புதுமை இல்லையென்றாலும், கமலி காமிராவையும் ரெக்கார்டையும் எடுத்து வந்திருப்பதைக் கண்டு அவற்றினால் ஆவல் தூண்டப் பெற்றவர்களாகப் பார்வதியும் குமாரும் கூட வந்து வேடிக்கை பார்க்க நிற்பவர்களைப் போல் சூழ்ந்து கொண்டு நின்றார்கள்.
காமாட்சியம்மாள் சிறிதும் பதறவோ பயப்படவோ இல்லை. அலட்சியமாக அமர்ந்து அம்மானைக் காய்களை ஆடினாள். முதலில் மூன்று காய்களை ஆடிக் காட்டிய பின் விரைவு குன்றாமல், ஐந்து காய்களையும் ஆடினாள். இனிமையான ஒரு சிறிதும் பிசிறு தட்டாமல் கணீரென்ற குரலில், தான் பிறந்த ஊரில் சிறுவயதில் பாடிப் பழகிய ஓர் அழகிய பாட்டையும் அம்மானைக்கு இசைவாகப் பாடினாள் மாமி.
'இள நகை யரும்பு மிதழ்க்கடை
எழிலுறு தவள நகைப்படை
வளமது கொண்டு சிவன்தன
துளமதில் உறுதி தகர்த்திடு
களபகுங்கும கலச கொங்கயையிற்
கலாம் விளைவிப்பவட் கம்மானை
துளவ நாயகன் சோ தரிக் கம்மானை
மகர தோரண வீதியெங்கணும்
பளபளக்கு மொகுவிலாச நற்
பவளவல்லி திருவிளக்கு மம்மானை!
அநாயாசமாக இந்தப்பாட்டை பாடும்போது மாமி தன் எதிரே சிலர் கேட்கிறார்கள் அல்லது