(Reading time: 11 - 22 minutes)
Thazhampoo - Su Samuthiram
Thazhampoo - Su Samuthiram

Flexi Classics தொடர்கதை - தாழம்பூ - 23 - சு. சமுத்திரம்

  

சரோசா, அந்த வேலையில் சேர்ந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது. அந்த வேலையின் தலைகால் அவளுக்குப் புரிந்துவிட்டது. ஆனாலும், தலை கழுத்தில் இல்லாதது போலவும், கால் தரையில் படாதது போலவும் ஆடுகிற 'ஆபீஸ் கம்மனாட்டிங்க' போக்குத்தான் அவளுக்குப் புரியவில்லை. ஆனாலும், நாயின் மீது ஒரு கண்ணை வைத்தபடியே, அதன் அருகில் அமரும் காக்கா போல, எங்கிருந்தோ பறந்துவரும் அண்டங்காக்காவின் முட்கால்கள் உடம்பில் படாதபடி நகர்ந்து கொள்ளும் சிட்டுக்குருவி போல, சரோசா அவர்களின் இருபொருள் படும்படியான பேச்சுக்களையும், தன்னைத் தாழ்த்தும் இளக்காரமான பார்வைகளையும் தாங்கிக்கொண்டாள். வேலையில்‘காயம்' ஏற்பட வேண்டும் என்பதற்காக, உள்ளத்தின் காயங்களை ஊதிவிட்டுக் கொண்டாள். கோப்புக்களை தூக்கிக்கொண்டு, செக்ஷன் செக்ஷனாகப் போகும்போது பெருமையாக இருந்தது. எச்சில் டம்ளர்களை கழுவும்போது சிறுமையாக இருந்தது. அவளுக்கும் ஒரு முகம் இருப்பதை அனுமானிக்காமலே, அவளுக்கு எதிராக கிண்டலடிக்கும் பேர்வழிகளைப் பார்க்கும்போது அடித்து நொறுக்கலாம் என்பதுபோன்ற ஆவேசம் வந்தது. ஆனாலும் பொறுத்துக் கொண்டாள். இப்போது நாயினா அவளை சந்தோஷமாகப் பார்க்கிறார். ஆகையால் அலுவலகத்தில் தானும் சந்தோஷமாக இருப்பதாக அவரிடம் ஒரு பாவனை செய்து கொள்கிறாள். இளங்கோ, பல தடவை அவளைப் பார்த்து குசலம் விசாரித்தான். அவளுக்குப் பணம் தேவையா... என்று கூடக் கேட்டான். அவள் தன்னை அறியாமலே வேண்டாம் என்று சொல்லிவிட்டாள். அழுத்திக் கேட்டிருந்தால், கையை நீட்டியிருப்பாள்.

   

கடந்த பத்து நாட்களாக, அவளுக்கு எந்த வருமானமும் இல்லை. சரக்கு எடுக்கப் போகாததால், பைசா தேறவில்லை. துரை அண்ணனிடம் கேட்கலாம் என்றால், அவன், ஆந்திராவிற்கு சரக்கு வாங்கப் போய் விட்டான். கடைசியில் பூக்கார ருக்குமணிதான் இவள் கேட்காமலேயே கொஞ்சம் இவளுக்கும், இவள் நாயினாவுக்கும் 'நாஷ்டாவுக்கு' ஏற்பாடு செய்தாள். இவளும், தினமும் மாலையில் அந்தப் புடவையை ருக்குமணி வீட்டில் மடித்துவைத்துவிட்டு பைஜாமா வகையறாவை போட்டுக்கொள்வாள்.

   

அன்றும், அவள் வழக்கம்போல் பைஜாமா கோலத்தோடு நாயினாவுடன் கோவில் வளாக மண்மேட்டில் படுத்துக்கிடந்தாள். ஆபீசில் மொசைக் தரையில் நடந்துவிட்டு, சோபா செட்டில் அக்கம் பக்கம் பார்த்து உட்கார்ந்துவிட்டு, அந்தத் தரையில் இப்போது படுப்பதற்கு அவளுக்கு என்னமோபோல் இருந்தது. பல்லைக் கடித்துக் கொண்டாள். இந்த மாதச் சம்பளம், நாஷ்டா 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.