(Reading time: 7 - 14 minutes)

பூசணிக்காய்: நீ வேணா நீளமா இருக்கலாம் ஆனா என்னை மாதிரி பருமனா இருக்கியா. நான் ஒரு ஆளு ஒரு பெரியக் குடும்பத்திற்குப் போதும் தெரியுமா?

(பூசணியின் பேச்சைக் கேட்டு காற்றில் ஆடிய முருங்கை சிரித்தது...)

முருங்கக்காய்: நீங்க எல்லாருமே முட்டாள்கள்! என்கிட்ட மருத்துவ குணம் நிறைய இருக்கு அதனால நான்தான் சிறந்தவன்.

இவர்களின் பேச்சைக் கேட்ட அவரைக்காய்  மற்றும்   வாழைக்காய் தங்கள் பெருமையைப பேசின...

வாழைக்காய்: நான் எளியவருக்கு எளிதாக கிடைப்பேன். என் மரம் பல நன்மைகளை தரவல்லது. அதனால் நானே சிறந்தவன்.

அவரைக்காய்: போதும் போதும் . நீங்க ஏன் இப்படி சண்டைப் போடறீங்க.. நான்தான் சிறந்த காய்கறினு ஒத்துகிட்டுப் போங்கப்பா. எல்லா காய்கறியும் முறைக்க, அவரை வாயை டப்பென்று மூடிக்கொண்டது.

இவர்களைப் பார்த்த வெள்ளரிக்காய் பேச வந்ததைப் பேசாமல் வாயை மூடிக்கொண்டது.( அவர்களுக்கு பயந்துதான் வேறொன்றுமில்லை)

கடைசியில் அனைவரும் சண்டையிட்டு , அசதியில் உறங்கின.

இங்கதான் என்னோட நண்பன பார்த்தேன், அவன் மட்டும்  எதுவுமே பேசமா அமைதியா இருந்தான்! அது எனக்கு ஒரே ஆச்சரியமா இருந்தது.

நான் அவன்கிட்டப் போய் மெதுவா கூப்பிட, என்னைப் பார்த்து மெல்ல சிரித்தான். நானும் சிரிச்சிட்டு அவன்கிட்ட,” ஏன் நீ அவங்ககூடப் பேசாமா இருந்த? உனக்கும் வெள்ளரிக்காய் போல் பயமானு? “ கேட்டேன்.

அதுக்கு என் நண்பன் என்ன சொன்னான் தெரியுமா?

எல்லாரும் ஒருஒரு விஷயத்தில சிறப்பானவாங்கதான். இதை தெரியாம என்னோட நண்பர்கள் எல்லாரும் வீணாக சண்டைப் போடறாங்க....

அனைவருக்கும் நல்ல குணங்கள் இருக்கிறதுப் போல் சில தீய குணங்களும் இருக்கும், இது இயற்கை.

 நல்ல குணங்களை ஏத்துக்கிட்டு தீய குணங்களை விட்டுட்டா? எல்லாருமே சிறந்தவர்கள்தான். இதை நான் சொன்னால் என் நண்பர்கள் ஏற்றுக்கொண்டு இருப்பார்களா? இல்லை. ஏனா? இப்ப அவங்களோட அறிவை கோபம் மறைக்குது, அவங்க கோபம் எல்லாம் போனப்பின் நான் சொல்வேன். அப்ப அவங்களும் புரிஞ்சுக்குவாங்க.( இங்கதான் எனக்கு அவன நண்பனா ஏத்துக்கனும் தோனுச்சுச்சு. பாருங்க! அவன் நண்பர்கள் நல்லா இருக்கனும் யோசிக்கிறானுல்ல. இதனாலயே எனக்கு அவன ரொம்பப் பிடிச்சுப்போச்சு. ரொம்ப நேரமானதால  தாத்தா தேடுவாங்கனு, என் நண்பங்கிட்ட அப்புறம் பார்க்கலாமுனு சொல்லி கிளம்பினேன்.)

அவனோடாப் பெயரை சொல்லவேயில்லைனு கோபப்படறீங்களா? நான் பெயரை சொல்லறதுக்கு முன்னாடி, நீங்க இப்ப அவன நண்பனா ஏத்துக்க தயாரா?

நான்தான் அப்பவே சொன்னந்தான நீங்க அவனப்பற்றி தெரிஞ்சவுடனே ஏத்துக்குவீங்கனு...

நீங்க  எல்லாரும் நல்லப்பிள்ளைகளுனு நிறுப்பிச்சிட்டீங்க....

அவனோடப் பெயர் பாவற்காய்....

பாவற்காய்னு சொன்னாலே நம்ம சிலப்பேருக்கு கசக்கும், முகத்தைச் சுளிச்சுக்குவோம். ஆனா அந்தக் காயால நிறைய நண்மைகளும் சில தீமைகளும் இருக்கு தெரியுமா?

நண்மைகள்: சின்னப்பிள்ளைகளான நீங்கள் கண்டிப்பாக இந்தக் காய்கறிய சாப்பிடனும். இது உங்க வயித்துல இருக்கிறப் பூச்சிகளை அழிக்கும் சக்தி கொண்டது. நீரிழிவு நோய் அதான் சர்க்கரை நோய் (டையபைடீஸ்) உள்ளவர்கள் இந்தக் காயை சாப்பிட்டால், உடலில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். (சாறாக உண்டால் மிகவும் நல்லது). பெரியவர்களும் இக்காய்கறியை சாப்பிடலாம்.

தீமைகள்: நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்கள் இக்காய்கறியை சாப்பிடக்கூடாது.  உடல் உபாதை உள்ளவர்களும் அந்நேரத்தில் இக்காயை சாப்பிடக்கூடாது. மற்ற நேரத்தில் சாப்பிடலாம்.

நாம் நம் கசப்பு நண்பன் போல் நண்மைகளை எடுத்துக்கிட்டு தீமைகளை விட்டுடலாம், சரியா!

இந்தக் கசப்பு நண்பன் எங்க முதன்முதலில் தோன்றினான் தெரியுமா?

இந்தியா

இவன் பெரும்பாலும் நம்ம நாட்டிலும் சீனநாட்டிலும்தான் அதிகம் உற்பத்தி ஆகிறான். இவனுக்கும் பல வகைகள் உண்டு.

இந்தக் கசப்பு நண்பனோட கதை உங்களுக்கு இனிப்பா இருந்துச்சா?

 அனைத்தையும் அளவாக உட்கொண்டு வளமாக வாழலாம்

இது காய்கறிகளுக்காக: இன்னும் நீங்க நிறைய பேர் இருக்கீங்கனு தெரியும். நான் செடியோடப் பார்த்த காய்கறிகள் மட்டுமே சொல்லியிருக்கேன். அதனால, மற்ற  காய்கறிகள் என்னோட சண்டைக்கு வரக்கூடாது. அதுக்கு நான் பொருப்பாளி கிடையாதுப்பா.....

{kunena_discuss:875}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.