(Reading time: 8 - 16 minutes)
Vetha Vithu - SaVi
Vetha Vithu - SaVi

"நீங்கள்ளாம் என்ன நினைக்கிறேள்?"

   

"அக்கிரகாரத்துல முக்கியமானவாளெல்லாம் கூடிப் பேசினோம். சில பேர் சேர்த்துக்கலாம்னு அபிப்ராயப்படறா. சில பேர் கூடாதுங்கறா. கடல் கடந்து போனவனை அதுவும் இருபது வருஷம் கழிச்சு வந்திருக்கவனை எப்படி சேர்த்துக்க முடியும்? மாமிசம்கூடச் சாப்பிட்டிருப்பான். ஐாதிப் பிரதிஷ்டம் பண்றதைத் தவிர வேறவழி இல்லேங்கறா. இப்ப அக்கிரகாரம் ரெண்டு கட்சியாப் பிரிஞ்சு நிக்கறது. அதான் உங்களைக் கேட்டு முடிவு பண்ணலாம்னு ரெண்டு கட்சிக்காராளும் சேர்ந்து வந்திருக்கோம்"

   

"நான் சொல்ற தீர்ப்பை ஏத்துக்க வந்திருக்கேளா, இல்லே, சாஸ்திரம் என்ன சொல்றதுன்னு தெரிஞ்சுண்டு போக வந்திருக்கேளா? “

   

ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

   

"கனபாடிகள் சொல்ற முடிவை ஏத்துக்கலாம்னுதான் வந்திருக்கோம்."

   

"கடல் கடந்து போனவனுக்கு, அதுவும் இத்தனை வருஷம் கழிச்சு வந்திருக்கான். ஜாதிவிட்டு ஜாதி கல்யாணம் வேற பண்ணிண்டிருக்கான். இதுக்கு பிராயச்சித்தமே கிடையாது. சில பாவங்களுக்குத்தான் பிராயச்சித்தம் உண்டு. இப்படிப் பட்டவாளுக்கு சமூகத்துல அங்கீகாரம் கிடையாதுன்னுதான் சாஸ்திரம் சொல்றது. அதுதான் என் தீர்ப்பும்" என்றார் கனபாடிகள்.

   

"அப்ப அந்த அம்மா பார்வதியின் வாழ்க்கை சூன்யமாப் போயிட வேண்டியதுதானா?" என்று கேட்டது ஒரு குரல்.

   

"சாஸ்திரம் என்ன சொல்றது என்று கேட்டேன். சொன்னேன். என் தீர்ப்பையும் சொன்னேன். அப்புறம் உங்க இஷ்டம்" என்றார் கனபாடிகள்.

   

"நம்ப சமூகம், சமுதாயம் எல்லாம் நல்லபடியா வாழனுங்கறதுக்குத்தானே சாஸ்திரம் சம்பிரதாயமெல்லாம்? இப்படி வாழ்க்கையே அடியோடு நாசமாப் போயிடறதுக்கு ஒரு சாஸ்திரமா? அது நமக்குத் தேவைதானா? அப்படிப்பட்ட சாஸ்திரத்தை மாத்தி அமைக்க 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.