சொன்னாரு. சுருக்கெழுத்துல தேர்ச்சி பெற்ற ஒரு ஸ்டெனோவ ஆபீஸ்லே நியமிக்கணும். அதுக்கு டைப்பிங் வேகம் நிமிடத்திற்கு 25 வார்த்தைகள் இருக்கணும். இந்த டைப்பிங் வேகம் சுருக்கெழுத்துலே இருந்து அதை அர்த்தப்படுத்தி டைப் அடிக்கிறதுக்கா, இல்லை ஒரு பாராவைக் கொடுத்து அதை டைப் அடிக்கிறதுக்கா என்கிறது எங்க ஆபீசுல யாருக்குமே தெரியல. இப்படித்தான் பல ஆபீசுலே ஆபீஸர்களோட அறியாமையால், பல தகுதி உள்ளவர்களுக்கு வேலை கிடைக்கிறது இல்லை.”
"அப்போ நானும் வாரேன். உங்களைத் தனியா விடமாட்டேன்."
"அங்கே நேரமாகும். இப்ப பஸ்ல போயிடு. சாயங்காலமா ஆபீஸ்ல வந்து உன்னை பிக்கப் செய்துக்குறேன்."
"சாக்கிறதையா போங்க. ஆபீசுக்கு வந்ததும் உடனே போன் செய்யுங்க. அதுவரைக்கும் என் மனது கேட்காது."
பாமா, அப்போது வந்த ஒரு பஸ்சில் ஏறிக் கொண்டாள். இளங்கோ, அவள் டாட்டாவுக்கு, பதில் டாட்டா போடாமல், வண்டியை ஒடித்து வளைத்து ஒரு சுற்றுச் சுற்றி, அந்தப் பெண் நின்று கொண்டிருந்த பஸ் நிலையத்தை நோக்கி வண்டியைப் பாய்த்தான். இதற்குள் அவள், அவன் வருவது தெரியாமல், ஒரு பஸ் நம்பரை உற்றுப் பார்க்காமலேயே அதில் ஏறிக்கொண்டாள். உடனே அவனும் அந்த பஸ்சை பாலோ செய்தான். அவன் மனதில் அழுத்திய குற்றச்சுமை அந்த பைக்கின் ஆக்சிலேட்டரையும் அழுத்தியது. பாமாவிடம் பொய் சொன்னதை மனம் ஒப்பவில்லை. அவன், ஆபீசர் அப்படி ஒரு விவரத்தை கேட்டுவிட்டு வரச்சொன்னது உண்மைதான். அந்த உண்மையை தனக்குச் சாதகமாக வளைத்து, தர்மர், துரோணரை ஏமாற்றியது போல் தானும் ஏமாற்றி விட்டதாக நினைத்தான். ஆனாலும் அவளுக்குச் சிரமம் கொடுக்கக் கூடாது என்றுதான் அப்படிச் செய்ததாய் தனக்குத்தானே சொல்லிக் கொண்டான். அதேசமயம், ஒருத்தர் அவரது நோக்கங்களால் தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக செயல்களாலேயே தீர்மானிக்கப் படுகிறார் என்று யாரோ ஒரு கிரேட்மென் சொன்னதாக ஒரு பத்திரிகையில் வெளியான வாசகங்கள் அவன் மனதை பாம்பாய் கொத்தின. அதையும் மீறி அந்த பஸ்சின் பின்பக்கம் பாம்பு போல் வளைந்து வளைந்து போய்க் கொண்டிருந்தான்.
சரோசா இவளோ... அவளோ... எப்படியும் அசல் சரோசாவைச் சந்தித்து... அவள் விடுதலைக்கு