(Reading time: 14 - 27 minutes)
Thazhampoo - Su Samuthiram
Thazhampoo - Su Samuthiram

என்னையும் ஒரு சேரிக்காரி மனிதாபிமானத்துல மிஞ்சிட்டான்னு சொல்ல வந்தேன். சரி... இதையெல்லாம் ஒனக்குப் புரிஞ்சுக்க முடியாது."

   

“இருக்கலாம், ஆனாலும் சரோசாவ இரண்டு பேருமா சேர்ந்துதான் மீட்டினோம். நீங்க ஆஸ்பத்திரியில் கிடக்குறபோது பக்கத்திலேயே பழிகிடந்தேன். ஒங்களுக்காக ஏயேசு, கிருஷ்ணன், அல்லா-ன்னு மனசுக்குள்ளேயே பல தடவை மதம் மாறினேன். ஆனாலும் நீங்க என்கிட்ட உண்மையைச் சொல்லல. உயிருக்கு உயிராப் பழகின ஒருத்திக்கிட்ட உண்மையைச் சொல்லாத ஒருவரு இப்பக்கூட சொல்றேன் - எனக்குத் தேவையில்ல.”

   

இளங்கோ, அவனை விக்கித்துப் பார்த்தான். அவள் சொல்வதில் நியாயம் இருப்பது புரிந்தது. "தப்புத்தான்” என்று சொல்லிவிட்டு, அதற்காக அவள் மன்னிக்க வேண்டும் என்பதுபோல் தலைக்கு மேல் ஒரு கும்புடு போட்டுவிட்டு அவளையே தழுதழுத்துப் பார்த்தான். பிறகு கண்களை அங்குமிங்குமாய் ஆட்டிப் பன்னீர் தெளிப்பது போல் தெளித்தபடி மீண்டும் நின்ற இடத்திற்கு வந்தான். அவனுள் இப்போது, சரோசாவே முழுமையாக நின்றாள். 'சரோசாவை எப்படியாவது காப்பாற்ற வேண்டும். சரோசா வலியப் பேசும்போது, நான் முகம் கொடுத்திருந்தால், அவள் பிரச்சினைகளைச் சொல்லியிருப்பாள். என்மூலம் அவளுக்கு ஒரு வழிகூடக் கிடைத்திருக்கும். ஆனால், இப்போது வழியற்று நிற்கிறாள். போலீஸ்காரன், அவளை அடிப்பதைவிட நான் அவளிடம் பேசாமல் இருந்தது பெரிய கொடுமை. அவளை, அவள் மனசிற்குள்ளேயே சிறை போட்டுட்டேன். அதிலேயே அவள் சந்தோஷத்தையும் தூக்குப் போட்டுட்டேன்..'

   

இளங்கோ, அந்தப் போலீஸ் வளாகத்தையே வெறித்துப் பார்த்தான். இறுதியில் ஒரு தீர்மானத்திற்கு வந்ததுபோல், அந்தக் காவல் நிலையத்திற்குள் போனான். யாரோ ஒருவர் தோளில் கை போடுவது போலிருந்தது. முகத்தைத் திருப்பினால் ஒரு வளைக்கரம். பின்பக்கமாய் திரும்பினால் பாமா... நீர் முட்டும் கண்களுடன் அவன் தோளில் சாய்ந்தாள். இளங்கோ, அவள் தலையை நிமிர்த்தினான். அவள் தோளைப் பிடித்திழுத்து தனக்கு இணையாக நிறுத்திக் கொண்டு அவள் கைகளைப் பற்றினான்.

   

சரோசா, ஐந்தாறு பெண்களுக்கு மத்தியில் அலுங்காமல், குலுங்காமல், அங்கேயும் இங்கேயுமாய் பார்க்காமல், படியிறங்கிக் கொண்டிருந்தாள். அவளைச் சூழ்ந்திருந்த கும்பலுக்குப் பின்னால் அவள் நாயினாவும், ருக்குவும் கோவிந்தும், வீட்டுக்கார அம்மாவும் இறங்கிக் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.