(Reading time: 11 - 22 minutes)
Thazhampoo - Su Samuthiram
Thazhampoo - Su Samuthiram

ஆயாவுக்கும், ருக்குமணியின் கடனுக்கும் சரியாயிருக்கும். அடுத்த மாதச் சம்பளத்தில், ஒரு குடிசைக்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டு குடித்தனம் போயிடலாம். எம்மாடி! ஒரு நாளைக்கி 30 ரூபா கொடுப்பாங்களாம். பள்ளிக்கூடத்துல ரொம்பவும் படிச்சிட்டு டீச்சரா போற பொண்ணுங்க கூட 300, 400 ரூபாதான் வாங்குறாங்கோ. எனிக்கி முள்ளங்கிப் பத்தமாதிரி 900/- ரூபா.

   

அம்புபோலான அவள் முழங்கை மடிப்பையே தலையணையாக வைத்தபடி நாயினா தூங்கிக் கொண்டிருந்தார். அவர்-கை ஏன் இப்படிக் குலுங்குகிறது என்று அவள் பார்த்தபோது காரணம் கண்டு கொண்டாள். அவள் நாயினாவின் தலை அங்குமிங்குமாய் ஆடியது. அவர் உடலெங்கும் மலேரியா படையெடுத்தது போன்ற ஆட்டம். மார்கழிப் பனி அவர் தொண்டைக்குள் ஊடுருவி, ஈளை-இருமலாக அவரை உலுக்கிக் கொண்டிருந்தது. திடீரென்று, துரை அண்ணனின் தர்ம பத்தினியைப் போல் நம்பமுடியாத மழை. ஆலங்கட்டி விழுவதுபோல் அடாவடி மழை, அவள் முகத்தை பேயாய் அறைந்தது. நாயினாவின் காக்கிச்சட்டையை காகிதமாகக் குழைத்தது. அவரை 'ஊ.. ஊ..' என்று ஊளையிட வைத்தது.

   

சரோசா, நாயினாவை தூக்கிப்பிடித்து நிறுத்தினாள். அவரோ நிற்கமுடியாமல் நிலைதடுமாறி அவளைக் கட்டிப்பிடித்துக் கொண்டு தானும் ஆடி, அவளையும் ஆட்டுவித்தார். 'அய்யோ... நாயினா' இப்படியே இத வெச்சா செத்துடம். எங்கே கூட்டிப்போறது? துரை அண்ணன் கொட்டடிக்கப் போலாமா? அந்த தர்ம பத்தினி இன்னாப் பண்ணுவாளோ? அதானே... அப்பவே பெரிய கார்ல டம்பப் பைய வச்சுகினு, இரண்டு பிரா போட்டாப்புல, உடம்ப நெளிச்சுக்கிட்டுப் போயிட்டாளே. ஆபத்துக்குத் தோஷமில்ல. அதோட ஒருவாரமா தோஸ்துங்கள பார்க்காம தலை சுத்துது. எப்படியில்லாமோ பேசிக்கினு இருப்போம். இப்போ கஸ்மாலங்க கண்டுக்க மாட்டேங்கிறானுங்க. நல்லவேளை, அண்ணாத்தே கண்டுக்கல. நானு பயந்ததுமாதிரி ஏடாகூடமா ஏதும் செய்யல. பெரிய மனுஷன்தான்.ஏதோ அந்த வேளையில கேட்பார் பேச்சுக் கேட்டு, போலீஸ்ல மாட்ட வைக்க, நெனச்சிருக்கார்.

   

சரோசா, தந்தையின் தலை நனையாமல் இருப்பதற்காக, தனது சட்டையின் பின்புறத்தில் கழுத்துப் பகுதியைத் தூக்கி, அவரது தலையில் முக்காடு மாதிரி போட்டுப் போர்த்தியபடியே நகர்த்தினாள்.நடக்கும்போதே அவரது சட்டையையும் வேட்டியையும் பிழிந்துவிட்டாள். அவர் உடம்பைத் தொட்டால் ஆபீசில் பிரிஜ்ஜை தொட்டது மாதிரி இருந்தது. முக்கி முனகிய நாயினாவை, அவள் துரை அண்ணன் வீட்டின் கொல்லைப்புறப் பந்தலுக்குள் கொண்டு 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.