(Reading time: 7 - 13 minutes)

அது போல இப்போ வெட்க படக்கூடாதுனு வெறப்பா இருந்தா அடிக்கடி வந்து வெறுப்பேத்துதே. முன்னலாம் எப்படி கட்ஸா அவன் கண்ணைப் பார்த்து பேசுவேன். இப்போ அவன் மூஞ்சியப் பார்த்தாலே தடுமாறுதே. எப்டியோ சமாளிப்போம்.

இவளைக் கண்டவுடன் முகம் கொள்ளாக் குறும்புடன் புன்னகைத்து வரவேற்றான் .

அவள் மைண்ட் வாய்ஸ்: " டேய் கேடி. இப்போ புரியுதுடா உன் திட்டம். ரொமான்டிக் சுச்சுவேஷன் கிரியேட் பண்ணி என்னைக் கவுத்தலாம்னு பார்க்குறியா? டேய் நவீன்,உன் கிட்ட சிக்காது இந்த மீன். கண்ணைப் பாரு. குறும்பை குத்தகைக்கு எடுத்தது போல.

என் வாள் விழிகளின் கூர்மையில்,

குதித்தாடும் உன் கண் குறும்புகளைக் 

குற்றாலத்திற்கு அனுப்பிவிடுவேன்.

பார்ராஹ! இந்த தமிழ் பண்டிட் கூட சேர்ந்து நமக்கும் கவிதை வருது.

மனசாட்சி: இது கவிதையா? கொடுமை. இருந்தாலும் உன் நட்பை எண்ணி நான் வியக்குறேன். ஃப்ரண்ட்ஸ் இருக்குற இடமா ( குற்றாலம் குரங்கு ) பார்த்து சொல்லிருக்கியே.

நவீனா ரிப்ளை டு மனசாட்சி: " கொலை வெறில இருக்கேன். ஓடிரு "

அதுவும் " ரைட்டு விடு"ன்னு சொல்லிட்டு ஓடிருச்சு.

இதெல்லாம் அவள் அவனுக்கு ஹாய் சொல்லி புன்னகைத்துவிட்டு இருக்கையில் அமர்ந்து மெனு கார்ட் பார்ப்பது போல் தலையைக் கவிழ்ந்து உட்கார்ந்த தருணத்திலும் அதற்கிடைப்பட்ட தருணத்திலும் போட்ட மைண்ட் வாய்ஸ்கள்.

அவனோ குறும்போடே,

எதிரில் இருப்போரைத்

துல்லிய எல்லையில் நிறுத்தும்

உன் வாள் விழிகளின் 

கூர்மை எங்கே?

நாணம் வந்து குடியேறியதில்

தற்காலிக ஓய்வு பெற்றுக்

குற்றாலம் சென்று விட்டதோ?"

என்றான்.

ஆச்சர்யத்தில், அதிர்ச்சியில் விழி விரிய, நாணத்தில் சிறிதாய் இதழ் விரிய பார்த்தவள்,

" அடப்பாவி ! வெட்கத்தைதான் கேட்ச் பண்றான்னு பார்த்தா மைண்ட் வாய்ச கூட கேட்ச் பன்றானே! எப்படி சமாளிக்கவோ தெரிலயே! "

என்று மைண்ட் வாய்ஸ் போட்டாலும் வெளியில் விறைப்பாக,

" குற்றாலத்துக்கும் போகல குலுமணாலிக்கும் போகல. எல்லாம் இங்கதான் இருக்கு. பிட்வீன் எந்த நாணமும் வந்து இங்க குடியேறவுமில்லை. நாம வந்த வேலையப் பார்க்கலாமா ?"

என்று கூறிவிட்டு, அவனுக்கும் சேர்த்து இவளே ஆர்டர் செய்தாள்.

அவனோ " லுக் அட் மை ஐஸ்" என்றான்.

நிமிர்ந்து ஒரே ஒரு கணம்தான் அவன் விழிகளைப் பார்த்திருப்பாள்.

அதில் தெரிந்த காதலும் ,தெறித்த குறும்பும் , இவளுடன் போர் தொடுத்து இவள் சிறை செய்திருந்த நாணத்தை மீட்டெடுத்தன.

அவனோ,

" அதிகாலை ஆதவன் அழகா?

இல்லை, அவள் அடைகாக்கும்

நாணம் அவள் கன்னங்களில்

வண்ணமேற்றுவது அழகா?"

என்றான்.

அவளோ ,

" அச்சோ! பின்றானே! புட்டு புட்டு வைக்கிறான். அடைச்சு வச்சது வெடிச்சிரும் போலயே " என்று மைண்ட் வாய்ஸ் போட்டு, திரு திருவென விழித்தாள்.

அதற்கும் அவன்,

" அடைத்து வைத்த நாணம் 

வெடித்துவிடாமல் காக்க

உருண்டு உருண்டு உழலும்

உன் விழிகள் உலுக்குகிறது 

என்னை "

என்று கவிதை படித்தான்.

அதற்கும் மேல் பொறுக்க மாட்டாதவளாய், 

" நான் ரெஸ்ட் ரூம் போய்ட்டு வரேன் " என்று தப்பிக்கப் பார்த்தாள்.

" ஏன்? ஒரு ஓரமா போய் ஃப்ரீயா வெட்கப்பட்டுட்டு வரலாம்னு பாக்கறியா?"

இவ்வாறு அவன் கேட்டதில் வெடித்து சிரித்துவிட்டாள் , வந்த நாணத்தை மறைக்காமல் முற்றிலும் அனுமதித்தவாறு.

அவன் இன்னும் விடாமல்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.