதத்திலும் துன்பமும், துக்கமும், அவமானமும் நிறைந்திருக்கவேண்டும். ஹா! சர்வேசா! சண்டாளியின் வயிற்றின் இத்தகைய புத்திகள் பிறக்கவும், நான் இக்கோரமான காட்சியைக் கண்டு சகிக்கவும் இன்னும் உயிருடன் வாழுகின்றேனே!" என்று கண்ணிமை ஓடவிட்டுக் கதறியவாறு மூர்ச்சையானாள்.

   

சில நிமிஷங்களில் மூர்ச்சை தெளிந்து எழுந்தாள். இதற்குள் போலீஸார் "அம்மா! உங்கள் மகன் திருடிய காப்பு இதோ அவன் மடியிலேயே அகப்பட்டுவிட்டதால் அவனைக் கைது செய்து கொண்டு போகிறோம்" என்று கூறிவிட்டுப் பையனை இழுத்துக் கொண்டுபோசு வாரம்பித்தார்கள். கேவலம் 10 வயதுதான் நிரம்பிய பையனாகையினால் அவன் மிக்க 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.