(Reading time: 12 - 23 minutes)
Thazhampoo - Su Samuthiram
Thazhampoo - Su Samuthiram

பொம்மனாட்டிங்களும்... அடக் கண்றாவியே... அடி ஆத்தே! இதுக்குப் பேருதான் கவர்ன்மென்ட் ஆபீசா?

   

சரோசா,யந்திர கதியில் இயங்கினாள். அப்துல்லா நாற்காலி யை துடைத்துவிட்டாள். அவனோடு போய் டைப்ரைட்டரை சுமந்து வந்தாள். மீண்டும் வெளியே உள்ள ஓட்டலுக்கப் போய் வந்தாள். எச்சில் கிளாஸ்களை மூணாவது தடவையாகக் கழுவி விட்டாள். இதற்குள் கிளிக்கூண்டு மாதிரி இருந்த பிளைவுட் அறைக்குள் இருந்து ஒரு காலிங்பெல் சத்தம். சரோசா உள்ளே ஓடிப்போனாள். அங்கே மெத்தை போட்ட நாற்காலியில் உடம்பு முழுவதையும் பரப்பி வைத்திருந்த அசிஸ்டென்ட் டைரக்டர் அருணாசலம், அவளிடம் ஒரு பில்லையும், இருபது ரூபாய் நோட்டையும் கொடுத்தபடியே உத்தரவிட்டார்:

   

"ஒரு பேண்டையும், சர்ட்டையும் இந்த லாண்டரியில் போட்டிருக்கேன்... அப்புறம் ஒனக்கு பாஸ் தந்தார்களா?"

   

“தருவாங்க சார்"

   

"கேட்டதுக்கு பதில் சொல்; தந்தாங்களா, தரலியா?”

   

"தர்ல; தருவாங்க!"

   

"இந்தாப்பா சுந்தரம்! இந்தப் பொண்ணுக்கு பாஸ் போட்டுக் குடுன்னு சொன்னேனே... ஏன் போடலே? ஒன்னத்தாம்பா சுந்தரம். மூணுதடவ கேக்கிறேன்ல, ஒரு தடவையாவது பதில் சொல்லேன்.."

   

"நேற்று போட்டுக் கொடுக்கிறதா இருந்தேன். அதுக்குள்ள ஒங்க எல்.ஐ.சி பணத்த கட்டப் போயிட்டேனா, இன்னிக்கி காலையில் போடலாமுன்னு நினைச்சேன். அதுக்குள்ள ஒங்க டெலிபோன் பில்ல கட்டப் போயிட்டேனா..."

   

சரோசா லாண்டரி பில்லோடு வெளியே வந்தபோது, 'பி.ஏ.' கந்தரம் எரிந்து விழுந்தான் :

   

"ஒன் மனசுல என்னம்மா நினைப்பு? வேலையில சேர்ந்து இன்னும் ஒரு வாரம் கூட ஆகல. 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.