இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டு, அவருக்கு என்ன பதில், யார் சொல்வது என்று கண்ணாலே ஜாடையாக கேட்டுக்கொண்டனர்.
"பொம்பளை சமாசாரம், இதெல்லாம் உங்களுக்கு எதுக்கு?"
மாமியாரின் சமயோசித பதிலை, பூர்ணிமா வெகுவாக ரசித்தாள்.
மாமனார் வாய்விட்டு சிரித்தார்!
"ஏம்ப்பா! ஏன் சிரிக்கறீங்க? அம்மா சொன்னதிலே, சிரிக்கும்படியா என்ன இருக்கு? ........"
"பூர்ணிமா! அவளும் நானும் ஒண்ணா குடித்தனம் பண்ண ஆரம்பிச்சு, ஐம்பத்தேழு வருஷம் ஆயிடுத்து, அவ எப்ப உண்மையை சொல்றா, எப்ப பொய் சொல்றான்னு என்னால கண்டுபிடிக்கமுடியாதா? பார், அவ முகத்தை! திருதிருன்னு முழிக்கறா, பூர்ணிமா! அவளுக்கு இத்தனை நாளிலே பொய் சொல்லவேண்டிய நிலமை வந்ததேயில்லை, புதுசா அவ பொய் பேசறதனாலே, முகத்திலே அசடு வழியுது பாரு!"
சொ
...
This story is now available on Chillzee KiMo.
...
ரத்தை ஒப்படைத்துவிட்டு, சிறிதுநேரம் பூர்ணிமா கண் அயர்ந்து தூங்கினாள்.
"பூர்ணிமா! உடம்பு சரியில்லையா, இவ்வளவு நேரம் நீ தூங்கினதேயில்லையே, எழுந்திரு! இந்தா, காபி! குடிச்சிட்டு, வேலையைப் பார், நாங்க கோவிலுக்கு கிளம்பறோம்....."
திடுக்கிட்டு, பூர்ணிமா கண்விழித்தாள், எதிரே, அம்மா!